திங்கள், 24 ஏப்ரல், 2017

வைதேகி எர்பர்ட்டு, செல்வமுரளி ஆகியோருக்குத் தமிழக அரசின் விருதுகள்! மாணவர் மன்றத்திற்குத் தமிழ்த்தாய் விருது!

 
                              (வைதேகி எர்பர்ட்டு)

                                (ந. மணிமொழியன்)

 (செல்வமுரளி)


 2016ஆம் ஆண்டிற்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகள், 2015ஆம் ஆண்டிற்கானத் தமிழ் செம்மல் விருது ஆகிய விருதுகளுக்கான விருதாளர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

 தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 2016ஆம் ஆண்டிற்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகள், 2015ஆம் ஆண்டிற்கானத் தமிழ் செம்மல் விருது ஆகிய விருதுகளுக்கான விருதாளர்கள் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 2016ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான மாணவர் மன்றத்திற்கும் கபிலர் விருது முனைவர் இல.க. அக்னிபுத்திரன், உ.வே.சா விருது முதுமுனைவர் ம.அ. வேங்கடகிருட்டிணன், கம்பர் விருது இலங்கை  செயராசு , சொல்லின் செல்வர் விருது பி. மணிகண்டன்,  சி.(இ)யு..போப்பு விருது வைதேகி  எர்பர்ட்டு, உமறுப்புலவர் விருதுபேராசிரியர் முனைவர் அப்துல் காதர், இளங்கோவடிகள் விருது நா. நஞ்சுண்டன், அம்மா இலக்கிய விருது  அம்சா தனகோபால், மொழிபெயர்ப்பாளர் விருது நாகலட்சுமி சண்முகம், முனைவர் அ. சாகிர் உசேன், அல்லா பிச்சை (எ) முகம்மது பரிட்டா, உமா பாலு, முனைவர் கா.செல்லப்பன், வி. சைதன்யா, முருகேசன், பால சுப்பிரமணியன், ஆறுமுகம்(பிள்ளை), முனைவர் கே.எசு. சுப்பிரமணியன்   ஆகியோருக்கும் 2015ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது முரளி (எ) செல்வ முரளிக்கும் வழங்கப்படுகிறது.

 விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக உரூபாய் 1 இலட்சமும், 1 சவரன் தங்கப் பதக்கமும், தகுதிச்சான்றும் பொன்னாடையும் வழங்கப்படும். தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்பிற்கு விருதுத் தொகையாக  உரூபாய் 5 இலட்சமும், கேடயம், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

 2015ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் என்ற வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சென்னை வேம்பத்தூர் (எம்) கிருட்டினன், திருவள்ளுர் முனைவர் மா.கி. இரமணன், காஞ்சிபுரம் கூ.மு. துரை (எ) கவிஞர் கூரம் துரை, வேலூர் .வி. பத்மநாபன் (எ) புலவர் வே. பதுமனார், கிருட்டினகிரி ந. நாகராசன், திருவண்ணாமலை பா.இந்திரராசன், விழுப்புரம் கவிஞர் பெ. ஆராவமுதன், கடலூர் முனைவர் அரங்க. பாரி, பெரம்பலூர் செ. சுந்தரம் (எ) வெண்பாவூர் செ. சுந்தரம், அரியலூர் ம. சோ. விக்டர், சேலம் கவிஞர் பி. வேலுசாமி, தருமபுரி தகடூர். வனப்பிரியனார் என்கிற கா. இராமசந்திரன், நாமக்கல் புலவர் மா. சின்னு, ஈரோடு முனைவர் ச.சந்திரகுமாரி, கரூர் ச. வரதசிகாமணி, கோயம்புத்தூர் முனைவர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், திருப்பூர் ஆ. முருகநாதன், நீலகிரி மணி அர்ச்சுனன், திருச்சிராப்பள்ளி பேரா. தி.வெ. இராசேந்திரன், புதுக்கோட்டை ஞானாலயா பா. கிருட்டினமூர்த்தி, சிவகங்கை தி.அனந்தராமன், தஞ்சாவூர்புலவர் தங்கராசு, திருவாரூர் . வீ.இராமமூர்த்தி, நாகப்பட்டினம் .செ. செய்யது முகம்மது கலிபா சாகிப், இராமநாதபுரம் செகாதா, (விண்ணப்பத்தின்பின் மறைந்த) மதுரை திருக்குறள் செம்மல் ந. மணிமொழியன், திண்டுக்கல் மா. பெரியசாமி (எ) தமிழ்ப் பெரியசாமி, தேனி தமிழாசிரியர் ப. பாண்டியராசன், விருதுநகர் முனைவர் கா.இராமச்சந்திரன், திரு நெல்வேலி முனைவர்  நாயகர்(கேப்டன்) பா.வேலம்மாள், தூத்துக்குடி கா.அல்லிக்கண்ணன், கன்னியாகுமரி முனைவர் சிவ. பத்மநாபன்  என வழங்கப்படும்.

 தமிழ்ச்செம்மல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் 25,000/- பாராட்டுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.

 முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விருதாளர்களுக்கு  வரும் சித்திரை 12, /ஏப்பிரல் 25அன்று தலைமைச் செயலகத்தில் விருதுகளை வழங்குவார்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.