தை 02, 2047 / சனவரி 16, 2016

அழை-தமிழர்திருநாள், இலண்டன் :azhai_thamizharthirunaal_london
  உலகெங்கும் பரவி வாழ்கின்ற எமது உயிருக்கு நிகரான தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
  ஓர் இனத்தின் பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் அந்த இனத்தை அவர்களே அறியாதவண்ணம் அடிமைப்படுத்தி விடலாம் என்பது கடந்த காலத்தில் நடந்து முடிந்த வரலாற்றுப் படிப்பினைகள். இதை மிகச்சரியாக புரிந்து கொண்ட நமது முன்னோர்களும் நமது தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன் அவர்களும், நம் இனம் காக்க “பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது” என கூறி நமது தமிழ்ச் சமுதாயத்தை வழி நடத்தி வந்துள்ளனர்.
  நம்மை அடிமைப்படுத்த நினைத்த ஆற்றல்கள் நமது மொழி, பண்பாட்டுச் சிதைவுகளை நாளொரு வண்ணமாக நம்மில் நிகழ்த்தி வருகின்றன. எனவே இவற்றில் இருந்து நாம் நமது கலைகளை மீட்டெடுப்பதும் காப்பதும் ஏற்கெனவே இழந்து விட்ட நமது பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்வதும் காலத்தின் தேவையாகிறது.
  இன்று நாமிருக்கும் காலக் கட்டத்தில், அசுரவேகமான இயந்திர வாழ்கையில் நம் மக்களை இந்தக் கண்ணோட்டத்தில் சிந்திக்கவைப்பதே கடினமானது. ஆகவே ஒத்த சிந்தனை கொண்ட நண்பர்கள், தமிழ் குடும்பங்கள் இலண்டனிலும் அதற்கு அண்மைய நகரங்களிலும் இருந்து இணைந்து உருவாக்கியதே வீரத்தமிழர் முண்ணனி ஐக்கிய அரசு(இராச்சியம்).
1) நம் தமிழ் குழந்தைகளுக்கு நமது பரம்பரைப் பண்பாட்டு விழுமியங்களைப் படிப்பித்து, இளமையிலேயே அவர்களுக்குத் தமிழ் உணர்வைப் பெருமைமிக்க  தமிழர் பண்பாட்டு அறிவோடு வளர்த்தெடுப்பது.
2) இங்கிலாந்தில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் மொழியின் அடிப்படையில் ஒன்றிணைத்து நம் இனத்தின் வரலாற்றுப் பெருமைகளையும் மொழியின் மேன்மையையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வது.
3) தாய்தமிழகத்திலும் இலங்கையிலும் வாழும் நமது தமிழ் உறவுகளுக்கும் பொருளாதார அடிப்படையில் உதவிகளை மேற்கொள்வது.
  இந்தக் கொள்கைகளை வைத்து இயங்கும் இலண்டன் வீரத்தமிழர் முன்னணி வரும் தைத்திங்கள் இரண்டாம் நாள் தை 2 (16-01-2016) நாள் பொங்கலை வெகுசிறப்பாகக் கொண்டாடும் பொருட்டுத் “தமிழர் திருநாள் மாபெரும் பொங்கல் விழா” இலண்டன் மாநகரில் ஏற்பாடு செய்துள்ளது. இதில் நாம் வாழும் இடங்களில் காலம் காலமாக நடைபெறும் ஊர்கூடிப் பொங்கல் வைக்கும் நிகழ்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு  (உ)ரோசலின் குடிலில் (Roselyn Cottage 3 Croydon Lane Banstead SM7 3AS) நடைபெறும். அது மட்டுமல்லாது குழந்தைகளை நம் கலை, பண்பாடு தொடர்பாக ஊக்குவிக்கும் பொருட்டுக் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
  தங்களுடைய பண்பாடு,  கலை  ஆகியனவற்றின் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ள அத்தனைத் தமிழ்பேசும் உறவுகளுக்கும் இந்தச் செய்தியை கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இலண்டனில் வசிக்கின்ற தங்களுடைய உறவுகளிடத்தில் இந்தச் செய்தியை கொண்டு சேர்த்து அவர்களையும் இந்த நிகழ்வில் பங்கெடுக்கச் சொல்லுமாறு அன்போடு வேண்டுகிறோம். இந்த நிகழ்வில் பங்குகொள்ள விரும்பும் தாய்த்தமிழ் உறவுகள் எங்களைத் தொடர்புகொண்டு தங்களின் வருகையை உறுதி செய்யும்படி அன்போடு வேண்டுகிறோம்.
அழைப்பின் மகிழ்வில்
வீரத்தமிழர் முன்னணி – ஐக்கிய ராச்சியம்


அகரமுதல - மார்கழி 04, 2046 /  திசம்பர் 20, 2015