திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் உறைவகத்தில்(ஓட்டலில்) மே 18, 2022 மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
விழாவில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், அமைச்சர்கள் அன்பில் மகேசு பொய்யாமொழி, மனோ தங்கராசு, நாகர்கோவில் மாநகரத் துணைத் தலைவர் மேரி பிரின்சி இலதா, வழக்குரைஞர் இராசீவுகாந்தி, முனைவர் அருட்பணி எசு.தனிசுலால், ஐயா பாலபிரசாபதி அடிகளார், முனைவர் ஆனந்து முதலானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ‘கலகக்காரன்’ என்னும் காணொளிப் பாடல் வெளியிடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக