தொல்காப்பிய ஓவியப்போட்டி – மொத்தப் பரிசு உரூபாய் 25,000
  கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்பிக்காடு என்னும் ஊரில் தொல்காப்பியருக்குச் சிலை எழுப்பப்பட்டுள்ளது. அச்சிலையைச் சுற்றி எண்மாடக்கூடமும் உச்சித்தளமுமாக 9 தளங்கள் கொண்ட தொல்காப்பியர் கோபுரம் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.
  சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் கல்வெட்டுகளாகவும் தொல்காப்பியர், தொல்காப்பியம்பற்றிய செய்திகளும் தொல்காப்பிய விளக்கப் படங்களும் அமைய உள்ளன.
எனவே,
தொல்காப்பியர் குறிப்பிடும் அறிவியல் செய்திகள்
தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாட்டுச்செய்திகள்
தொல்காப்பியர் குறிப்பிடும் அகத்திணைச் செய்திகள்
தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்திணைச் செய்திகள்
எனப் பல்வேறு  கருத்துகளை விளக்கும் ஓவியங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஓவியம் 12 அங்குலம் X 12 அங்குல அளவில் இருக்க வேண்டும்.
ஓவியம் கரிக்கோல், மைக்கோல் முதலான எவ்வவையாகவும் இருக்கலாம்.
ஓவியத்தின் பின்புறம் வரைந்தவர் பெயர், கருத்திற்கு உதவியவர் பெயர்,  தொலைபேசி எண், முகவரி விவரங்கள் இடம் பெற வேண்டும்.
ஒருவரே எத்தனைப் படங்களும் அனுப்பலாம்.
சிறந்த 25 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வோர் ஓவியத்திற்கும்  உரூபாய் ஆயிரம் பரிசளிக்கப்படும்.
ஓவியர்கள் தொல்காப்பியம் அறிந்த புலவர்களின் கருத்துரை பெற்று ஓவியக்காட்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டப்படுகின்றனர்.
படத்தின்  கீழே ஓவியத்திற்கான தொல்காப்பிய நூற்பா இடம் பெற வேண்டும்.
பங்குபெற்ற அனைவரும் தொல்காப்பியர் கோபுரம்  அடிக்கல் நாட்டு விழாவின் பொழுது சிறப்பிக்கப்பெறுவர்.
ஓவியங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்
23 எச்., ஓட்டேரிச்சாலை, புழுதிவாக்கம், சென்னை 600 091
பேசி 9884481652

ஓவியங்களை வரும் 

மாசி 01 /  பிப்பிரவரி 13 ஆம் நாளுக்குள்

அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.

இங்ஙனம்
புலவர் த.சுந்தரராசன், செயலர், தலைநகரத்தமிழ்ச்சங்கம்
மு.மீனாட்சிசுந்தரம், செயல்தலைவர்,
 அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப்பேரவை
 ஆகியோர் அறிவிக்கின்றனர்