புதன், 31 மே, 2017

சாந்தி மோகன்ராசு மறைவு!

சாந்தி மோகன்ராசு மறைவு!

  உலகத் திருக்குறள் ஆய்வு மைய நிறுவனர் பேரா.கு.மோகனராசு துணைவியார் திருவாட்டி சாந்தி அம்மையார் இன்று (வைகாசி 17, 2048 / மே 31, 2017) காலை 5.00மணி அளவில் இயற்கை எய்தினார்.

  சாந்தி அம்மையார் உலகத் திருக்குறள் மையத்தின் நிறுவனத் தலைவராகவும் மேலாண்மை இயக்குநராகவும்  திருக்குறள் தூதுவராகவும் இருந்துள்ளார்; பத்துக்கும் மேற்பட்ட மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுரைகள் வழங்கியுள்ளார்; உலகத்திருக்குறள் மையத்தின் ' கிராமஙு்களில் திருக்குறள் கருத்துவிளக்கப் பயணங்கள் திட்டத்தில்   20  நாள் பங்கேற்று விருதுகள் பெற்றுள்ளார்.

 ஒற்றுமை ஒளி, ஒன்றே உலகம், திருவள்ளுவர் அணி, திருக்குறளியர் அணி ஆகிய  இதழ்களின் ஆசிரியர்; 5 நூல்களின ஆசிரியர்;  5  நூல்களின் தொகுப்பாசிரியர் என்னும் சிறப்புகளுக்குரியவர்.

  இவர்  தமிழக அரசின் திருக்குறள்  நெறித் தோன்றல் விருதினையும்  பிற அமைப்புகளின் 7 திருக்குறள் விருதுகளையும் பெற்றுள்ளார்.

பிறருக்கு எடுத்துக்காட்டாகத் தம் இல்ல நிகழ்ச்சிகள் யாவற்றையும் குறள்நெறிப்படியே நடத்தி அருவினை புரிந்துள்ளார்.

அம்மையாரின் நல்லடக்கம் நாளை மாலை 5.00 மணியளவில் நடைபெறும்.

தொடர்பிற்கு:
முனைவர் கு.மோகன்ராசு
21 / 42,   செரியன் நகர் முதல் தெரு,
 புது வண்ணாரப்பேட்டை, சென்னை 600 081
பேசி : 9382183043

அம்மையார் குடும்பத்தினருக்கும் சுற்றத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கலை அகரமுதல இதழினரும், இலக்குவனார் இலக்கிய இணையத்தினரும் தமிழ்க்காப்புக்கழகத்தினரும் தெரிவிக்கின்றனர்.