மொழிபெயர்ப்பு அறிஞர் பாவலர் தங்கப்பா மறைவு
[மாசி 25, 1965 / 08.03.1934 – மாசி 17, 2049 / 31.05.2018]
மொழி பெயர்ப்பிலும் மொழி ஆக்கத்திலும் வல்லவரான தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா இன்று (மே 31,2018)வைகறைக்கு முன்னரே – நேற்று இரவு 01.30 மணிக்கு – இயற்கை எய்தினார். நலக்குறைவால் சில நாள் முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று முதல் நாள் வீடு திரும்பினார். ஆனால், மூச்சுத் திணறலால் காலமானார்.
‘வானகம், எண் 7, 11 ஆவது குறுக்குத் தெரு, ஒளவை நகர், புதுச்சேரி- 8′ இல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கண்தானமும் உடற்கொடையும் அளித்துள்ளமையால் அவரது உடல் இன்றுமாலை 4.00 மணிக்குச் சமேமஆநி (சவகர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி-ஆராய்ச்சி நிறுவனத்திற்கு – JIPMER -) க்கு அளிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக