செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

தேவதானப்பட்டியில் கண் மருத்துவ இலவச முகாம்

64free-eye-camp04

தேவதானப்பட்டியில் கண் மருத்துவ இலவச முகாம்

  தேவதானப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கண் மருத்துவ இலவச முகாம் நடைபெற்றது.
  தேவதானப்பட்டியில் சாவெடு தொண்டு நிறுவனமும் தேனி அரவிந்து கண்மருத்துவமனையும் இணைந்து கண் மருத்துவ இலவச முகாம் நடத்தியன.
  இதில் கண்ணில் ஏற்படும் புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் ஒழுகுதல், மாலைக்கண்நோய், கண்கூசுதல், கண்ணில் சீழ் வடிதல் முதலான பல்வேறு வகையான நோய்களைக் கண்டறிந்து அதற்கு ஏற்றபடி மருந்துகளும், மருத்துவப் பண்டுவம் தேவைப்பட்டவர்களுக்கு மருத்துவப் பண்டுவமும் அளிக்கப்பட்டது.
  சாவெடு தொண்டு நிறுவன அறக்கட்டளைத்தலைவர் எம்.எசு.அபுதாகிர் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் இராமகிருட்டிணன் முன்னிலை வகித்தார். அரவிந்து கண்மருத்துவமனையைச்சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
  இம்முகாமில் மஞ்சளாறு அணை, கெங்குவார்பட்டி, சாத்தாகோவில்பட்டி, கெ..கல்லுப்பட்டி, அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி, எருமலைநாயக்கன்பட்டி, தே.வாடிப்பட்டி முதலான சிற்றூர்களைச் சேர்ந்த ஏறத்தாழ 200க்கும் மேற்பட்டோருக்கு இலவச மருத்துவம் அளிக்கப்பட்டது.
vaikai aneesu




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக