தேனிப் பகுதியில் தொடர்மழை காரணமாகச் செங்கல் செய்யும் தொழில் பாதிப்படைந்துள்ளது.
தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி,
தேவதானப்பட்டி, இலெட்சுமிபுரம், குன்னூர் முதலான பகுதிகளில் ஏராளமான
செங்கல் தொழிற்சாலை உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் செங்கல் திருச்சி, கேரளா
போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. செங்கல் தயாரிக்க
தனியாகச் சேலம், தருமபுரி பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வந்து செங்கல்
தொழிலை நடத்துகின்றனர். மேலும் செங்கல் தொழிலுக்கு மூலதனமாக மண், மணல்,
விறகு போன்றவை வாங்கி எரிப்பதில் பல விதக் கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும்
தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் எனப்
பலதுறைகளிலும் நெருக்கடிகள் இருந்து வருகின்றன.
இவை தவிர செங்கல் தொழிற்சாலைக்கு வேலைக்கு
வருபவர்களுக்கு முன்கூட்டியே முன்பணம் கொடுத்து அழைத்து வரவேண்டியுள்ளது.
அதில் சிலர் ஏமாற்றி விடுகின்றனர். பணத்தைக்கேட்டால் கொத்தடிமையாக
வைத்துள்ளனர் என்ற பொய்ப்புகார் கொடுத்து செங்கல் தொழிலதிபர்களை
அலைக்கழிக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க செங்கல் தொழிற்சாலைக்கு
வேலைக்கு வரும் பெண்களைத் தொழிலதிபர்கள் தங்களுடைய காம விருப்பத்திற்குப்
பயன்படுத்தி மிரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது.
இவ்வளவு இடர்பாடுகளில் தொழில் நடந்தாலும்
தற்பொழுது தொடர்மழை காரணமாகச் செங்கல் தொழில் பாதிப்படைந்துள்ளது. இதனால்
பல தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக