தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி
சிறுவர் பாடல் எழுதும் பயிற்சி
ஒருநாள் பயிற்சிப் பட்டறை 29.3.2014
ஆர்வலர்களுக்கு அழைப்பு
தனித்தமிழ் இயக்கம் ஆண்டு தோறும் சிறுவர்
பாடல் எழுதும் போட்டியை நடத்திப் பரிசு வழங்கி வருகிறது. அம்முயற்சியின்
அடுத்த கட்டமாகச் சிறுவர் பாடல் எழுதும் ஒருநாள் பயிற்சிப்பட்டறை ஒன்றை
நடத்த விரும்புகிறோம். அனைவரும் நல்ல பாவலர்களே. பயிற்சி சிறந்தவர்களாக்கப்
பயன்படும்.
இதில் சிறுவர் பாடல் என்பது எப்படி இருத்தல் வேண்டும்? தனித்தமிழ்ச் சொற்களை எப்படிப் பயன்படுத்துவது?
சிறுவர்க்கான பாடுபொருள்கள் எவை? சிறுவர்க்கு ஏலாத பாக்கள் எவை? முதலிய செய்திகள் பேசப்படும்.
29.3.2014 காரியன்று மாலையில்
புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியின் இறுதியில் கல்வியமைச்சர் கலந்து
கொண்டு பங்கேற்பாளர்க்குச் சான்றிதழ்கள் வழங்குவார். வழிகாட்டுதல்
குறிப்புகள் அடங்கிய குறிப்பேடும் வழங்கப்பெறும்.
பங்கேற்பாளர்களுக்குச் சிறந்த பகலுணவும் தேநீரும் சொற்பொழிவும் வழங்கப்படும்.
பங்கேற்பாளர்கள் தங்கள் மனங் கவர்ந்த
சிறுவர் இலக்கிய அறிஞர்கள், இலக்கியங்கள் பற்றி 5 நிமைய எழுத்துஉரை
நிகழ்த்தலாம். எழுத்துரையை 18.3.2014க்குள் அனுப்பிவிடவேண்டும்.
பங்கேற்பாளர்கள் தங்கள் ஒப்புதலை
18.3.2014க்குள் அனுப்ப வேண்டும். பங்கேற்புக் கட்டணம் உருவா 500.00.
கட்டணத்தைப் ப.ஆ (மணிஆர்டர்) மூலம் மட்டும் அனுப்ப வேண்டும்.
2014 இல் நடத்தப்பட்ட சிறுவர் பாடல் போட்டி முடிவுகள்
பரிசுபெற்றவர்கள் 1. த.கருணைச்சாமி 2. து. ஆதிநாராயணமூர்த்தி 3. மலரடியான்
பரிசுப் பாடல்களும் பிற பாடல்களும் 2045 கும்பம் வெல்லும் தூயதமிழ் சிறுவர் பாடற்சிறப்பிதழில் இதழில் வெளிவந்துள்ளன.
இவண்
தலைவர், தனித்தமிழ் இயக்கம்
66, மாரியம்மன் கோயில் தெரு,
தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009
தொ:0413-2247072 ; 97916 29979
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக