சேக்கிழார்விழா02 : sekkizharvizhaa02 சேக்கிழார்விழா03 : sekkizharvizhaa03

சேக்கிழார் விழாவில்

மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பரிசு 


     தேவகோட்டை –    தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற  சேக்கிழார் விழாவில் பெரியபுராணம்   முற்றோதுதல் நிகழ்வில் அனைத்துப்பாடல்களையும் பாடிய  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காயத்திரி, கார்த்திகேயன், இரஞ்சித்து, தனலெட்சுமி, பார்கவிஇலலிதா, கண்ணதாசன், இயோகேசுவரன், தனம், இராசலெட்சுமி, சௌமியா ஆகியோருக்குத்  தமிழ் வள்ளல் மெய்யப்பர் நினைவுப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் சிவநெறிச் செல்வர் பேரா.சொக்கலிங்கம், பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன் ஆகியோர் வழங்கினார்கள்.
  மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம், ஆசிரியை செல்வமீனாள் ஆகியோர்க்கும் பரிசு வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உடன் சேக்கிழார் விழாக்குழுச் செயலர் பேரா .சபா .அருணாசலம், பொருளாளர் தெட்சிணாமூர்த்தி, கவிஞர் பழனியப்பன்  இருந்தனர்.
சேக்கிழார்விழா01 : sekkizharvizhaa01 சேக்கிழார்விழா04 : sekkizharvizhaa04