திங்கள், 21 செப்டம்பர், 2009

கேரளம் புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்: கே.வீ.தங்கபாலு



மதுரை, செப். 20: முல்லைப் பெரியாறில் கேரளம் புதிய அணை கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: முல்லைப் பெரியாறு அணையில் பூர்வாங்க ஆய்வு மேற்கொள்ளத்தான் கேரள மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அங்கு புதிய அணை கட்டுவதற்கு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை. புதிய அணை கட்டுவதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. இது விஷயத்தில் தமிழக காங்கிரஸýம், தமிழக அரசும் ஒரே நிலையில் இருக்கின்றன. இலங்கைப் பிரச்னை: பிரதமரிடம் நாளை மீண்டும் வலியுறுத்துவோம்- இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் மத்திய அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவியாக மத்திய அரசு ரூ.500 கோடி கொடுத்துள்ளது. இது தவிர மாநில அரசும் நிவாரண உதவி வழங்கியுள்ளது. இலங்கையில் தமிழர் நலன் காக்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் ராஜபட்ச, ஏற்கெனவே பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்துள்ளார். எனினும் இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்கள் வாழும் பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்று எனது தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்களும், திமுக எம்.பி.க்களும் செப்டம்பர் 22-ல் தில்லியில் பிரதமரை நேரில் சந்தித்து மீண்டும் வலியுறுத்த உள்ளோம் என்றார்.
-------------------------
உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் மீது பரிவு இருப்பின், தமிழகப் பேராயக் கட்சியான காங்.ஐக் கலைத்து விடுங்கள். அதுவே எப்பணியிலும் முதற்பணியாய் வேண்டப்படுவது. வேறு எல்லாமே ஆதாயத்திற்கான நாடகமே என்பது அனைவருக்கும் தெரியும்.











































































-- இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக