மாணிக்கவாசகம்பள்ளி, பரிசாளர், பாராட்டு01 ;manickavasakampalli_paaraattu01

 மாணிக்கவாசகம் பள்ளியில்

விருது பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா 


தேவகோட்டை – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விருது பெற்ற பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு  விழா நடைபெற்றது.
   நிகழ்வுக்கு வந்தவர்களை மாணவர் செகதீசு வரவேற்றார்.
  பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
  தேவகோட்டை த.மு.எ.ச.கலை இலக்கிய இரவு விழாவில் மாநில அளவில் பரிசுகளை வென்ற இப்பள்ளி மாணவிகள் தனலெட்சுமி, பரமேசுவரி, காவியா ஆகியோருக்கு விருதுகளும், புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன.
  மாநில அளவில் போட்டிகளில்  வெற்றி பெறுவதற்குப் பயிற்சி அளித்த ஆசிரியர்  சிரீதர், ஆசிரியை முத்துமீனாள் ஆகியோருக்கும், விருது பெற்ற மாணவிகளுக்கும்  பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம், ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டுரை வழங்கினார்கள்.
 நிறைவாக  மாணவி கார்த்திகா நன்றி கூறினார்.
மாணிக்கவாசகம்பள்ளி, பரிசாளர், பாராட்டு02 ;manickavasakampalli_paaraattu02 மாணிக்கவாசகம்பள்ளி, பரிசாளர், பாராட்டு03 ;manickavasakampalli_paaraattu03