தேனிப் பகுதியில் விளைச்சல் நிலங்கள் குறைந்ததால் நல்ல நிலையுள்ள மாடுகள் அடிமாட்டிற்காகக் கேரளாவிற்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
தேவதானப்பட்டி பகுதியில் கடந்த சில
வருடங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் நீர்நிலைகள் வற்றியும் குளங்கள்,
கண்மாய்கள், ஏரிகள் நீரின்றி வறண்டும் காணப்பட்டன. இதனால் கால்நடைகளான ஆடு
மாடுகளின் மேய்ச்சல் பரப்பு குறைந்தது.
இதனால் உழவர்கள் தங்கள் கால்நடைகளுக்கு
வேண்டிய தீவனத்தை வாங்கிக்கொடுக்க முடியாமல் தவித்தனர். மேலும் கால்நடைத்
தீவனங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வைக்கோல்,
தீவனப்புல் போன்றவை கிடைப்பது அரிதானது. இதனால் தங்கள் கால்நடைகளை
அடிமாட்டு விற்பனைக்கு விற்பனை செய்தனர்.
சுங்கச்சாவடிகளில் கையூட்டுத் தொல்லை,
அதிகாரிகள் தொல்லை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேவதானப்பட்டியிலிருந்து
வைகை அணை வழியாகப் போடி, கம்பம் பகுதிகளுக்குக் கால்நடையாக மாடுகளைக்
கொண்டு செல்கின்றனர். அங்கு கொண்டு சென்ற பின்னர் இறைச்சிக்காகப்
பயன்படுத்தப்படுகின்றன.
எனவே மாவட்ட நிருவாகம் கால்நடைகளைப்
பேணவும் கால்நடைகளுக்கு வேண்டிய தீவனங்களை ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை
எடுக்க ஏற்பாடு செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் உழவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக