ஐந்தாவது திருக்குறள் மாநாடு
பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024
சிகாகோ
நூற்பதிவு நாள் நீட்டிப்பு
அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு
வணக்கம்.
மேற்குறித்தவாறான திருக்குறள் மாநாட்டில் புதியதாகத் திருக்குறள் நூல் படைப்பாளர்களுக்கு வெளியீட்டு நிகழ்ச்சியும் முன்னரே திருக்குறள் தொடர்பான நூல் வெளியிட்டர்களுக்கு நூலறிமுக நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் உரிய பதிவை 30.11.23 ஆம் நாளுக்குள் மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தோம்.
தத்தம் பெயர், நூற்பெயர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மாநாட்டுச் செய்திகளுக்கான தளம் : https://thirukkuralconference.org
எனவும் தெரிவித்துஇருந்தோம்.
பலரும் ஆர்வத்துடன் பங்கேற்பதாகத் தெரிவித்தும் சிலர்தான் பதிவிற்கான விவரங்களைத் தெரிவித்துள்ளனர். பங்கேற்பு ஆர்வலர்கள்
நவமபருக்குள் நூலை அச்சிடமுடியவில்லை எனத் தெரிவிக்கின்றனர். அறிக்கையைத் தவறாகப் புரிந்து கொண்டதால் இங்ஙனம் கருதுகின்றனர்.
பழைய நூல்களாயின் வரும் மாசி 29, 2055 / மார்ச்சு 12, 2024 ஆம் நாளுக்குள்ளும்
புதிய நூல்களாயின் வரும் பங்குனி 13, 2055 / மார்ச்சு 26, 2024 ஆம் நாளுக்குள்ளும் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்
எனப் போதிய கால வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பதிவுதான் நவம்பர் 30 ஆம் நாளுக்குள் மேற்கொள்ள வேண்டும்.
எனவே, பதிவு நாளை கார்த்திகை 29, 2054 / 15.12.2023 வரை நீட்டித்துள்ளோம். நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
thirunool50@gmail.com மின்வரிக்கு நூல் பெயர், நூலாசிரியர் பெயர் தொடர்பான விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
பொறுப்பாளர் , நூலரங்கம்
ஐந்தாவது திருக்குறள் மாநாடு
‘குறள்நெறி ஓங்கின் குடியரசு ஓங்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக