திங்கள், 21 செப்டம்பர், 2009

குடியமர்த்தத் தாமதமானால் கடும் விளைவுகள் ஏற்படும்: இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை



கொழும்பு, செப். 20: தமிழர்களை அகதி முகாம்களில் இருந்து அவரவர் ஊர்களில் குடியமர்த்தத் தாமதமானால் தெற்காசியாவில் ஸ்திரமற்ற நிலையை அது ஏற்படுத்திவிடும் என்று இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததன் பிறகு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் முள் கம்பி வேலி அமைக்கப்பட்ட முகாம்களுக்குள் கால்நடைகளைப் போல அடைக்கப்பட்டிருப்பதையும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி இதனால் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்களிடையே ஏற்பட்டுவரும் கொதிப்புகளைச் சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு. கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் மூலம் சில குறிப்புகளை அளித்திருந்தார். நிலைமை கையை மீறிச் செல்வதற்குள் தமிழர்கள் கெüரவமாக அவரவர் ஊர்களில் சென்று குடியேறவும் தொழில்களில் ஈடுபடவும் இலங்கை அரசு அனுமதிக்காவிட்டால் பெரிய கொந்தளிப்பு ஏற்படும் என்று அதில் உணர்த்தப்பட்டிருந்தது. இதைப் படித்த பிரதமர் மன்மோகன் சிங் உடனே இலங்கை அரசை எச்சரிக்கும் பணியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனிடம் ஒப்படைத்தார். அவரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கே கடிதம் எழுதி, தமிழர்களின் அவல நிலை நீடிப்பது நல்லதல்ல என்று உரிய வகையில் எச்சரித்தார். கடந்த வாரத்தின் தொடக்கத்தில் கொழும்பில் அதிபர் மகிந்த ராஜபட்சவைச் சந்தித்த இந்தியத் தூதர் அலோக் பிரசாத், தமிழர்களை அவரவர் ஊர்களில் உடனே குடியமர்த்த வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளை நேரில் அளித்திருந்தார். இத் தகவல்களை இலங்கையின் ""தி சண்டே டைம்ஸ்'' என்ற நாளேடு தெரிவிக்கிறது. இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்துவதும், மறு வாழ்வு அளிப்பதும் இலங்கையின் உள் விவகாரம் என்று விட்டுவிட இந்தியா தயாராக இல்லை என்பதையும் தமிழ்நாட்டு மக்களும் அரசும் தரும் அழுத்தத்துக்கு இந்திய அரசும் அதன் மூலம் இலங்கை அரசும் கட்டுப்பட்டவையே என்பதையும் இப்பத்திரிகைச் செய்தி படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. உடனடி நடவடிக்கை: தயாநிதி மாறன் அளித்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை அழைத்து அதிபர் மகிந்த ராஜபட்சவிடம் இந்தியாவின் உணர்வுகளை அப்படியே தெரிவிக்குமாறு கூறியிருந்தார். அதன் விளைவாக கொழும்பில் இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளும் அமைச்சர்களும் அவசரமாகக் கூடி தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர். அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போது பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதற்கான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர் என்று தெரிகிறது. ஐ.நா. அதிகாரி ஆய்வு: மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் அகதி முகாம்களில் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான சார்புச் செயலர் லின் பாஸ்கோ கடந்த வாரம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தமிழர்கள் உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் மிகவும் புண்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு வருந்தினார். தமிழர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணங்களாக இலங்கை அரசு கூறிய தகவல்களை அவர் ஒப்புக்கொண்டதைப் போலத் தெரியவில்லை. எனவே வரும் ஜனவரிக்குள் அனைவரும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கண்ணி வெடிகளை அகற்றாமல் தமிழர்களை அவரவர் பகுதிகளுக்கு அனுப்பிவைக்க முடியாது என்ற வாதத்தை தமிழர்கள்பால் இலங்கை அரசுக்கு உள்ள அக்கறையைக் காட்டுவதாகவே கொண்டாலும், முகாம்களில் இருப்பவர்கள் வெளியே வேலைக்குச் செல்வதற்குக்கூட அனுமதி மறுப்பது சரியா என்று லின் பாஸ்கோ கேட்டார். இனி அதிக அளவில் மக்கள் வெளியே சென்றுவர பாஸ்களைத் தருவதாக இலங்கை அரசின் சார்பில் அப்போது உறுதி கூறப்பட்டது. வீடுகளுக்குப் போகவில்லை? ராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த முகாம்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்ட தமிழர்கள் அரசு அறிவித்தபடி அவரவர் வீடுகளுக்கு இன்னமும் போய்ச் சேரவில்லை என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. வவுனியா முகாம்களிலிருந்து செப்டம்பர் 15-ம் தேதி 2,000 தமிழ் அகதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு இப்போது வேறு எங்கோ சிறை வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண முகாமிலிருந்து 568 தமிழ் அகதிகள் செப்டம்பர் 11-ம் தேதி அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களும் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கைத்தடி என்ற இடத்தில் பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் மீண்டும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 1,706 அகதிகளும் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சேராமல் வழியில் எங்கோ தடுத்து காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை அரசும் ராணுவமும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன என்று மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பு அலுவலகமே கூறுகிறது. முகாம்களிலிருந்து நாங்கள் அனுப்பிவிட்டோம், மாவட்ட அதிகாரிகள்தான் தமிழர்களைத் தடுத்து நிறுத்திவைத்துள்ளனர் என்று முகாம் அதிகாரிகள் பழியை அவர்கள் மீது போடுகின்றனர். உறவினருடன் வசிக்க மனு: முகாம்களில் இருப்பவர்கள் விரும்பினால் வீடுகளில் வசிக்கும் தங்களுடைய உறவினர்களுடன் போய்ச் சேர்ந்து வாழலாம் என்று கூறப்பட்டது. அதற்காக மனுக்களும் தரப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி மனுச் செய்ய விரும்பியவர்களுக்கு மனுக்கள் கூட தரப்படவில்லை. மனுக்கள் கிடைத்து விண்ணப்பித்தவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதற்காக அவர்கள் அகதிகள் முகாம் அலுவலகங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் கூட ஈடுபட்டனர். உண்மை இப்படி இருக்க, ஐ.நா. அதிகாரி லின் பாஸ்கோவிடம் அதிபர் மகிந்த ராஜபட்ச பேசும்போது, உறவினர்களுடன் போங்கள் என்று கூறி விண்ணப்பங்களை முகாம் அலுவலகத்தில் வைத்திருந்தும் தமிழர்கள் அவற்றை வாங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர் என்று கூசாமல் கூறியிருக்கிறார்.

கருத்துக்கள்

முதலில் குறிப்பிட்ட செய்தி சரிதான். அவர் ஏன் தமிழ்ப்பகைவர்கள் போல் வேறு பெயரில் அல்லது பெயரில்லாமல் எழுத வேண்டும்? தமிழினப் பேரழிவுச் செயல்களுக்கு வழிகாட்ட நேரில் பல முறை சென்ற நாராயணன், தமிழர்களை முகாம்களில் இருந்து மீட்பதற்காக மடல அனுப்புகிறார் என்றால் சிங்களம் சிரித்துக் கொண்டு வழக்கம்போல் கொடுஞ் செயல்களைக் கோலோச்சிக் கொண்டிருக்கும். விடுதலை செய்வதாகச் சொல்லிப் பின்னர் சுட்டுத் தள்ளுவது இந்தியக் காவல் துறையின் வேலை. வீட்டிற்கு அனுப்புவதாகக் கூறி மறுவதை முகாமில் அடைத்து மேலும் கொடுமை புரிவதும் உடல் உறுப்புகளைப் பறிப்பதும் உயிர் எடுப்பதும் சிங்களப் படையின் வேலை. இதை மீறி ஒன்றிரண்டு நாடகம் நடந்தால் அதற்குத் தாங்கள்தான் காரணம் என மார்தட்டுவதற்காகத் திமுகத்தலைமையும் காங்.கும் போடும் நாடகம் மக்களிடம் எடுபடாது. தெற்காசியாவில் எத்தகைய நிலை இருந்தால் சிங்களத்திற்கு என்ன கவலை. உலக வரை படத்தில் சிங்களம் இருக்காது என்று எச்சரிக்கும் துணிவு இந்தியாவிற்கு இருக்கிறதா?

... இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/21/2009 2:34:00 AM

Manmohan, Karunanidhi- keep your mouth shut. You are the cause of the problem, and not the solution. Already UN has taken up the the issue. After the whole world has turned against SL, where is the need for this Punjabi to talk about it? India is the cause of the problem for which a big price will be paid by it. China, Pakistan,and other countries around India are aiming at it. Narayanan or Menons are not able to take action against China. All they say is that China's intrusion into the parts claimed by India as its own is not a serious problem. India's sovereignity is challenged. If this is not serious, what else is?

By anonymous
9/21/2009 12:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக