திங்கள், 16 பிப்ரவரி, 2015

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆதிரை பானுமதி

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆதிரை பானுமதி

 aathirai-malaysiya03
  பேரா. முனைவர். ப. பானுமதி மலேசியாவில் நடைபெற்ற 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அரங்கத்தலைமை வகித்ததோடு “பெரிய புராணத்தில் பேசப்படாத பெண் புராணங்கள்” என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கினார். அரங்கத்தில் மேனாள் இந்திய ஆட்சிப் பணியாளர் கற்பூர சுந்தர பாண்டியன், முனைவர். வாணி அறிவாளன், முனைவர். திலகவதி   ஆகியோர் ஆய்வுக்கட்டுரை வாசித்தனர். அரங்கத்தில் நீதியரசர் வள்ளிநாயகம், கவிவேந்தர் க. வேழவேந்தர், பேரா. இரா.மோகன், பேரா. நிர்மலா மோகன், இரா.மதிவாணன், கலைமாமணி சோபனா இரமேசு, சிங்கப்பூர் பதிப்பாளரும் பொறியாளருமான பாலு மணிமாறன், மலேயப் பல்கலையின் பேராசிரியர்கள் முதலான நூற்றுக்கும் மேற்பட்டோர் பார்வையாளராகக் கலந்து சிறப்பித்தனர்.
  மேனாள் இந்திய ஆட்சிப் பணியாளரும் இதற்கு முன் நடந்த மூன்று உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளில் பங்கு பெற்றவருமான இரா. கற்பூர சுந்தரபாண்டியன் அவர்கள் “சித்தர்கள் கண்ட சித்திரக் கூடம்” என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கினார். மானிடர்க்கு நெற்றிக்கண் உள்ளது என்னும் கருத்தைப் பதிவு செய்தார். சித்தர்களின் தியான முறையில் தீர்க்கமான வலிமையைப் பெறலாம் என்பதைக் காட்சி ஊடாகவும் (POWER POINT) விளக்கினார்.
  முனைவர். வாணி அறிவாளன் “சங்க இலக்கியத்தில் காணலாகும் எற்பாடு என்பது வைகறையே” என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கினார். சிலம்பிலிருந்தும் மணிமேகலையிலிருந்தும் சான்றுகள் கூறித் தம் கருத்தை நிறுவினார்.
  முனைவர். திலகவதி “வாசகரும் வள்ளலாரும்” என்னும் தலைப்பில் கட்டுரை வழங்கினார். மணிவாசகரே பிற்காலத்தில் வள்ளலாராக வருவிக்க உற்றிருக்கலாம் என்னும் ஆய்வுக்கருத்தைப் பதிவு செய்தார்.. தம் கருத்தை நிறுவுவதற்கான ஆதாரங்களாக மணிவாசகரின் வாழ்க்கையில் நடந்த எல்லாமும் வள்ளலாரின் வாழ்க்கையிலும் நடந்துள்ளதை வரிசையாக எடுத்துக்காட்டினார்.
aathirai-malaysiya06 aathirai-malaysiya05 aathirai-malaysiya04 aathirai-malaysiya02 aathirai-malaysiya01


1 கருத்து:

  1. எப்போதும் போல தமிழ்ப் பற்றுடனும் மானுட முன்னேற்றச் சிந்தனையுடன் சிறு கடிதலுடன் செய்திகளைக் கேட்டுப் பெற்று அழகாகப் பதிவேற்றிய தங்கள் அன்பை எண்ணும் போது……. விழியோர நீர்த்துளிகள் நன்றி சொல்ல முந்துகின்றன விரல்களின் வேகத்தை.

    மாறாத அன்புடன் மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு