இலங்கை அகதிகளின் குழந்தைகள் அரசு விடுதிகளில் தங்க அனுமதி: முதல்வர் உத்தரவு
First Published : 09 Dec 2011 12:29:17 PM IST
சென்னை, டிச.9: இலங்கையில் இருந்து த்துக்கு அகதிகளாக வந்த தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அரசு மாணவர், மாணவியர் விடுதிகளில் தங்கிப் பயில அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இலங்கையில் இருந்து த்திற்கு அகதிகளாக வந்து, இங்கு முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்பட ஆணையிட்டுள்ளார். இதன் அடிப்படையில் பல்வேறு நலத் திட்டங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் 21,000 முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வர சிரமப்படுவதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் த்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை / பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, ஆகிய துறைகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் அனைத்து மாணவர் / மாணவியர் விடுதிகளிலும், அவர்கள் தங்கி கல்வி பயில ஆணையிட்டுள்ளார். இதன்படி, த்தில் தற்போது இயங்கி வரும் 1,294 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் / மாணவியர்களுக்கான விடுதிகளில், ஒவ்வொரு விடுதியிலும் தற்போது அனுமதித்துள்ள எண்ணிக்கைக்கு கூடுதலாக 5 இடங்கள் வீதம் மொத்தம் 6,470 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 3 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் தொடரும் செலவினம் ஏற்படும். இதேபோன்று, த்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 1238 விடுதிகளில், ஒவ்வொரு விடுதியிலும் தற்போது அனுமதித்துள்ள எண்ணிக்கைக்கு கூடுதலாக 5 இடங்கள் வீதம் மொத்தம் 6,190 இடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 4 கோடியே 25 லட்சத்து 64 ஆயிரத்து 620 ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும். முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இந்த நடவடிக்கைகள் மூலம், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் 12,660 குழந்தைகள் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இது தவிர, இலங்கைத் தமிழர்கள் தங்கள் படிப்பினை இடையில் நிற்காமல் தொடர்ந்து படிப்பதினால், அவர்களின் வருங்கால வாழ்விலும் வளம் ஏற்படும். இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
முதல்வர் அம்மா அவர்களின் இந்த உதவியால் இலங்கைத் தமிழர்கள் தங்கள் படிப்பினை இடையில் நிற்காமல் தொடர்ந்து படித்து அவர்கள் வருங்கால வாழ்கையில் வளம் காணமுடியும். அம்மாவுக்கு இதயம் கனிந்த நன்றி. வாழ்க வளமுடன். வாய்ப்புக்கு நன்றி.
By கடலூர் சித்தன்.ஆர்
12/9/2011 1:29:00 PM
12/9/2011 1:29:00 PM
முதல்வரின் உத்தரவுக்கு நன்றி - பாராட்டுக்கள். அதேசமயம், "அகதிகள்" என்னும் வார்த்தை நெருடலாக இருக்கிறது. "புலம் பெயர்ந்த தமிழர்கள்" என்று கண்ணியமாக அழைக்கலாமே!!
By Abdul Rahman - Dubai