ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

அகரமுதல இணைய இதழ் 11-செய்திகளும் கவிதைகளும்






விழுப்புரம்: விழுப்புரம் நகர அ.தி.மு.க., முன்னாள் செயலாளர் நூர்முகமது(55). இவர், நாய், ஆடுகள், வான் கோழிகள்  முதலியவற்றை வளர்த்து வருகிறார். இவற்றில் ஓர் ஆடு கடந்த  மாதம்மூன்று குட்டிகளை ஈன்றது.  தாய் ஆடு பால் கொடுக்கும் பொழுது என்ன காரணத்தாலோ ஒரு குட்டியை ஒதுக்கியது. இதனைப்பார்த்துக் கொண்டிருந்த  நாய் ஒன்று தன் குட்டிகளுடன் சேர்த்து ஆட்டுக்குட்டிக்கும்பால் ...

+++
- புதுவைத் தமிழ்நெஞ்சன் சூடற்ற தமிழனுக்குச் சூடேற்ற முத்துக்குமரா....! தீப்பந்தம் ஆனாய் - நாடற்ற ஆரிய நாடோடிக் கூட்டமிங்கே நம்மினத்தை அழிக்கிறதே வீணாய்! இந்தீய அரசுன்னைப் படுகொலையும் இம்மண்ணில் செய்தது தான் உண்மை - குமரா..! செந்தீயாய் தமிழினமும் தலைநிமிர தீக்குளியல் செய்ததெல்லாம் வன்மை! யாரென்று நேற்றுவரை நானறியேன் தமிழ்க்குமரா இம்மண்ணில் உன்னை - உன்னை யாரென்று அறியாதார் இன்றில்லை என்பதுதான் நாமறிந்த உண்மை! ஈழத்தில் எரிகிறதே இந்தீயா மூட்டிவிட்ட இனவெறியாம் நெருப்பு - தமிழ் ஈழத்தை அழிக்கின்ற பகையினத்தை அழித்தொழிக்க தமிழ்மறவா விரும்பு! சிங்களத்தின் கூலிப்படை ஆனபின்னர் நாமெதற்குத் தரவேண்டும் மதிப்பு - ...


+++
  புதுச்சேரி : 27.01.2014 அன்று மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் நடத்திய 68 ஆவது திங்கள் பாவரங்க நிகழ்வில் 'திருக்குறளைத் தேசிய நூலாக்கு' என்ற தலைப்பில் மரபுப் பா, புதுப்பா படித்தனர். மற்றும் துளிப்பா, சிறார் பா , மொழிபெயர்ப்புப் பா, கழக இலக்கியம் அறிமுகம் ஆகியவை நடைபெற்றன. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...
+++

கொரண்டிப் பூ!

  இளையவன் - செயா  மதுரை பெரியார் ஆண்டு 135 தொ.ஆ.2878  தி.ஆ. 2045 சுறவம் ( தை ) 16            29--01--2014 ஆழி   நீர்ப்பரப்பில்   ஆடுகின்ற  நிழலாய் ஊழிப்   பெருவாழ்   விலுழன்று  உதட்டாலே வாழி   வாழியெனும்  வாழ்த்துக்கு  வயமாகித் தாழியள   வாய்த்தாங்கும்  துன்பச்   சுமைதனை மறப்பதற்   கோர்நாள்   மல்லைநகர்  சென்றிந்தேன் பிறப்பதன்  பெரும்பயனை  பிற்றைநாள்   மக்களுக்கு உரைப்பது  போன்றுருவச்  சிலைகள்  என்னுளத்துச் சிறுகு   மறக்கப்   பெருந்துணை  ஆயிற்றே! மல்லை   நகரின்  ...
+++

உரிமை ! ஈரோடு இறைவன்

விலங்கு வாழ்கிறது காட்டில் விடுதலையோடு! மீன் தண்ணீரில் வாழ்கிறது விடுதலையோடு ! புழு மண்ணில் வாழ்கிறது விடுதலையோடு ! தமிழா நீ வாழ்கிறாயா விடுதலையோடு !
+++

செய்திக் குறிப்புகள் சில

      உலக  மக்கள் தொகையில் எழுத, படிக்கத் தெரியாதவர்களில் 37% இந்தியாவில்தான் இருக்கிறார்கள்  - அனவைருக்குமான கல்வி இயக்க அறிக்கை(EFA Global Monitoring Report, 2013-14)        பெரியாண்டி என்னும் நூறு அகவை மூதாட்டியைப்  பேணும் மதுரை இடையப்பட்டியைச்  சேர்ந்த  6 ஆம் வகுப்பு பயிலும் அருச்சனாவிற்கு திரிபுரா அறக்கட்டளை சார்பில் நம்பிக்கை நாயகி விருது வழங்கப்பட்டது.       ...
++++

திமுக. காங்.கூட்டணி அமைந்தால் எதிர்த்துப் பரப்புரை: சீமான்
திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைக் காங்கிரசு சந்தித்தால், அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் பரப்புரை மேற்கொள்வோம் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.   திருச்சியில் 01.02.14 சனிக்கிழமை அவர் அளித்த செவ்வி:   நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களின் இலக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்தான். 2016 தேர்தலில் போட்டியிடுவோம். அடுத்து ...
+++

தமிழகத்தை வஞ்சிக்கும் காங்.அரசு ஆளுநர் உரை மூலம் தாக்கு!


  தமிழகச் சட்டப்பேரவை 30.01.14 அன்று நண்பகல் 12.00 மணிக்குக் கூடியது. சட்டமன்றத்தைத் தொடக்கி வைத்து  அரசின் குரலை  ஒலிக்கும் ஆளுநர்  உரை மூலம் மத்திய காங்.அரசின் புறக்கணிப்பு உணர்வுகள் அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளாகக் குவிக்கப்பட்டன.   'இலங்கையில் இனவெறிப்  போருக்குப்பின்னர், இலங்கைத் தமிழர்கள் அவர்கள் பிறந்த மண்ணிலேயே மனிதநேயமற்ற முறையில் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.  இதுவும், இலங்கை ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக