திராவிட இயக்க வைர விழுது, தன்மானப் போராளி சு.இரா.இராமச்சந்திரனாரின் இளைய மகன் சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் (எ) சின்னத்தம்பி தம்முடைய 93ஆம் அகவையில் இன்று (தை 23, 2050 / 06.02.2019) வைகறை 2.15 மணிக்கு இயற்கை எய்தினார்.
ஏழை எளியவர்களுக்கு உதவி மகிழும் அவர் வாழும்பொழுதே தன் கண்களில் ஒன்றைத் தானமாகக் கொடுக்க மருத்துவர்களை நாடினார். வாழ்பவர் கண்ணைத் தானமாகப் பெறச் சட்டத்தில் இடமில்லை என மருத்துவர்கள் மறுத்து விட்டனர். பின் மறைவிற்குப் பின்னான கண் தான விருப்பத்தையும் உடல் கொடை விருப்பத்தையும் அளித்துள்ளார். அவரது விருப்பம் நிறைவேற்றப்படும் என அவரின் மகள் திருவாட்டி அன்புச்செல்வி திருவள்ளுவன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக