சென்னை, செப். 22 ""இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும்'' என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ""இலங்கைத் தமிழர்களின் ஆடைகளை அகற்றி, நிர்வாணமாக்கி, ஈவு இரக்கமின்றி, சீருடை அணிந்த இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுடுகின்ற காட்சிகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. செல்போன் மூலம் ராணுவ வீரரால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோரமான விடியோ படக் காட்சி, இலங்கையில் மக்களுக்கு விடுதலை உரிமை இல்லை என்பது, அங்குள்ள தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமான கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்ற என்னுடைய கருத்துக்கு வலுசேர்ப்பதாக உள்ளது. வியப்பு அளிக்கிறது... இலங்கை அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய அரசுக்கோ அல்லது தமிழக அரசுக்கோ ஏற்படாதது வியப்பை அளிக்கிறது. இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக அந்த நாட்டு அரசு தெரிவிக்கின்றது. மனித தன்மையை வேண்டுமென்றே காலால் போட்டு மிதிக்கக்கூடிய இதுபோன்ற ஒட்டுமொத்த கொடுமையை எந்த ஜனநாயகமும் அனுமதிக்கவில்லை. கடுமையான விமர்சனம்... தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவது என்ற பாதையிலிருந்து விலகி, தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறி தனது அரசியல் எதிரிகளை அழித்து தீவிரவாத இயக்கமாக விடுதலைப் புலிகள் இயக்கம் மாறியது. அன்றிலிருந்து அந்த இயக்கத்தைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றேன். இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பப்படும் காட்சிகளில் வருபவர்கள் விடுதலைப் புலிகளாக இருந்தாலும், வழக்கு விசாரணை இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது காட்டுமிராண்டித்தனமானது. போரின்போது சிறைபிடிக்கப்பட்டவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது. இலங்கையில் நிகழ்த்தப்படும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் குறித்து சிறிய அளவிலாவது திமுக குரல் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கொடுமையை இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும். அவர்களது வாழ்க்கையை, மதிப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். சர்வதேச அரங்கில்: தமிழர்கள் மீதான மனித உரிமை மீறலை சர்வதேச அமைப்புகளில் எழுப்பி, இலங்கை அரசு அங்குள்ள தமிழர்களை கௌரவத்துடன் நடத்த வேண்டும். இல்லாவிட்டால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அனைத்து நாடுகளும் நிர்பந்திக்கும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இலங்கையில் நடைபெறும் கொடூரமான சமூக தன்னுரிமை மீறல்களுக்கு எதிராக ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும்'' என்றார்.
By Ilakkuvanar Thiruvalluvan
9/23/2009 3:06:00 AM
By prema
9/23/2009 12:16:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*