ஐயா! குறள்நெறிக் கருத்தரங்கத்தில் ஓர் அன்பர் விடுத்த வினாக்களுக்கு விடையாக எனது கருத்துகள். அவ்வன்பர்
தொடக்கத்தில் ‘பிறப்பால் தமிழன், மொழியால்
தமிழன்; என் கதை, கட்டுரைகளில்
தமிழ் தவிரப் பிற மொழிச் சொற்கள் இடம் பெறா!’ எனக்கூறிவிட்டுப்
பல பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதை முதற்கண்
அன்பர் தெரிந்து கொள்வது, அவர் எடுத்துக் கொண்ட செயலுக்கு
...
இந்தியை விரும்பும் செந்தமிழ் நண்பரே ஐயம் தெளிமின்
- பரணி பாடிய கவிஞர் அரங்கசாமி, இராசிபுரம் ஒருவன் பிறப்பால் தமிழனாயும், மொழியால்
தமிழனாயும் இருப்பானாகில் அவன் நாடு எப்பெயரால்
வளரும்? தேசியப் பற்றினால் அந்தந்த நாடு
வளம் பெற வேண்டுமே தவிர பல கண்டத்தை இணைக்க முடியுமா? இந்தியா
என்பது இந்நாட்டின் பொதுப்பெயர் என்று இலக்கியச்சான்று உண்டா? நேருவைத்
தலைவராகக் கொள்வதும் ...
தமிழன்பர் திரு. இலிங்கம் அவர்களுடைய கேள்விகளுக்கு விடை எழுதுமுன், நாம் பிறக்கும்போதே நம்மோடு பிறந்த தாய்மொழியான தமிழ், நம்மைப்
பெற்ற தாய்போலும் தெய்வம் என்றும், நம்
எண்ணங்களை உலகோருக்குத் தெரிவிக்க உறுதுணையாய் நின்று
வாழவைக்கும் ஒப்பற்ற தெய்வம் என்றும், இத்தகைய
தாய்மொழியை வணங்கிக் காக்க மறப்பது தமிழ் மரபுக்கு
ஒவ்வாத கொடுமை என்றும் கூறித் தொடங்குகிறேன்... -விழியூர் ...
- பி.சு.தங்கப்பாண்டி குலசேகரப்பட்டி 1. ‘இந்தி
படித்தால்தான் நடுநிலையரசில் பதவிகள் பெறமுடியும்’ என்ற உணர்வு மாணவ உள்ளங்களில் தூண்டப்படுகிறது. நம்மவர் படிப்பது
பதவிக்குத்தான்; அறிவோடும் தன்மானத்தோடும்
வாழவல்ல. இதனால் தமிழார்வம் கொண்டோரும், தமிழால் பயனில்லையோ? என்று எண்ண
வேண்டியுள்ளது. இதற்குத் தமிழ் அழிந்ததோ, இல்லையோ, தமிழை
வளர்க்க வேண்டியோரின் உள்ளங்கள் அழிந்ததாயின.
அழிகிறது; இதே நிலைமை நீடித்தால் அழியும். 2. ...
வருமுன்னர்க் காவா தான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு
போலக் கெடும். 1. அழிவுக்கு உண்டான வேலைகள்
அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு விட்டன, நண்பரே, அரசியல்
சட்டம் 17ஆவது பிரிவில், அதன் பயனை 65 சனவரி 26ஆம் நாள்முதல் இந்தி அரியணைஏறுவதின் வழியாக நாம்
பட்டறியத்தான் போகிறோம். ‘‘தமிழகம் ஏற்றுக்கொண்டால்தானே’’ என்றொரு
வினாவை நீர் கேட்கத்துடிப்பது எனக்குப்
புரிகிறது. ஆனால் ...
வினா1 : இந்தியால்
தமிழ் எந்த வகையில் அழிகிறது? அழிந்தது? அழியும்? மேல்
நாட்டில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ‘‘பின்னமாலியட்’’ என்பாரிடம்
எதிர்கால விளைவுகளின் ஐயப்பாடுகள் பற்றி மக்கள் பல கேள்விகளைக் கேட்டுக் கொள்வதுண்டாம். அவற்றுள், ஒரு
நாட்டிற்கு வரும் மீளாத பேராபத்து எது? “எவ்வித
ஆபத்திற்கும் மீட்சியுண்டு. அந்நாட்டுத் தாய்மொழி மெல்ல மெல்ல மங்கி மறைவதுதான் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக