அமெரிக்காவின் இலாங்வுட்டு பல்கலையில்
நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித்
ஆதித்யாவின் வாழையிலையைப் பதப்படுத்திக் குவளை, கிண்ணம் உருவாக்கிச்
சுற்றுச் சூழலை மாசின்றி அமைக்கும் கண்டுபிடிப்பு குறித்துக் கலந்துரையாடல்
நடந்தது.
பிரிட்டனைச் சேர்ந்த ஃபெயித்து என்ற 9
அகவைச் சிறுமி புத்தகங்கள் படிப்பதில் உள்ள கழிமிகு விருப்பத்தின்
காரணமாக 7 மாதங்களில் 364 புத்தகங்களைப் படித்து முடித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களின் செலவு
உரூ.40இலட்சம் என்பதை உரூ.70இலட்சம் வரை உயர்த்துவது குறித்து தேர்தல்
ஆணையம் ஆராய்கிறது.
சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உரூ.16இலட்சத்தில் இருந்து உரூ.28இலட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் நடந்த, தி.மு.க.,வின், 10 ஆவது மாநில மாநாடு, பலரும் எதிர்பார்த்தைவிட, வெற்றிகரமாக அமைந்துள்ளது.
திமுகவின் தேர்தல் நிதியாக உரூ.106 கோடியே
79இலட்சம் வரை திரட்டப்பட்டதாக அக் கட்சியின் பொருளாளர் மு.க.தாலின்
மாநாட்டில் அறிவித்தார்.
சமயவாத எதிர்ப்பாளர்கள் தி.மு.க கூட்டணியில் இடம் பெறுவார்கள் - திருச்சி மாநாட்டில் கருணாநிதி
இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்துப் பன்னாட்டு உசாவல் – ஐ.நா. மனித உரிமைக்குழு பரிந்துரை
திருட்டு தொடர்பான முறையீடுகளை இனி இணைய வழித் தெரிவிக்கலாம் – தில்லிக்காவல்துறை
அரிசிக்குச் சேவை வரி விதிப்பது மத்திய அரசின் ஓரவஞ்சனை - வைகோ குற்றச்சாட்டு
திமுக மாநில மாநாட்டை ஒட்டித் திருச்சிராப்பள்ளியில் மது விற்பனை இரு நாட்களில் மட்டும் 75 விழுக்காடு கூடியுள்ளது.
மாநாட்டுத் திடல் அருகே 3 மதுக்கடைகள்
அமைந்துள்ளன. இவற்றில் வழக்கமாக உரூ.90 ஆயிரம் வரையில் விற்பனை நடைபெறும்.
ஆனால் கடந்த 15, 16 நாள்களில் மட்டும் இங்குள்ள ஒவ்வொரு கடையிலும் உரூ. 9
இலட்சம் முதல்உரூ15இலட்சம் வரை விற்பனை கூடியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்,
மாநாட்டுக்குச் சென்றவர்கள், மது வாங்கிய வகையில் இரண்டு நாட்களில்,
தமிழகம் முழுவதும், 212 கோடி உரூபாய்க்கு, மது பானங்கள் விற்றுள்ளன.
திருநெல்வேலியில் அகில இந்திய சமத்துவ
மக்கள் கட்சியின் 2 ஆவது மாநில மாநாடு நெல்லை மாநகராட்சி பொருட்காட்சித்
திடலில் 16.02314 அன்று பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க நடைபெற்றது. மாநில
மகளிரணித் தலைவியாக இராதிகா நியமிக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக