செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத்தண்டனை நீக்கம்! அறம் வென்றது!

இராசீவு   கொலையில் சிக்கிய  மூவரின் தூக்குத்தண்டனை  நீக்கம் : உச்சநீதிமன்றம்

முன்னாள் தலைமையாளர் இராசீவு  கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுவை  குடியரசுத் தலைவர்  மறுத்தார். இதில் காலத் தாழ்ச்சியாக முடிவு எடுத்ததால் தூக்குத் தண்டனையை  வாணாள்  தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றத்தில் மூவர் சார்பில் முறையீடு அளிக்கப்பட்டது.
 இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை  நீக்கி ஆணையிடப்பட்டது. மேலும், அவர்களின் தூக்குத் தண்டனை  வாணாள்தண்டனையாகக் குறைக்கப்பட்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆளுக்கொரு நீதி என்ற முறையில் மத்திய அரசு வாதிட்டப்போதும் முறையான  சரியான நீதி வழங்கிய நீதிபதிகளுக்குப் பாராட்டுகள்.

இனி, தமிழக அரசு இவர்களை விடுதலை செய்யத் தடை யில்லை!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக