தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக் கழகம்
தமிழுக்கு வளம் சேர்த்த ஐரோப்பியத் தமிழறிஞர்கள்
இதழரங்கம்
சமயம் பரப்ப வந்தாலும் தமிழைப் பரப்பியவர்கள் ஐரோப்பியத் தமிழறிஞர்கள். தமிழுக்கு வளம் சேர்த்த அவர்களின் தொண்டு அளவிடற்கரியது. நிறைகுறைகளைக் காய்தல் உவத்தலின்றி ஆராயாமல் அறிஞர் பெருமக்களைக் குறைகூறுவோர் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர் முதலாகப் பலரும் உள்ளனர். எனவே ஐரோப்பியத் தமிழறிஞர்கள் குறித்த இதழ்வழிக் கருத்தரங்கத்தைத் தமிழ்க்காப்புக் கழகம் நடத்துகிறது.
ஐரோப்பியத் தமிழறிஞர் ஒருவரைப்பற்றியோ சிலரைப்பற்றியோ பலரைப்பற்றியோ அனைவரைப்பற்றியோ கட்டுரைகள் அனுப்பலாம்.
ஒருவரே வெவ்வேறு அறிஞர்கள் குறித்த வெவ்வேறு கட்டுரை அனுப்பலாம்.
பக்க வரையறை: குறைந்தது 4 பக்க அளவில்; கூடுதல் வரம்பு இல்லை.
கிரந்த எழுத்துகளையும் அயற்சொற்களையும் தவிர்த்துக் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். அயற்சொற்களையோ அயற்பெயர்களையோ குறிப்பிடுகையில் அடைப்பிற்குள் ஆங்கிலத்தில் குறிப்பிடுதல் நன்று.)
தவறான கருத்துகளுக்கு மறுப்புரை அமையலாம். ஆனால், தாக்குரை அமையக்கூடாது.
கூறியது கூறலைத் தவிர்ப்பதற்காக இவ்விதழ்அரங்கத்தில் பங்கேற்போர்
தங்களின் பெயர்
கட்டுரைத் தலைப்பு
கட்டுரையில் இடம் பெறும் அறிஞர்கள் பெயர்கள்
முகவரி
மின்வரி
பேசி எண்
ஆகிய விவரங்களை
இவ்வாண்டுச் சித்திரை 18/மே முதல் நாளுக்குள் தெரிவிக்க வேண்டுகிறோம்.
கட்டுரைகளை வைகாசி 17/30.05.2024 ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டுகிறோம்.
சிறந்த கட்டுரைகளை வழங்கும் ஐவருக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பெறும். பங்கேற்பாளர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பெறும்.
கட்டுரைகளுக்கான கலந்துரையாடல் எழுத்தாடலாக நடைபெறும். கருத்து பகர்வோர் குறிப்புரைகளும் தொடர்ந்து இடம் பெறும்.
கட்டுரைத் தொகுப்பு நூலாக வெளியிடப்பெறும். ஆதலின் அவரவர் கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படத்தையும் அனுப்ப வேண்டுகிறோம்.
பங்கேற்பு இசைவையும் கட்டுரையையும் அனுப்ப வேண்டிய மின்வரி:
madal.akaramuthala@gmail.com
தலைவர்
தமிழ்க்காப்புக்கழகம்
தொடர்பு எண்கள் : தலைவர் 98844 81652 ; செயலர் : 80565 62267
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக