புதன், 23 செப்டம்பர், 2009

கனடாவில் உள்ள சிறார்கள் மடல் எழுதும் போராட்டம் நடாத்தவுள்ளனர்

22 September, 2009 by admin

தடுப்புமுகாம்களில் தவிக்கும் மக்களுக்காக சிறார்களின் மடல் வரையும் போராட்டம்

ஈழத்தைத் தாயகமாகக் கொண்டு, புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் தமிழ்ச் சிறார்களாலும் பெற்றோர்களாலும் தாயகத்தில் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் துயரங்களை துடைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்கக்கோரி, எதிர்வரும் சனிக்கிழமையன்று (26 புரட்டாதி 2009) சிறுவர்களால் உலகத் தலைவர்களுக்கு மடல் வரையும் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

தாயக மக்கள் மீதான படுகொலைகளை நிறுத்தச் சொல்லி கனடாவில் நடாத்தப்பட்ட பேரணிகளிலும், வீதி மறியலிலும், ஈடுபட்டு ஒன்றிணைந்த பெற்றோர்களாலும் சிறுவர்களாலும், சர்வதேச மன்னிப்புச்சபையின் (Amnesty International) கனேடியப் பிரிவின் அனுசரணையுடன் இந்நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கிறது. இந்நிகழ்வில் பங்குபற்றும் சிறுவர்களால் தாயக மக்களிற்கு சுபீட்ச வாழ்வினை விரைவினில் ஏற்படுத்தித் தரும்படி வேண்டி உலகத்தலைவர்களுக்கு வரையப்படும் மடல்கள் சர்வதேச மன்னிப்புச் சபையினூடாக அத்தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

இந்நிகழ்வானது கனடா கந்தசாமி கோவிலில் (733 Birchmount Road, Scarborough, ON, Canada.) காலை 12:00 மணிக்கு ஆரம்பமாகிறது. தடுப்பு முகாம்களில் வாடும் தாயக மக்களின் இன்னல் தீர்ப்பதற்காக, கனடாவில் வசிக்கும் அனைத்துத் தமிழ்ச் சிறுவர்களையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

சிறார்களின் இப்போராட்டம் வெற்றியடைய அதிர்வு இணையமும் வாழ்த்துகிறது.

மேலதிக தொடர்புகட்கு 647-863-2803 அல்லது letterwritingevent@gmail.com







Posted By : Ilakkuvanar Thiruvalluvan on 22 September, 2009
Comments : நல்ல முயற்சி. சிறாருக்கும் ஏற்பாட்டா­ளருக்கும்­ பாராட்டுகள். வாய் பொத்தி செவி மூடி உறங்கும உலகம் விழிக்கும வரை இதுபோன்ற போராட்ட
ங்கள் தொடரட்டும்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நல்லுறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Posted By : Guest on 22 September, 2009
Comments : Well done kids , Canada Tamils are great

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக