திங்கள், 21 செப்டம்பர், 2009

விபத்தில் கருணா காயம்



கொழும்பு, செப். 20: விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தற்போதைய இலங்கை அமைச்சருமான கருணா ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் லேசான காயம் அடைந்தார். கொழும்பில் அவர் சென்ற கார் மீது எதிரே வந்த பஸ் மோதியது. இதில் லேசான காயமடைந்த கருணா உடனடியாக வீடு திரும்பினார். இந்த விபத்தில் மேலும் இருவர் லேசான காயமடைந்தனர். புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த கருணா, பிரபாகரனுடனான கருத்து வேறுபாடு காரணமாக புலிகள் அமைப்பிலிருந்து விலகினார். ராஜபட்ச தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்த அவர் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். கடந்த மார்ச்சில் அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

கருத்துக்கள்

பேராசை கொண்ட கருணா தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்து பிழைப்பதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறினார் எனக் குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும்.

..இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvlluvan
9/21/2009 2:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக