மாவீரர்நாள், உ.த.பே.01 ; maaveerarnaal_u-tha-pe01

உலகத் தமிழர் பேரவை சார்பில்  மாவீரர்களுக்கு வீர வணக்கம்

உலகத் தமிழர் பேரவை சார்பில் தமிழ் இனத்திற்காகவும்மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது!
  உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், தங்கள் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகம் செய்தோரை நினைக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வகையில் (கார்த்திகை 12, 2047/27.11016 காலை 11 மணியளவில்,)  சென்னையில் அண்ணா சாலையில் உள்ள உலகத் தமிழர் பேரவையின் அலுவலகத்தில் தமிழறிஞர் அரு. கோபாலன் தலைமையில் உறுதி மொழியும், உரையும் நிகழ்த்தப்பட்ட.
 ஈகை புரிந்த அந்த மாவீரர்களுக்கு இறுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
 இந்நிகழ்வுக்கு, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்கினி, பட்டயக் கணக்கர் திரு. கோபி நாராயணன், திரு. தனஞ்செயன், திரு. சந்திர மோகன், திரு. சூபிடர் இரவி, அலுவலகப் பொறுப்பாளர்கள் செல்வி வாசுகி, ஆனந்தி இன்னும் பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மதுரை மாவட்டக் கிளையின் சார்பாக மாவீரர் நாள் அஞ்சலி!
உலகத் தமிழர் பேரவையின் தமிழ் வளர்த்த மதுரையில், மதுரை மாவட்டக் கிளையின் சார்பாக மாவீரர் நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்குப் பேரவையின் மதுரைப் பொறுப்பாளர் திரு. நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
மாவீரர்நாள், உ.த.பே.02 ; maaveerarnaal_u-tha-pe02