மூன்று நாள் இணையவழி வாசகர் மாநாடு : ‘நூல், நூலகம் மற்றும் சமூகம்’
ஆடி 15, 2051 – ஆடி 17, 2051
30.07.2020 (வியாழக்கிழமை) முதல்
01.08.2020 (சனிக்கிழமை) வரை
கோவில்பட்டி, தேசியப் பொறியியல் கல்லூரி, வாசகர் பூங்கா, நூலகம், தகவல் அறிவியல் மேம்பாட்டு அமைப்பு, நூலகம் பேசுகிறது ஆகியவை இணைந்து ‘நூல், நூலகம் – குமுகம்’ என்னும் மூன்று நாட்கள் இணையவழி வாசகர் மாநாடு வருகின்ற ஆடி 15, 2051 – ஆடி 17, 2051 / 30.07.2020 (வியாழக்கிழமை) முதல் 01.08.2020 (சனிக்கிழமை) வரை மிகவும் சிறப்பாக நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
முதலாம் நாள் 30.07.2020, வியாழக்கிழமை மாலை 06.00 மணிக்கு ‘வாசிப்போம் வாருங்கள்‘ என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
இரண்டாம் நாள் 31.07.2020 வெள்ளிக்கிழமை, மாலை 06.00 மணிக்கு ‘உலகை வசமாக்கும் வாசிப்பு‘ என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் பேசும் பூங்காற்று திருமதி.கவிதா சவகர் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
மூன்றாம் நாள் 01.08.2020 சனிக்கிழமை, மாலை 06.00 மணிக்கு ‘உடல் நலம் – மன நலம்‘ என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் ‘சித்த மருத்துவர் கு.சிவராமன்‘ அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
பதிவுக் கட்டணம் கிடையாது
[ பதிவிற்கு : https://bit.ly/necvaasakarmaanaadu2020
Webinar Link : https://www.gotomeet.me/SALIS-Webinars Access Code: 618-892-365
You tube live link: https://youtu.be/CVYdrfJtAAc
இம்மாநாட்டில் கல்லூரிப் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள்.பொதுமக்கள் என அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் தொடர்புக்கு:
முனைவர் கே. கருணை ராகவன்
9444 885083, 91765 76503 readerspark@nec.edu.in ]
குறிப்பு : மாநாட்டில் மூன்று நாட்களும் கலந்து கொண்டு, ஒவ்வொரு நாளின் நிறைவில் வழங்கப்படும் மதீப்பீட்டுப் படிவத்தினை அளிக்கும் பங்கேற்பாளர்களுக்கு, மின் சான்றிதழ் அவர்களின் மின் அஞ்சல் முகவரிக்கு 8/07/2020 ஆம் நாளுக்குள் அனுப்பப்படும்.
முனைவர் கே.கருணை இராகவன்
நூலகர், தேசியப்பொறியியல் கல்லூரி
கே.ஆர.நகர்,கோவில்பட்டி 628503
பேசி 9176576503, 9444885083
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக