வியாழன், 11 டிசம்பர், 2014

வைகை அணையில் குளிக்கும் பயணிகள்


(வைகைஅணையில்குளியல்)
(வைகைஅணையில்குளியல்)

வைகை அணையில் கண்டமான

(ஆபத்தான) இடத்தில்

குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்

தேனிமாவட்டத்தில் உள்ள வைகை அணை மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாகும். இப்போது பெய்து வருகின்ற மழையினால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் வைகை அணையில் எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று தாவரங்களும் பூங்காக்களும் உள்ளன. இவற்றைக் காண்பதற்குத் தேனி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இப்பொழுது ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வைகை அணையைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு வருகின்றனர்.
வைகை அணையின் பின்புறம் கடல்போன்று காட்சியளிக்கிறது. இதனால் பார்ப்பவர்கள் அனைவருக்கும் குளிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இயற்கையே. இதனால் சுற்றுலாப் பயணிகள் மதகுகள் பகுதி வரை நீச்சல் அடித்துச் செல்கின்றனர். இதனால் மதகு பகுதியில் சுழல் ஏற்பட்டு மதகுகளில் சிக்கிப் பலர் உயிர் நீத்துள்ளனர். எனவே பொதுப்பணித்துறை வைகை அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கவேண்டும் எனவும் வைகை அணையின் பின்புறம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விடாமல் தடுக்க ஆட்களை நியமிக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
56vaigaianeesu_name




அகரமுதல 56

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக