புதன், 22 மார்ச், 2017

சவூதி இரியாத்தில் நடைபெற்ற குடும்ப ஒன்று கூடல்




சவூதி இரியாத்தில் நடைபெற்ற குடும்ப ஒன்று கூடல்

சவூதி இரியாத்து நகரில் பரங்கிப்பேட்டை இசுலாமிய நல்வாழ்வுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பரங்கிப்பேட்டை குடும்பங்கள் ஒன்றுகூடல் நிகழ்வு 17 மார்ச்சு 2017 அன்று இசுதிராஃகா இலயாலைனா என்னும் மகிழகத்தில் மிகச் சிறப்பாக நிகழ்வுற்றது.
  இதில்  அகவை வாரியாக பிள்ளைகளுக்கான ஒப்பித்தல்(கிராஅத்து) போட்டிகள், பேச்சுப் போட்டி, இசுலாமிய வினாவிடை எழுத்துத் தேர்வு, ஆண்கள் பெண்களுக்கான இசுலாமிய எழுத்துத் தேர்வு ஆகிய அறிவுசார் போட்டிகளும், ஆண்களுக்கான  கால்பந்து,  மட்டைப்பந்தாட்டங்களும், மாற்றி எண்ணு(யோசி), ஊமை விளையாட்டு (Dumb Charades) போன்ற   சுவையான விளையாட்டுகளும் (இருபாலருக்கும் தனித்தனியாகச்) சிறப்பாக நடைபெற்றன.
  இசுலாமியக் குடும்பவியல் குறித்து   அண்ணல் கு. நிசாமுத்தீன்   வெள்ளி(சூம்ஆ ) உரை நிகழ்த்தி வெள்ளி(சூம்ஆ)த் தொழுகையும் அங்கேயே நடத்தி வைத்தார். அனைவருக்கும் சுவையான  நண்பகல் உணவு (புலால்), காலை மாலைத் தேநீர், மாலை நேர வடையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
  முன்னதாக, அமைப்பின் தலைவர் பஃக்ருத்தீன் இப்னு அம்துன் வரவேற்புரை ஆற்றினார். முத்தஃபா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
  விழாவுக்கான ஏற்பாடுகளைத் தலைவர் இப்னு  அம்துன், செயலாளர் காதர்மசுதான், பொருளாளர் தமீசுத்தீன், துணைத் தலைவர் சாஃபர் அலீ, இணைச் செயலாளர் செல்லராசா ஆகியோருடன் இணைந்து, முபாரக்கு, உசைன், நியாசு, முத்தஃபா,  அசன்அலீ ஆகியோரும் செய்திருந்தனர். மரைக்கச்சி, கு. நிசாமுத்தீன்,  இயூசுஃப் அலி, நூர்  சஃபர்  முதலான பல்வேறு  தொண்டர்களும் சிறப்பான களப்பணி செய்தனர்.
  குளிர்கால முடிவு நாளாகவும் வெய்யிற்காலத் தோற்றுவாயாகவும் இனிமையான காலநிலை நிலவிய நன்னாளின் நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் தலைவரின் நன்றி உரை அமைந்தது.
  பின்னர் வெற்றிபெற்ற அனைவருக்கும், அனைத்துச் சிறுவர் சிறுமியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு,  வேண்டல்(துஆ) ஓதப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக