புதன், 26 ஆகஸ்ட், 2015

பலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – மயக்க நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் 2.


92.pallikuudangal_thalaippu
கழிப்பிடங்கள்
20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிப்பறை, 50 மாணவர்களுக்கு 1 மலக்கழிப்பறை என்ற அளவில் போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம், போதிய வெளிச்சம், பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவை அன்றாடம் தூய்மையாகப் பேணப்பட வேண்டும். கிருமி நாசினி தெளித்து ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வகுப்பறையை ஒட்டியே கடைசியாக அமைக்கப்படவேண்டும். தனியே திடலிலோ ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ அமைதல் கூடாது. கட்டட உறுதி மற்றும் உரிமச் சான்றுகளுடன் கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கழிப்பறைகள் தண்ணீர்க் குழாய் வசதியுடன் இருத்தல் வேண்டும்.
தண்ணீர்த் தொட்டிகள் மாணாக்கர்களால் திறக்க முடியாதபடி இருக்கவேண்டும். மழலையர் – தொடக்கநிலை வகுப்பு நடத்தாட்டிகள் உதவியுடன் கழிவறைக்குச் சென்று வர ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
மின்சாரம்
அனைத்து இடங்களிலும் மின்சார இணைப்புகள், மின் விசை போன்றவை பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பள்ளிகளில் உள்ள மின்சாதனங்கள் அவ்வப்போது பழுது நீக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்புத் தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட மின் அலுவலரின் சான்று பெற்றிருக்கவேண்டும்.
உடைந்த அல்லது சிதிலமடைந்த கட்டடங்கள், சுவர்கள், அறுந்த அல்லது துண்டித்த நிலையில் மின்சாரக் கம்பிகள் இருப்பின் அவை உடனடியாக நீக்கப்படவேண்டும். அதுகாறும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அவ்விடம் செல்லாமல் இருக்க பாதுகாப்பான முறையில் உரிய தடுப்பு அமைப்பு ஏற்பாடு செய்யப்படவேண்டும்.
இருக்கைகள்
மாணவர்கள் அமரும்   பலகைகள் பின்புறம் முதுகு சாய்வகம் உள்ள முறையில் அமைக்கப்படல் வேண்டும்.
பலகை, சாய்வு மேசை ஆகியன கூரிய முனைகள் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எக்காரணங்களைக் கொண்டும் ஆடக்கூடிய அல்லது உடைந்த நிலையிலான இருக்கைகள் பயன்படுத்தக்கூடாதவையாக இருந்தால் அவை உடனடியாக அகற்றப்படவேண்டும்.
முதலுதவி
பள்ளிகளில் ஆபத்துக் காலங்களில் முதலுதவி செய்ய ஏதுவாக முதலுதவிப் பெட்டிகள், அனைத்து மருத்துவப் பொருட்கள் வைக்கப்படடிருக்க வேண்டும் மேலும் காலக்கெடு முடிந்த மருந்துகள் ஏதும் சேமிக்கப்டவில்லை என்பதனையும் உறுதி செய்யவேண்டும்.
பள்ளி மாணவர்களின் இரத்தவகை, நீண்ட நாள் நோய் சார்ந்த குறிப்பு, மருந்து ஒவ்வாமை, குடும்ப மருத்துவர் போன்ற உடல்நலம் சார்ந்த பதிவுகள் பேணப்படவேண்டும்.
ஓட்டுநர் அல்லது உதவியாளர்களுக்கு முதலுதவிப் பயிற்சி அளித்திடவேண்டும்.
(தொடரும்)
93vaikaianeesu_name


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக