புதன், 11 ஏப்ரல், 2012

recognition for me - vaidheki


"எனக்குக் கிடைத்த அங்கீகாரம்!'


"சென்னை மெட்ரோ ரயில் புராஜெக்ட்'டிற்காக, தங்கப் பதக்கம் பெற்றிருக்கும் வைதேகி: சின்ன வயதில் இருந்தே, எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு; அந்த ஆர்வம் தான், மேற்படிப்பாக கட்டடத் துறையை தேர்ந்தெடுக்க வைத்தது.சென்னை, "மியாசி அகடமி ஆப் ஆர்கிடெக்சரில்' பி.ஆர்க்., படித்தேன்; அதில், தங்கப்பதக்கமும் பெற்றேன். அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.பிளான்., சேர்ந்தபோது, படிப்பு, புராஜெக்ட் என்று, இரண்டு தங்கப் பதக்கங்கள் பெற்றேன். புராஜெக்ட்டிற்கு, நான் நிறைய மெனக்கெட்டேன் என்பதை விட, நிறைய அக்கறைப்பட்டேன்.தற்போது, சென்னையில், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

ஒருங்கிணைந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து முனையமாக, கோயம்பேடு பகுதியை மாற்றுவது குறித்து, நான் ஆய்வு செய்தேன்.நம் வரிப்பணத்தில் தான், இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக அமைய வேண்டியது மிகவும் முக்கியம். அதனால், அனைத்து வசதிகளும் ஒருங்கே உள்ள இடமாக, கோயம்பேடு இருக்க வேண்டும் என்று திட்டமிட்டேன்.மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தும் பயணிகள் அனைவருக்கும் பயன்படும் விதமாக, வாகன நிறுத்தம், உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும், பிற போக்குவரத்து அமைப்புகள் மூலம், மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வர வசதி என, அனைத்தையும், என் ஆய்வறிக்கையில் விவரித்தேன்.

என் பெற்றோர், நண்பர்கள், பேராசிரியர்கள் அறிவுறுத்தலின்படி, மெட்ரோ ரயில் அமைப்பு நிர்வாகத்திற்கு அனுப்பினேன். "உங்கள் ஆய்விற்கு பாராட்டுகள்; எங்களின் மெட்ரோ ரயில் திட்டத்தில், உங்களின் ஆய்வு தரும் பரிசீலனைகள் ஏற்றுக் கொள்ளப்படும்'
என, அந்த அதிகாரிகள் பாராட்டியது, என் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக