வியாழன், 18 டிசம்பர், 2014

‘நவீனநொச்சி’ – படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

naveena_nochi

‘நவீனநொச்சி’ – இலக்கிய இதழுக்குப்

படைப்புகள் வரவேற்கப்படுகின்றன


    வணக்கம். இருமாதக் கவிதை இதழான‘நவீனநொச்சி’ இது வரை பத்து (10) இதழ்கள்
வெளிவந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்விதழின்
முதன்மை நோக்கங்களில் ஒன்று மாணவர்களிடமும் ஆய்வாளர்களிடமும் உள்ள
படைப்பாற்றல் திறத்தை வளர்த்தெடுப்பதும் ஊக்குவிப்பதும் ஆகும். அதனால்
மாணவர்கள் ஆய்வாளர்கள் தம் படைப்புகளை ஒரே கட்டுக்குள் மின்னஞ்சலிலோ
இதழின் முகவரிக்கோ அனுப்பலாம்.
பல்கலைக் கழகப் பேராசியர்களும் கல்லூரிப் பேராசியர்களும் இலக்கிய ஆர்வலர்களும்
நவீனநொச்சி வாசகர்களும் அன்போடு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தமிழர்
திருநாளாகிய ‘தை-2034’ (JAN-2015) திருநாளினை முன்னிட்டுச் சிறப்பு இதழாக
வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு இதழ் செம்மையாக வெளிவரத் தங்களுடைய கவிதை, கவிதை தொடர்பான
கட்டுரைகளை 31.12.2014க்குள் கிடைக்குமாறு அஞ்சலில் (அ)
naveenanochi@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின்
உயிரோட்டத்தைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
பல்வேறு பணிச் சுமைகளுக்கிடையே இயங்கக் கூடிய அன்பர்கள், ‘நவீனநொச்சி’ சிறப்பு
இதழையும் தம் பணியாகக் கருதி, தங்களின் மேலான ஆதரவை வழங்கும்படி அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
*படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி:*
 
முனைவர் இரா. சிவகுமார்,
  2/4ஏ, 3 ஆவது தெரு, வடிவேல் நகர்,
  சங்கரன் பாளையம்,
  வேலூர் – 632 001.
 
பேச: 9843677742, 9487629627

அகரமுதல 57

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக