central govt. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
central govt. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 அக்டோபர், 2012

மக்கள் பயன்படுத்தும் பாலில் 68 % கலப்படம் : மத்திய அரசு தகவல்

மக்கள் பயன்படுத்தும் பாலில் 68 % கலப்படம் : மத்திய அரசு தகவல்
 தினமலர்
 புதுடில்லி:பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில், 68 சதவீதம், கலப்படமாக இருப்பதாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

உத்தரகண்ட்டை சேர்ந்த, சுவாமி அச்சியுதானந்த் தீர்த் உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில், கலப்படம் செய்யப்படுகிறது. செயற்கை முறையிலும் பால் தயாரிக்கப்படுகிறது. இதை பயன்படுத்துவோருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதையடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சார்பில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் பால் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பல முக்கியமான விஷயங்கள் தெரியவந்தன.இதன்படி, நகர்ப்புறங்களில், தற்போது மக்கள் பயன்படுத்தும் பாலில், 68 சதவீத பால், கலப்படமாக உள்ளது. எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நிர்ணயித்துள்ள தர விதிமுறைகளை, பூர்த்தி செய்யும் வகையில், இந்த பால் இல்லை. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சில மாதிரி பால்களில், குளுகோஸ், தண்ணீர் உள்ளிட்டவை, சேர்க்கப்படுகின்றன. பாலில் உள்ள அழுக்கை நீக்குவதற்காக, டிடெர்ஜென்ட் பவுடர்கள் சேர்க்கப்படுகின்றன.இவ்வாறு, மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டு உள்ளது.


ஞாயிறு, 14 அக்டோபர், 2012

கருணாநிதி தமிழகத்துக்கு என்ன திட்டத்தை க் கொண்டு வந்தார்: ஓ.பன்னீர்செல்வம்

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி தமிழகத்துக்கு என்ன திட்டத்தை க் கொண்டு வந்தார்: ஓ.பன்னீர்செல்வம்

First Published : 13 October 2012 05:41 PM IST
13 ஆண்டுகள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கருணாநிதி தமிழகத்திற்கு என்ன திட்டத்தை கொண்டு வந்தார். எந்த திட்டத்தையும் கொண்டு வராத கருணாநிதிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் எதற்கு  வாக்களிக்க வேண்டும் என அதிமுக பொருளாளரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பைசல் மஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து தலைமை வகித்தார். அரியலூர் மாவட்டச் செயலாளர் துரை.மணிவேல் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் மா.ரவிச்சந்திரன், ஆ.இளவரசன் எம்பி, முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம் எம்எல்ஏ, நாக.முருகுமாறன் எம்எல்ஏ, பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் ரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அதிமுக பொருளாளரும், தமிழக நிதிஅமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். அவர் பேசியது: சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 1977-க்கும் பிறகு அதிமுக போட்டியிடவில்லை என இங்கு கூறினார்கள். ஆனால் வரும் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக போட்டியிடும். முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் வேட்பாளரை நாம் வெற்றி பெறச்செய்ய வேண்டும். அதிமுகவை உருவாக்கிய போது 18 லட்சம் உறுப்பினர்கள். தற்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்கால சந்ததியினரும் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். தானே புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு 1 லட்சம் காங்கிரீட் வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டுள்ளார். ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. மின்வெட்டு பிரச்சனை. 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உற்பத்தி செய்த மின்சாரத்தை வெளிநாட்டிற்கும் விற்பனை செய்தோம். அதன்பிறகு வந்த திமுக அரசு எந்த மின்உற்பத்தியையும் தொடங்கவில்லை. தற்போது கூடுதலான மின்உற்பத்திக்கான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இன்னும் 6 மாதங்களுக்குள் மின்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து பேச கருணாநிதிக்கு தகுதி இல்லை. அவர் முதல்வராக இருந்தபோதுதான் இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தவர் கருணாநிதி. அதனால் தற்போது மீனவர்கள் இலங்கை கடல்பகுதியில் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. காவிரி நீர் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா 3 முறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதில் வெற்றி பெற்றுள்ளார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் அணையில் 152 அடி வரை நீர் தேக்கலாம் என்ற தீர்ப்பை பெற்றுள்ளார். முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கான உரிமை கிடைக்கும். இந்தியா வல்லரசாக்க முடியும். எனவே புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கான அதிமுகவினர் உழைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கூட்டத்தில் மின்துறை அமைச்சர் ரா.விஸ்வநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதிதுறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொருளாளர் வரகூர் அ.அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் நன்றி கூறினார்.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

காவிரி: மத்திய அரசு கேலிப் பொருளாகி விடக்கூடாது: இராமதாசு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கேலிப் பொருளாகி விடக்கூடாது: இராமதாசு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கேலிப் பொருளாகி விடக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக, அக்டோபர் 15ஆம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஆணையமும், உச்சநீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
இந்த நிலையில் புது தில்லியில் நேற்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வரும் 16 முதல் 31ஆம் தேதி வரை வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் மொத்தம் 8.85 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான துருவ் விஜய்சிங் ஆணையிட்டுள்ளார்.
ஆனால், வழக்கம் போலவே, இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூறி, கூட்டத்திலிருந்து கர்நாடக தலைமைச் செயலாளர் வெளிநடபு செய்திக்கிறார்.
தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்ற கண்காணிப்புக் குழுவின் உத்தரவு ஆராயாமல் பிறப்பிக்கப்பட்ட ஒன்றல்ல. தமிழகத்திலும், கர்நாடகத்திலும் மத்தியக் குழுக்கள் நேரில் ஆய்வு செய்து, தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், கர்நாடகத்தில் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் இருப்பதாகவும் ஆதாரங்களுடன் அறிக்கை அளித்ததன் அடிபடையில் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிக்கிறது.
உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது, தமிழகத்திற்கு தருவதற்கு தண்ணீர் இல்லை என கர்நாடகம் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். தமிழகத்திற்கு தண்ணீர் தரவில்லை என்பதையே தங்களின் சாதனையாக காட்டி, வரும் தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கர்நாடக அரசு இவ்வாறு செயல்படுகிறது. தங்களின் சுயநலனுக்காக தமிழக விவசாயிகளின் நல னை பறிக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் கொடூர மனப்பான்மை கடுமையாக கண்டிக்கத் தக்கது.
காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையும், பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தின் உத்தரவையும் மதிக்காத கர்நாடக அரசு, தற்போது கண்காணிப்புக் குழுவின்
ஆணையையும் ஏற்க மறுத்திப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு மீண்டும் ஒரு சவால் விடுத்திருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தையும் மதிக்காத கர்நாடக அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாட்டின் ஒருமைப்பாட்டிலும், கூட்டாட்சி தத்துவத்திலும் அக்கறை உள்ளவர்கள் எதிர்பார்க்கின்றனர். இத்தகைய சூழலில் அரசியல் சட்டத்தின் 53ஆவது பிரிவின்படி கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கர்நாடக அரசு ஏற்பாடு செய்திருந்த விழாவில் பங்கேற்றிருப்பதும், கர்நாடக முதல்வர் அளித்த நினைவுப்பரிசை ஏற்றுக் கொண்டிருப்பதும், கர்நாடகத்தின் அரசியல் சட்ட மீறலை அங்கீகரிப்பதைபோல அமைந்துவிடும்.
அரசியல் சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசு மீது இதன்பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் மக்கள் மத்தியில், மத்திய அரசு கேலிப் பொருளாகிவிடும் ஆபத்து இருக்கிறது. எனவே, கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுத்து, தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதற்காக மத்திய அரசுக்கு அரசியல்ரீதியிலான நெருக்கடிகளை தமிழகம் தரவேண்டும். இது பற்றி விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும்படி தமிழக அரசுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை. 2003ஆம் ஆண்டில் இதேபோன்று காவிரி பிரச்சினை தீவிரமடைந்த நிலையில்,பா.ம.க. தான் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழகத்திற்கு நியாயம் வழங்கும்படி பிரதமரை கேட்டுக் கொண்டது. அதைவிடக் கடுமையான சூழல் இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். இல்லாவிட்டால், இந்த பிரச்னையில் ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதற்கான முயற்சிகளை பா.ம.க. மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

மத்திய அரசின் மெத்தனமே காரணம்: செயலலிதா

மத்திய அரசின் மெத்தனமே காரணம்: செயலலிதா

தினமணி First Published : 21 Aug 2012 03:11:45 AM IST


சென்னை, ஆக. 20: தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவத்தை மத்திய அரசு மெத்தனமாக கையாளுவதால், இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து அச்சமின்றி மீனவர்களைத் தாக்கியும், துன்புறுத்தியும் வருவதாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து பிரதமருக்கு அவர் திங்கள்கிழமை எழுதியுள்ள கடித விவரம்: கடந்த 18-ம் தேதி இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் தாக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டதுமான துயரமான சம்பவம் குறித்து தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 மீனவர்கள் கடந்த 17, 18-ம் தேதிகளில் கண்ணாடி இழையால் செய்யப்பட்ட 5 பிளாஸ்டிக் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் அனைவரும் கடந்த 18-ம் தேதி வெள்ளப்பள்ளம் அருகே 90 அடி ஆழம் கொண்ட கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு டி-146 எண் கொண்ட படகில் வந்த இலங்கை கடற்படையினர் மேற்கூறிய 5 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களைத் தாக்கியுள்ளனர். மேலும், மீனவர்கள் வைத்திருந்த ஐஸ் பெட்டி, உணவு மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பறிமுதல் செய்து கடலில் வீசியுள்ளனர். மீனவர்களின் வலைகளையும் வெட்டி எறிந்துள்ளனர்.தாக்கப்பட்ட மீனவர்களில் ராமையா மகன் குப்புசாமி என்பவர் வலதுகை மணிக்கட்டில் கத்தியால் வெட்டப்பட்டு காயமடைந்துள்ளார். மேலும் 7 மீனவர்கள் மீது கடற்படையினர் ரப்பர் தடியால் தாக்கியதில் அவர்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மீனவர்கள் கடந்த 19-ம் தேதி கரைக்குத் திரும்பிய பின்பு அனைவருக்கும் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.மீன்பிடித் தொழில் மூலம் குறைவான வருமானம் ஈட்டி வரும் ஏழை, அப்பாவி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இப்போதைய தாக்குதல் அவர்களின் மற்றோர் அக்கிரமமான செயலாகும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தடையின்றி தாக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சம்பவம் என்னை மேலும் துயரமடையச் செய்துள்ளது. நான் ஏற்கெனவே, 23.7.2012-ல் தங்களுக்கு எழுதிய கடிதத்தில், இப் பிரச்னையில் மத்திய அரசு தலையிடாவிட்டால் வரும் மாதங்களில் தாக்குதல் சம்பவம் தொடர வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தேன். இப்போதைய இந்தத் தாக்குதல் சம்பவம் எங்களது சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும் சம்பவத்தை மத்திய அரசு மெத்தனமாக கையாளுவதால் தைரியம் கொண்டுள்ள இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மீனவர்களை அச்சமின்றி தாக்கியும், துன்புறுத்தியும் வருகின்றனர்.இரு நாடுகளின் தூதரக அளவிலான கூட்டத்துக்குப் பின்பு வெளியிடப்பட்ட அறிவிப்பில், "மீனவர்கள் மீது பலப்பிரயோகம் செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது' என கூறப்பட்டது. அந்த அறிவிப்பு இப்போது காகிதத்தில் மட்டுமே உள்ளது. தூதரகப் பேச்சுவார்த்தை நடைமுறைகளை அலட்சியப்படுத்தி வரும் இலங்கை கடற்படையினர், இந்த அறிவிப்பையும் மீறியுள்ளனர்.எனவே, தாங்கள் இப் பிரச்னையை இலங்கை அரசின் கவனத்துக்கு தீவிரமாக கொண்டு செல்ல வேண்டும். பிழைப்புக்காக தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தடுக்கப்பட வேண்டும். இதற்கு கடற்படையினர் அடக்கி வைக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நடைபெறாமல் இருப்பதையும் தாங்கள் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக தங்களது விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன் என முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

புதன், 8 ஆகஸ்ட், 2012

பொது நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் தமிழில் வேண்டும்: பாமக

பொது நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் தமிழில் வேண்டும்: பாமக

தினமணி First Published : 08 Aug 2012 11:50:17 AM IST

Last Updated : 08 Aug 2012 12:02:29 PM IST

சென்னை, ஆக., 08 :  இந்தியாவில் தேசிய அளவில் நடத்தப்படும் அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளுக்கும் தமிழிலும் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக கோரியுள்ளது.இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட பிறமாநில மொழிகளிலும் தயாரித்து வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் 45 வேளாண்மை சார்ந்த கல்வி நிறுவனங்களும் நடத்தபட்டு வருகிறது. இவற்றில் சேருவதற்கான அனைத்திந்திய நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்களை தமிழில் தயாரித்து வழங்கும் திட்டம் இல்லை என்று தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி கோரப்பட்ட வினாவிற்கு இந்நிறுவனம் பதிலளித்துள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்திய வேளாண் ஆராய்ச்சிகழகத்தின் கட்டுபாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வுகள் கடந்த 2000மாவது ஆண்டு வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டுவந்தன. 2001ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்தியிலும் வினாத்தாள் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் ஆங்கிலம் தெரியாத, இந்தி மொழி பேசும் மாணவர்கள் கூட இத்தேர்வுகளில் எளிதாக வெற்றிப்பெற முடிகிறது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற நுழைவுத்தேர்வுகளில் மொத்தமுள்ள 5832 இடங்களில் 1412 இடங்களை இந்தி வினாத்தாட்களை கொண்டு நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்கள் பிடித்துள்ளனர். கோவை வேளாண் பல்கலைக்கழத்திலிருந்து 92 இடங்களும், சென்னையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பலகலைக்கழகத்தில் இருந்து 6 இடங்களும், மத்திய தொகுப்புக்கு ஒதுக்கபட்டு, அனைத்திந்திய நுழைவுத்தேர்வுகளின் மூலமே அவை நிரப்பப்படுகின்றன. ஆனால் வினாத்தாள்கள் தமிழில் வழங்கப்படுவதில்லை என்பதால் இவற்றில் ஓர் இடம் கூட தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை அளிக்கும் உண்மையாகும். மற்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளிலும் இந்தி மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகள் மட்டுமே பயிற்று மொழிகளாக உள்ளன. அவ்வாறு இருக்கும்போது அனைத்திந்திய அளவில் நடைபெறும்பொது நுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாட்களை இந்த 9 மொழிகளிலும் தேவைக்கேற்ப தயாரிக்காமல் இந்தியில் மட்டும் தயாரிப்பது மற்ற மொழி பேசும் மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழ் பேசும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். இதன்மூலம் இந்தி படிக்காத மாணவர்களை இரண்டாம் தர மாணவர்களாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது.தமிழ்நாட்டில் ஒவ்வொரு பொதுத்தேர்வை 8 இலட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களில் 75 விழுக்காட்டினர், அதாவது 6 இலட்சம் பேர் தமிழ் வழியில் படித்தவர்கள் ஆவர். பொதுநுழைவுத் தேர்வுக்கான வினாத்தாட்கள் தமிழில் தயாரிக்கபடாததால் இந்த மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்ற, அனைத்திந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாட்களை தமிழ் மொழியிலும் வழங்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 17 ஜூலை, 2012

தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கிறது மத்திய அரசு: முதல்வர்

தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கிறது மத்திய அரசு: முதல்வர் 
தினமலர்

சென்னை:""இலங்கை அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சியளிப்பது, தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும்; உடனடியாக, அவர்களை நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டும் என்று, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:இலங்கையில், போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை, போர்க் குற்றவாளிகளாக அறிவித்து, ஐ.நா., சபைக்கு, இப்பிரச்னையை இந்தியா கொண்டு செல்ல வேண்டும்.அத்துடன், இலங்கை முள்வேலி முகாம்களில் வாடி வரும் தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவது, சிங்களர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியல் சாசன உரிமைகளை, தமிழர்களுக்கும் அளிப்பது என்பது போன்ற கவுரவமான வாழ்க்கை, அவர்களுக்கு கிடைக்கும் வரை, மற்ற நாடுகளுடன் சேர்ந்து, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று, தமிழக சட்டசபையில், கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை, தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

ஆனால், தமிழர்களின் உணர்வுகளை மிதித்து நசுக்கும் வகையிலும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையிலும், மத்திய அரசு இருப்பதுடன், தொடர்ந்து இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு, இங்கு பயிற்சியளிப்பதில் முக்கியத்துவம் வழங்கி வருவதாக, உலகத் தமிழர்கள் கருதுகின்றனர்.இலங்கை விமானப் படையைச் சேர்ந்த ஒன்பது விரர்களுக்கு, சென்னை தாம்பரம் விமான பயிற்சி நிலையத்தில் பயிற்சியளிக்கப்பட்ட போது, அதை கண்டித்ததுடன், அந்த வீரர்களை உடனடியாக சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்ப, கோரிக்கை விடுத்திருந்தேன்.ஆனால், அவர்களை திருப்பியனுப்பாமல், பெங்களூருவில் உள்ள எலஹெங்கா விமான பயிற்சி மையத்தில், மத்திய அரசு பயிற்சியளித்து வருகிறது. தொடர்ந்து, டில்லியில் உள்ள தேசிய ராணுவ அகடமியில் பயிற்சி பெற்று வரும், இலங்கை விமானப் படை அதிகாரி ஜெகத் ஜுலங்கா டயாஸ் மற்றும் கடற்படை அதிகாரி ரணசிங்கே மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் 25 பேர், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டனில், ராணுவ பயிற்சிக்காக வந்துள்ளதாக அறிந்தேன். டில்லியில் வழங்கப்படும் பயிற்சின் ஒரு பகுதியாக, இங்கு பயிற்சியளிக்கப்படுவதாக தெரிகிறது.

இலங்கை படையினருக்கு இங்கு பயிற்சியளிப்பதும், தமிழகத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடக்கும் பயிற்சிகளை பார்வையிடுவதற்கு அனுமதி அளித்திருப்பதும், தமிழக மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும். மத்திய அரசின் இந்த பிடிவாதப் போக்கு, தமிழக மக்களிடம், பெரும் கொந்தளிப்பையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.எனவே, இந்தியாவில் எங்கும், இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளிக்கக் கூடாது என்று, பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், பயிற்சி பெற வந்துள்ள அவர்களை, உடனடியாக அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 27 நவம்பர், 2011

Ilangai is better than India - Visayakanth : இந்திய அரசைவிட இலங்கை அரசே மேல்: விசயகாந்த்


இந்திய அரசைவிட இலங்கை அரசே மேல்: விஜயகாந்த்

First Published : 27 Nov 2011 01:13:36 PM IST


சென்னை, நவ.27: கடலோர காவல்படை நீதிமன்றத்தில் அளித்துள்ள பதிலைப் பார்க்கும்போது, இந்திய அரசைவிட இலங்கை அரசே எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:      இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழ்நாட்டு மீனவர்கள் கடல் எல்லையை கடந்து இலங்கைப் பகுதிக்கு செல்வதால்தான் ஆபத்து ஏற்படுவதாகவும், கடல் எல்லையில் இருந்து 5 மைல் தூரம் வரை மீன் பிடிக்கக் கூடாத பகுதி என்று அறிவித்து விட்டால் இந்தப் பிரச்னை எழாது என்றும் தெரிவித்துள்ளது. இது பொறுப்பற்ற, விஷமத்தனமான, தீமை விளைவிக்கக் கூடிய போக்காகும்.      இந்த கடல் பகுதியில் காலங்காலமாக இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடித்து வருகின்றனர். விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் பெயரைச் சொல்லி இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழப்பும், பலர் படுகாயங்களுக்கு ஆளாகியும், மீன் பிடித் தொழிலையே விட்டு விடுகிற அளவுக்கு நிலைமை முற்றியது. ஆனால் இலங்கை அரசு இப்பொழுது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அறவே இல்லாமல் செய்து விட்டோம் என்று கொக்கரிக்கிறது.      இதற்குப் பிறகும் கூட, இலங்கை அரசை சேர்ந்த கப்பல் படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை தாக்குவதும், அவமானப்படுத்துவதும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், படகுகளையும் கைப்பற்றுவது என்ன நியாயம்? இந்தக் கொடுமையில் இருந்து நம்முடைய மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.      இந்திய கடலோர காவல்படை அளித்துள்ள பதிலை பார்க்கிறபொழுது, இலங்கை அரசே இந்திய அரசை விட எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது. இலங்கை அரசாவது அதிகாரி மட்டத்தில் இது பற்றி பேசி தீர்வு காணலாம் என்கின்றனர். ஆனால் இந்திய அரசின் கடலோர காவல்படை அளித்துள்ள பதிலை பார்க்கும்பொழுது நமது மீனவர்கள் இந்த கடல் பகுதியில் மீன்களையே பிடிக்க முடியாது என்ற நிலை உள்ளது. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் நமது மீனவர்களை இந்திய கடலோர காவல் படையே தாக்கிய சம்பவங்களும் உண்டு.      கிணறு வெட்ட போய் பூதம் புறப்பட்டதைப் போல, நமது மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்போய் முதலுக்கே மோசம் என்ற அடிப்படையில் இந்திய அரசின் பதில் அமைந்துள்ளது. உண்மையிலேயே நம்முடைய மீனவர்களும் இந்திய குடிமக்கள் என்ற உணர்வு இந்திய அரசுக்கு இருக்குமானால் உடனடியாக மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை திரும்பப் பெற வேண்டும். இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி இந்திய இலங்கை கடல் பகுதியை இரு சாராரும் தாராளமாக மீன் பிடிக்க வழிவகை காண வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.      1974 முதல் இன்று வரை இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. மாநில முதலமைச்சர்கள் மத்திய அரசுக்கு கடிதங்களை எழுதத் தவறுவதில்லை. மத்திய அரசோ அவ்வப்பொழுது சமாதானம் சொல்வதும், இலங்கைக்கு தூதரை அனுப்பி வைப்பதும் வாடிக்கை. ஆனால் மீனவர்களின் வாழ்விலோ விடியல் ஏற்படவில்லை. இப்பொழுதாவது இந்திய அரசு தன் தவறை உணர்ந்து இலங்கை அரசின் ஏஜெண்ட் போல செயல்படுவதை விட்டுவிட்டு இந்தியப் பிரஜைகளை காப்பாற்றுவதும், அவர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தருவதும் தன் முதல் கடமை என்று உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

Central Government has betrayed Tamils​​: Vaiko charges : தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு


தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம்:
வைகோ குற்றச்சாட்டு

First Published : 27 Nov 2011 12:52:51 PM IST


சென்னை, நவ.27: கடலோரக் காவல்படையின் நடவடிக்கையின்மூலம் தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு செய்துவரும் துரோகம் வெளியில் தெரியவந்துள்ளது என மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தங்களுக்கு உரிமையுள்ள கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அனுபவித்து வருகின்ற மீன்பிடிக்கும் உரிமையின்படி தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போதெல்லாம், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்குவதும், ஆடைகளைப் பறித்து சித்ரவதை செய்து கடலில் வீசுவதும், சுட்டுக்கொல்வதும் வாடிக்கையாகி விட்டது.இதுவரை தமிழக மீனவர்கள் 600 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் இப்படி கொல்லப்பட்டதற்கு தமிழகத்திலே இருந்து பலத்த கண்டனம் எழுந்தும், இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசு கிஞ்சிற்றும் அதனை பொருட்படுத்தவில்லை. இப்போது குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்பதுபோல, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்தியாவின் கடலோரக் காவல்படை ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. தமிழக மீனவர்களை குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை மீனவர்கள் மீன் பிடிப்பதாகவும், இலங்கை தடை செய்த மீன் வலைகளைப் பயன்படுத்துவதாகவும் அபாண்டமான புகாரைச் சொல்லியுள்ளது.சர்வதேச கடல் எல்லையில் இருந்து நமது கடல்பகுதியின் ஐந்து கடல் மைல் தூரத்தை மீன் பிடி தடை மண்டலமாக தமிழ்நாடு அறிவிக்க வேண்டுமென்றும் இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோதும், சுட்டுக் கொல்லப்பட்டபோதும் ஒருமுறை கூட நம் மீனவர்களை பாதுகாக்க இந்திய கடலோர காவல்படை எந்த நடவடிக்கையும் எடுத்தது கிடையாது. பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் புகார் கொடுக்கச் சென்றபோதெல்லம் அவர்களை அவமானப்படுத்தி அடித்து விரட்டியது.இதனுடைய பின்னணியை தமிழக மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். 2004 ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பிறகுதான், இலங்கை கடற்படையின் அட்டூழியம் அதிகமாகியது.2004 செப்டம்பர் 16 ஆம் தேதி இலங்கைக்குச் சென்ற இந்திய கடற்படை தளபதி அருண்பிரகாஷ் தமிழக மீனவர்களுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் விடுதலைப் புலிகளை கண்டனம் செய்தும், சிங்கள அரசின் விருந்தாளியாக கொழும்பில் கூறியதைக் கண்டித்து செப்டம்பர் 18 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து, கடிதம் மூலமாகவே தெரிவித்தேன்.தொடர்ந்து இந்திய கடற்படை தளபதிகள் இலங்கைக்குச் சென்று தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திய இனக்கொலை யுத்தத்திற்கு உதவியாக ஆலோசனை வழங்கி வந்தனர்.2007 ஆம் ஆண்டில் இந்திய - இலங்கை கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு நேரடியாகவே தமிழின அழிப்பு யுத்தத்திற்கு இலங்கைக்கு பலவகையிலும் உதவி செய்தனர். விடுதலைப் புலிகளோடு நடத்திய யுத்தத்தில் இந்திய கடற்படை உதவியினால்தான் நாங்கள் வெற்றி பெற முடிந்தது என்றும், விடுதலைப் புலிகளின் கப்பல்களை மூழ்கடித்தோம் என்றும் இலங்கை கடற்படை துணைத் தளபதி தம்பட்டம் அடித்தான். இந்திய கடல் எல்லையில் இலங்கைக் கடற்படையினர் கடலுக்குள் கண்ணி வெடிகளை வைக்க இந்திய அரசு அனுமதித்தது என்பது உலகத்தில் எந்த நாடும் தன்னுடைய இறையாண்மையை காவு கொடுக்க முன்வராத அயோக்கியத்தனமான செயலாகும்.இந்திய கடற்படை இலங்கைக்கு இப்படி உதவி வருவதனால்தான் கடலோர காவல்படை இவ்வளவு மமதையோடு தமிழக மீனவர்களுக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் பிரமாண வாக்குமூலத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் மத்திய அரசு இலங்கையில் சிங்களவர்  நடத்திய ஈழத்தமிழர் படுகொலை யுத்ததில் உதவி செய்து பங்கேற்ற துரோகத்தின் தொடர்கதையாகத்தான் கடலோர காவல்படை இப்பொழுது செயல்படுகிறது. மத்திய அரசினுடைய போக்கைத்தான் அது பிரதிபலிக்கிறது. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்ற பழமொழிக்கேற்ப தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செய்துவரும் துரோகம் இதன்மூலம் மேலும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதனால்தான் இந்திய கடலோர காவல்படை சிங்கள அரசின் கூலிப் படையாக செயல்படுகிறது.ஏற்கனவே வேல்பாய்ந்த தமிழர்களின் உள்ளத்தில் சூட்டுக்கோலைத் திணிக்கும் வகையில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. கடலோர காவல்படை தன் பிரமாண வாக்குமூலத்தை திரும்பப் பெற ஆணையிடுவதோடு, கண்டனமும் தெரிவிக்க மத்திய அரசு முன்வரவேண்டும். இல்லையேல் தாய்த் தமிழகத்திலுள்ள தமிழர்கள் உள்ளத்தில் மேலும் மேலும் வேதனையையும் வெறுப்பையும், இந்திய அரசின் மீது நம்பிக்கையின்மையையும் விதைக்கின்ற குற்றச் சாட்டுக்கும் அதன் எதிர்கால விளைவுகளுக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான் பொறுப்பாகும் என எச்சரிக்கிறேன்.

வியாழன், 29 செப்டம்பர், 2011

இப்படித்தான் தள்ளிக்கிட்டு போகணும்!

இப்படித்தான் தள்ளிக்கிட்டு போகணும்!வேறு வழி?!
கருத்துகள்

ஓங்கி மிதித்து கீழே தள்ள வேண்டிய அரசு இது.
By Sankaran
9/29/2011 1:54:00 PM
எல்லாம், நம்மளோட நேரம்டா சாமி. இப்படியிருந்தால், அப்புறம் எப்படி நாடு உருப்படும்?
By P.T.முருகன்.
9/29/2011 7:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 25 ஜூலை, 2011

இடச் சிக்கல் - மத்திய அரசிடம் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் முறையீடு- மாநில அரசின் முடிவுக்குக் காத்திருப்பு


மத்திய அரசு தன்னுடைய அலுவலகம் என்ற கடமை உணர்ச்சியுடன் சிக்கலை விரைவில் தீர்க்க வேண்டும். தமிழக அரசு தமிழ்மொழி தொடர்பான அமைப்பிற்கு உதவ  வேண்டியது கடப்பாடு என்ற நிலையில் உதவ வேண்டும்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

இடப் பிரச்னை: மத்திய அரசிடம் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முறையீடு- மாநில அரசின் முடிவுக்கு காத்திருப்பு

First Published : 25 Jul 2011 02:31:01 AM IST


சென்னை, ஜூலை 24: இடப் பிரச்னையில் எந்தவொரு முடிவும் ஏற்படாத காரணத்தால், மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையிடம் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முறையீடு செய்துள்ளது. அதேசமயம், தமிழக அரசு மாற்று இடம் வழங்கும் என்றும் தமிழாய்வு நிறுவனம் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.  தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததைத் தொடர்ந்து, அதற்கென தனியாக ஆய்வு நிறுவனத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் விளைவாக, சென்னையில் செம்மொழிவுத் தமிழாய்வு மத்திய நிறுவன அலுவலகம் கடந்த 2008-ம் ஆண்டு மே 19-ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த ஆய்வு நிறுவனத்தின் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  முனைவர் பட்டத்துக்கு மாதத்துக்கு ரூ.12 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும், முனைவர் பட்ட மேற்படிப்புக்கும் தனியாக உதவித் தொகை அளிக்கப்படுகிறது. தமிழ் மொழியில் பல்வேறு ஆய்வுகளையும், பணிகளையும் மேற்கொள்ளும் தமிழறிஞர்களுக்கு பல்வேறு விருதுகளும் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படுகின்றன.  தொல்காப்பியர் விருது, தமிழ் மொழியில் ஆய்வு மேற்கொள்ளும் வெளிநாட்டவர் அல்லது வெளிநாடு வாழ் இந்தியருக்கு குறள்பீடம் விருது, இளைய தலைமுறையினரை ஊக்குவிக்க தனியாக விருதும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  இடப் பிரச்னை: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகமும், நூலகமும், சென்னை கடற்கரை சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செயல்பட்டு வந்தது. இடப்பிரச்னை காரணமாக, அந்த நூலகத்தை சென்னை கோட்டையில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்துக்கு மாற்றியது அப்போதைய திமுக அரசு.  நூலகம் முழுமையான வடிவம் பெற்று பணிகள் தொடங்கிய நேரத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, புதிய தலைமைச் செயலகத்தில் இருந்து பழைய தலைமைச் செயலகத்துக்கு சட்டப் பேரவை இடமாற்றம் செய்யப்பட்டது. செம்மொழி தமிழாய்வு நிறுவன நூலகத்தில் பயன்படுத்தப்பட்ட நூல்கள் அனைத்தும் புதிய தலைமைச் செயலகத்தில் உள்ள மூன்று அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், நூலகம் செயல்படாமல் முடங்கியுள்ளது.  செயல்பட வைக்கத் தீவிரம்: செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் நூலகமும், அலுவலகமும் சீராக செயல்பட பல்வேறு நடவடிக்கைகளை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.  சென்னையில் பிரதான இடத்தில் வாடகைக் கட்டடத்தைக் கோரியது அந்த நிறுவனம். அமைந்தகரையில் பல ஆயிரம் ரூபாய் மாத வாடகையில் கட்டடம் ஒன்று பேசப்பட்டு வருகிறது. அதேசமயம், இந்த அளவுக்கு வாடகை கொடுப்பதை விட, சென்னை புறநகர்ப் பகுதியில் தமிழாய்வு நிறுவனத்துக்கென ஒதுக்கப்பட்ட நிலத்தில் தாற்காலிக கட்டடம் கட்டலாம் என்ற யோசனையும் கூறப்பட்டுள்ளது.  இதுகுறித்து, மத்திய அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் கலந்து பேச தமிழாய்வு நிறுவன அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  மத்திய அரசிடம் முறையீடு: இடப் பிரச்னை தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வருகிறது. இங்கு நிலவும் இடப்பிரச்னை குறித்து மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளது செம்மொழி தமிழாய்வு நிறுவனம்.  அதேசமயம், தமிழக அரசின் முடிவுக்காகவும் தொடர்ந்து காத்திருக்கிறது. மாநில அரசின் சார்பில் ஏதாவது விசாலமான இடம் ஒதுக்கப்படும் என தமிழாய்வு நிறுவனம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே, சென்னை புறநகர்ப் பகுதியில் ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டடம் கட்டும் பணியையும் முழுவீச்சில் முடிக்கும் பணியில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தினர் இறங்கியுள்ளனர்.

ஞாயிறு, 19 ஜூன், 2011

Seeman questioned the central govt. about the resolutions against the genocide.- தமிழக அரசின் இலங்கைத் தீர்மானத்துக்கு மத்திய அரசின் பதில் என்ன?: சீமான் கேள்வி

தமிழக அரசின் இலங்கைத் தீர்மானத்துக்கு மத்திய அரசின் பதில் என்ன?: சீமான் கேள்வி

First Published : 19 Jun 2011 03:20:53 AM IST


சென்னை, ஜூன் 18: இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கேள்வி எழுப்பினார்.ஈழத் தமிழர்களைக் காக்கும் பொருட்டு இலங்கைக்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்துக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் சீமான் பேசியதாவது:இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுருத்தியும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.தேர்தல் நேரத்தில் இலங்கைப் பிரச்னைக்கு தனி ஈழம்தான் தீர்வு என ஜெயலலிதா கூறியிருந்தார். அதை தேர்தல் நேரத்துப் பசப்பு வார்த்தைகள் என அப்போது சிலர் கூறினர். தேர்தலில் அதிமுக வென்றதோடு மட்டுமல்லாமல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தையும் சட்டப் பேரவையில் நிறைவேற்றியபோது, இது வெறும் தீர்மானத்தோடு நின்றுவிடும் என்றும் சிலர் கூறினர்.ஆனால் அண்மையில் தில்லிக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த முதல் கோரிக்கையே இலங்கைப் பிரச்னை பற்றித்தான். அதனால் ஈழப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.ஒரு நடிகை என் மீது புகார் கொடுத்ததை வைத்து, என்னைக் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸôர் சுவரொட்டிகள் ஒட்டுகின்றனர். தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான முல்லைப் பெரியார், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரி நீர் பிரச்னை என எந்தப் பிரச்னைக்காவது காங்கிரஸôர் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனரா?இதே நிலை நீடித்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுகதான் கைப்பற்றும் என்பது நிச்சயம்.காங்கிரஸின் தயவு அதிமுகவுக்குத் தேவையில்லை. அதிமுகவின் தயவுதான் காங்கிரஸýக்குத் தேவை. எனவே அதிமுக ஒருபோதும் காங்கிரஸýடன் கூட்டணி வைக்கக்கூடாது என்றார் சீமான்.இந்தப் பொதுக் கூட்டத்தில் நடிகர் சத்யராஜ், திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, செல்வபாரதி கலந்துகொண்டனர்.

வெள்ளி, 10 ஜூன், 2011

will D.M.K. continue in the central govt.? : மத்திய அமைச்சரவையில் திமுக தொடருமா? இன்று முடிவு

சிங்கள அரசுடன் மத்திய அரசு கூடா நட்பு கொண்டதே ஈழத்தமிழர்க்கும் அதனால் ஆட்சிக்கும் பெருங்கேடாய் அமைந்தது. எனினும் கலைஞர் அதைக் கூறும் உறுதி பெற்றிருக்கவில்லை. காங்.உடன் தி.மு.க. கூடா நட்பு கொண்டதே பெருந்தோல்விக்குக் காரணம். எனினும் கலைஞர் அதை வெளிப்படுத்தும் துணிவு பெற்றிருக்கவில்லை. மத்திய ஆட்சியில் பெயரவிற்கேனும் பங்கு  இல்லாவிடில் பெருந் தொல்லை. எனவே, காங்.ஐ எதிர்க்க முடியாது. தொண்டர்கள் அ.தி.மு.க.வுடன் நட்பு கொண்டு கட்சி மாறும் சூழல் வரக்கூடாது என்பதற்காகக் கட்சியினருக்குத்தான் அதனைக் கூடா நட்பாகக் கூறியுள்ளார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


மத்திய அமைச்சரவையில் திமுக தொடருமா?இன்று முடிவு

First Published : 10 Jun 2011 02:10:39 AM IST

Last Updated : 10 Jun 2011 05:06:07 AM IST

சென்னை ஜூன் 9: திமுக - காங்கிரஸ் உறவு தொடர்பாக, வெள்ளிக்கிழமை நடக்கும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  அக் கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் மாலை 4.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் வளாகத்தில் இக் கூட்டம் நடக்கிறது.  பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின். முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.  சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியானதற்குப் பிறகு கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் முறைப்படியான முதலாவது கூட்டம் இதுவாகும்.  தேர்தல் தோல்விக்குக் காரணம், "கூட்டணிக் கட்சிகள் கேட்டுப் பெற்ற இடங்களா, அவர்களுக்கு விட்டுக் கொடுத்த இடங்களா' என்று கருணாநிதி கூறியுள்ளார். கூட்டணி ஆட்சிதான் வரும் என்றால் அதை தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்ற கருத்தை காங்கிரஸ் தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் கருணாநிதி.  இருந்தாலும் காங்கிரஸ் தலைமை பிடிவாதமாக இருந்து 63 தொகுதிகளைப் பெற்றதால், திமுக 118 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டது. எனவே கூட்டணி ஆட்சி என்ற சூழ்நிலையை தவிர்க்கவே மக்கள் விரும்புவர் என்ற கருணாநிதியின் கருத்தை உறுதி செய்வதைப் போலவே தேர்தல் முடிவு அமைந்துவிட்டது.  அதைத் தொடர்ந்து தனது பிறந்த நாளன்று அண்ணா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, கூடாநட்பு கேடாய் முடியும் என்பதை தொண்டர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார். இதற்கு பல அர்த்தங்கள் கூறப்பட்டாலும், அதில் ஒன்று காங்கிரஸ் உறவைக் குறிப்பது என்று காங்கிரஸ் தரப்பினரே கருதுகின்றனர்.  இதுதவிர, கருணாநிதியின் மகள் கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு 18 நாள்களாகிவிட்டன.  திருவாரூரில் கடந்த 5-ம் தேதி நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, மத்திய அரசு உத்தரவாலோ அல்லது அலட்சியத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ கனிமொழி சிறை செல்ல நேரிட்டது என குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. நடத்தும் விசாரணையில் கனிமொழி கைதாகி இருப்பதால் இதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.  சி.பி.ஐ. நீதிமன்றத்திலும், தில்லி உயர் நீதிமன்றத்திலும் கனிமொழியின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. கருணாநிதிக்கு இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.  மாநிலத்தில் ஆட்சி இல்லாத சூழ்நிலையில், மத்திய ஆட்சியில் நீடிப்பதே பாதுகாப்பானதாக இருக்கும் என திமுக தலைவர்கள் கருதி வந்தனர்.  ஆனால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காததும், மாநிலத்தில் ஆட்சியை இழக்க காரணமாக இருந்தது என்ற கருத்தும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவே இருக்கிறது.  2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த ஆ. ராசா சிறை சென்று சுமார் 4 மாதங்கள் ஆகிவிட்டன. கனிமொழியும் சிறையில் உள்ளார். மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், வலுப்பெற்று வருவதால் அவரும் மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அடுத்தடுத்து திமுக அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் வருவது குறித்து கட்சித் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரிகிறது.  இவ்வளவு நடந்த பிறகும் காங்கிரஸ் கட்சியுடன் உறவு இருந்து எதைக் காப்பாற்றப் போகிறோம் என்ற கருத்து கட்சித் தலைவர்களிடம் காணப்படுகிறது.  இதற்கிடையில், வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ள திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, ""தேர்தலில் திமுக இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்ததற்கான காரணங்களில் ஒன்று மத்திய ஆளும் காங்கிரசுடன் இருந்து அதன் பல்வேறு செயல்களுக்கும் பழி ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதுதான்'' என கூறியுள்ளார்.  திமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் இப்படி ஒரு கருத்தை வீரமணி தெரிவித்திருக்க மாட்டார் என்றே அரசியல் வட்டாரத்தில் கருத்தாக உள்ளது.  இவைதவிர, இக் கூட்டத்தில் தலைவர்கள் பேசும்போது தேர்தல் தோல்விக்கான காரணங்களைப் பட்டியலிடுவார்கள். அதிலும் காங்கிரஸ் மீது குறைகள் தெரிவிக்கப்படலாம். எனவே காங்கிரஸ் கட்சியுடன் உறவைத் தொடருவதா, மத்திய அமைச்சரவையில் பங்கேற்பைத் தொடருவதா அல்லது வெளியில் இருந்து ஆதரவா என்று முக்கிய முடிவு ஏதாவது இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்திவைப்பு, புதிய தலைமைச் செயலக பணிகள் நிறுத்தம் போன்றவற்றைக் கண்டித்து ஏற்கெனவே மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக கட்சித் தலைவரிடம் கலந்து பேசி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.  அதுபோன்ற போராட்ட முடிவுகளும் எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

புதன், 8 ஜூன், 2011

தில்லியின் அதிகார மையத்தில் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியல்

தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!




                      தில்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளாதான் அனைத்து நன்மைகளையும் அள்ளிக் கொண்டு போகும்! காரணம் அனைத்துத் துறைகளையுமே அவர்கள் தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்! கருணாநிதி தன் கட்சிக்கு அமைச்சர் பதவிகளைத் தேடும்போது இரண்டு காரியங்களை மட்டுமே கருத்தில் கொள்வார்.
முதலாவதாக தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அந்தப் பதவிகள் வேண்டும் இரண்டாவதாக அப்பதவிகள் காசு பார்க்கக்கூடியதாக அது இருக்க வேண்டும்! இனமாவது மண்ணாங்கட்டியாவது!ஆட்சி அதிகாரத்தை வந்தேறிகளிடம் விட்டால் இதுதான் கதி! கருணாநிதியைச் சொல்லிக் குற்றமில்லை! வாக்களித்து ஆட்சியில் குந்த வைத்த நீயும் நானுமே இதற்குக் காரணம்!
தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்! உறிகிறார்கள்! நாட்டின் குருதியை உறிஞ்சி எடுத்து தன் மக்களுக்கும் மாநிலத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்கிறார்கள்!
மலையாளிகளின் முதல் எதிரி தமிழர்கள்தான்! ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கும் கொடூரத்திற்கும் முற்றாகத் துணைபோனவர்கள் அவர்களே! நமது மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் வண்டிகளை அவர்கள் நடத்தும் விதம் அடிமையினும் கேடு கெட்டது! ஆனால் நாமோ தமிழகத்தில் அவர்களின் நிறுவனங்களுக்குச் சென்று பொருள் வாங்கி, சாயா குடித்து கொழுக்க வைக்கிறோம்! சிந்தியுங்கள்
  1. என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
  2. வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
  3. டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,
  4. என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
  5. பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,
  6. கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,
  7. ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
  8. மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
  9. நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,
  10. சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,
  11. ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
  12. சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,
  13. கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
  14. பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,
  15. சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,
  16. சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
  17. வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
  18. ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,
  19. கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
  20. கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,
  21. ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,
  22. வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
  23. பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
  24. ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,
  25. சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,
  26. ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
  27. பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
  28. கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்,
  29. சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர் ,
  30. நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்,
  31. பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்,
  32. ரகு மேனன் - செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ,
  33. ராமச்சந்திரன் - நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ,
  34. ரீட்டா மேனன் - ஜவுளிச் துறை செயலாளர்,
  35. கங்காதரன் - கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்,
  36. சாந்தா ஷீலா நாயர் - குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்,
  37. விசுவநாதன் - சட்டத்துறை செயலாளர்,
  38. மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.
‘‘நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.
அவர்கள்:
  • ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
  • வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
  • விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
  • உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
  • ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது,
வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!
சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான். சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள்.
அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.

இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது
--
என்றும் தமிழ் உணர்வுடன்
அன்புடன்,

திங்கள், 24 ஜனவரி, 2011

central govt.asked ambassador report about assassination of fisherman:

எதற்கு அறிக்கை கேட்கிறது? ஒரு வேளை மூவரையுமே அழித்திருந்தால் சான்று இல்லாமல் போய் இருநதிருக்குமே! ஏன், பிற இருவரை விட்டு வைத்தீர்கள் என்று சிங்கள அரசிடம் கேட்டுச் சொல்லுமாறு கேட்டிருப்பார்களோ! நொடிக்கு நொடி சிங்கள அரசை நட்பு நாடு என்று சொல்லும் இந்தியஎன்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது தெரிந்ததுதான். தமிழ் மக்கள்தாம் இப்படுகொலைகள் நிறுத்தப்பட என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முடிவெடுத்துக் கட்சிச் சார்பின்றிச் செயல்பட வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மீனவர் படுகொலை: தூதரிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

First Published : 23 Jan 2011 05:30:53 PM IST

First Published : 23 Jan 2011 05:30:53 PM IST

புதுதில்லி, ஜன.23- தமிழக மீனவர் படுகொலைகள் தொடர்பாக அறிக்கை சமப்பிக்குமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உத்தரவின் இந்தியத் தூதரிடம் அறிக்கை கேட்டு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.நேற்று, கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஜெயக்குமார் என்பவரை இலங்கை கடற்படையினர் கழுத்தை இறுக்கி படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவத்துக்கு முதல்வர் கருணாநிதி, வைகோ, ராமதாஸ் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், மீனவர் படுகொலை தொடர்பாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. மேலும், அந்த சம்பவம் தொடர்பான தகவல்களை அளிக்குமாறு தமிழக அரசையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துகள்

அறிக்கை எதற்கு? எத்தனை பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்,இன்னும் எத்தனை பேரை கொலை செய்வார்கள் என்பதை தெரிந்துகொல்லவா. கருணாநிதி மனதில் கொள்ளுவார்.இவர்களுடைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது,சந்தர்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.எல்லோரும் ஓட்டு சாவடி சென்று ஓட்டு எனும் ஆயுதத்தால் கருணாநிதி,சோனியாவை ஒழித்து கட்டுங்கள்.
By T.Selvan,Nellai
1/23/2011 10:52:00 PM
இன்று ஜெயகுமாருக்கு நடந்தது நாளை நமக்கும் நடக்கலாம் ,இது வரை அறநூருக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களவர்கழல் கொல்ல பட்டு உள்ளனர் ,இதற்கும் கருணாநிதி கடிதம் எழுத போகிறாரா?தமிழகத்தில் கூட தமிழனால் நிம்மதியாக இருக்க முடிய வில்லை என்றால் இந்த மானம் கெட்ட அரசாங்கம் நமக்கு எதற்கு ?மீனவர் கொலை பற்றி பேசினால் தேசிய பாதுகாப்பு சட்டமா ,இந்த கொலைகார அரசை வீட்டுக்கு அனுப்புங்கள் ,
By T.Selvan,Nellai
1/23/2011 10:41:00 PM
ஏன் டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து கேட்க பயமா? தம்மாத்தூண்டு இலங்கை அரசைக்கண்டே இவ்வளவு பயப்படும் இந்தியா ஐ ந பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ஆசைப்படுவது வெட்கக்கேடு. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நாங்கள் ஒரு வல்லரசு என்று பீற்றிக்கொண்டு அலைவதுதான். தன்னிடம் பத்து நாட்களாக பல மீனவர்களை இலங்கை கடற்ப்படை கொன்றுவிட்டதை மு க தெரிவித்ததாக பிரணாப் முக்கர்ஜி கூறுகிறார். ஏன் இது மத்திய அரசுக்கு நேரடியாக தெரியாதா? என்ன நாடகம் இது?
By திண்டல் சங்கர நாராயணன்
1/23/2011 7:45:00 PM
i give the srilanka report. on that day our navy no one visited on the sea. On such incident was happened. Our India government also accept that report.
By mohan
1/23/2011 6:03:00 PM

வியாழன், 16 டிசம்பர், 2010

ஒரே கல்லில் ௨ மாங்காய். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிப்பிற்கான சதியாகவும் பயன்படும். ஊழல்களில் இருந்து மக்கள் கவனத்தைத் திருப்பும் பரபரப்புச் செய்தியாகவும் பயன்படும். இதுதான் மத்திய அரசின்  நோக்கம். ஆனால், தொடர்புடையவர்களுக்கே  அரசின் புரளி எனத் தெரியும் என்பதால் இதனால் என்ன பயனும்  இல்லை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


மன்மோகன், கருணாநிதி, சிதம்பரம் மீது தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்

First Published : 15 Dec 2010 11:58:00 PM IST

Last Updated : 16 Dec 2010 01:14:30 AM IST

சென்னை, டிச. 15: பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோர் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மத்திய உளவுத் துறையிடம் இருந்து இதுதொடர்பான எச்சரிக்கை வந்துள்ளதை தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போரில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது. ஆனால், அவர்கள் இந்தியாவில் ஒருங்கிணைய முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதி ஆகியோர் தமிழகத்தில் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கை குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் புதன்கிழமை கூறியதாவது:பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று மத்திய உளவுத் துறையிடமிருந்து எச்சரிக்கை வந்துள்ளது.இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் உண்மை உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக உளவுத் துறையினரும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.பிரதமர் உள்ளிட்ட அனைத்து மிக முக்கியப் பிரமுகர்களும் தமிழகத்துக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் வந்து செல்லும் வகையில் உரிய பாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் லத்திகா சரண்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மனித வெடிகுண்டுக்கு 1991-ல் பலியானார். எனவே, இந்த எச்சரிக்கையை பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது.இந்திய அறிவியல் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் சென்னை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அவரது வருகையையொட்டி உச்சபட்ச பாதுகாப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்தியாவில் ஒருங்கிணைய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செவ்வாய், 14 டிசம்பர், 2010

Central stands by the supports of states : மாநிலங்களின் ஆதரவால்தான் மத்திய அரசு நிலைக்கிறது: க. அன்பழகன்

தமிழர் தமிழராக வாழ்வது குறித்தும் கூட்டாட்சிக் குறித்தும் பேராசிரியர் அருமையாக உரையாற்றியுள்ளார். இளைய தலைமுறையினர் அதை உணர்தல் வேண்டும். பாரட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மாநிலங்களின் ஆதரவால்தான் மத்திய அரசு நிலைக்கிறது: க. அன்பழகன்

சென்னை, டிச.13: மாநில அரசுகளின் ஆதரவால் தான் மத்திய அரசு நிலைக்கிறது என்று தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் தெரிவித்தார்.மாநில திட்டக் குழு துணைத் தலைவர் மு. நாகநாதன் எழுதிய "இந்திய கூட்டாட்சியில் அதிகாரம் குவிப்பா? பகிர்வா?' என்ற நூலை திங்கள்கிழமை வெளியிட்டு, நிதியமைச்சர்க. அன்பழகன் பேசியதாவது: நாங்கள் பிரிவினை கோரவில்லை. உன்னோடு சேர்ந்து வாழ்வதற்கு இப்போது எங்களுக்கு தடையில்லை. ஆனால், நீ எங்ளை அடிமைப்படுத்துவதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று எண்ணி துணிக என்ற தலைப்பில் அண்ணா விளக்கம் அளித்துள்ளார். இதுதான் திமுகவின் நெறிமுறைகளுக்கு அடிப்படையானது.  ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதா அல்லது பிரிவினை கேட்பதா என்ற நிலை அண்ணாவுக்கு ஏற்பட்டது. அப்போது, இந்த இயக்கத்தை வளர்த்த ஜனநாயகத்தைக் காப்பாற்றாமல் பிரிவினை கேட்பதில் என்ன பொருள் உள்ளது என்று அந்தக் கோரிக்கையை அண்ணா கைவிட்டார். தமிழன் என்ற உணர்வுடன் தமிழகத்தில் எத்தனை பேர் உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது நாங்கள் தமிழர் என்று கூறுவோர் 45 சதவீதத்தை எட்டினால் பெரிய சாதனை. தமிழரை தமிழராக்குவதுதான் பெரியாரின் முயற்சி. தமிழர், தமிழராக வாழ முடியும் என்று எடுத்துக்காட்டுவது தான் அண்ணாவின் முயற்சி.  தமிழ் நம் தாய்மொழி என்று உயர்த்துவதுதான் பாரதிதாசனின் முயற்சி. ஆனால், இந்த அடிப்படைக் கருத்துகள் மக்களை முழுமையாகச் சென்று சேர்ந்ததா என்பது இன்றும் கேள்விக் குறியாக உள்ளது. இதை உணர்ந்தாலும் அதை ஏற்பார்களா என்பதும் சந்தேகமே. பிரிவினையை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை திருமாவளவன் போன்றவர்கள் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் தெரியவரும். நமக்கு குழி பறித்து நம்மை வீழ்த்துகின்ற சக்திகள் தான் சுற்றி இருக்கின்றன. இன்றும் தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி நடத்துவதா என்று கேட்கின்றவர்கள் தான் நாட்டில் உள்ளனர். தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க வேண்டும் என்று பாரதிதாசன் கூறியுள்ளார். இதற்கு எடுத்துக்காட்டு கருணாநிதி. பெரும்பான்மை இருக்கலாம். சில நேரத்தில் சிறுபான்மை ஆகலாம். நமக்கு பெரும்பான்மை செல்வாக்கு என்பது சட்டப்பேரவையில் எண்ணிக்கை அடிப்படையில் கிடைத்தால் கூட, அது சிறுபான்மை ஆட்சியாகத் தான் பலரால் சித்தரிக்கப்படும்.  அமெரிக்காவில் கூட்டாட்சி கொள்கை மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு கூட்டாட்சி ஏற்படும் முன்னர் சுதந்திரமாக இருந்த ஒவ்வொரு மாநிலமும் சேர்ந்து கூட்டாட்சியை ஏற்படுத்தின. ஆங்கிலேயர் காலத்தில் ஒரு வைசிராய் தலைமையில் தனித் தனியாக இருந்த மாகாணங்களின் நிர்வாகம் இருந்தது. சமரச முயற்சியாக உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் முதல்வராக வர வேண்டும் என்ற யோசனையை நேரு ஏற்கவில்லை. இதனால் தான் பிரிவினை கோரிக்கை வலுப்பெற்றது. இப்போது மத்திய அரசு, மாநிலங்களை மதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மத்திய அரசு 100-க்கும் மேற்பட்ட முறை மாநில அரசுகளைக் கலைத்தது. ஆனால், இப்போது அது முடியாது. மாநிலங்கள் நினைத்தால் மத்திய அரசை கவிழ்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டாட்சி கொள்கையின்படி மத்தியில் அதிகாரங்கள் குவிந்துகொண்டே போகக் கூடாது. இதனால் தான் இலங்கையில் இப்போதை விளைவு ஏற்பட்டது. இதேபோல மாநிலங்களில் வட்டார உணர்வு காரணமாகத்தான் ஏதேனும் ஒரு வகையில் தெலங்கானா போராட்டம் தொடர்கிறது. அவர்கள் ஏற்கெனவே சமஸ்தானமாக இருந்த காரணத்தால் அந்த உணர்வு மேலோங்கி தெலங்கானா கோரி போராடுகின்றனர். இது தவறு என்று வாதிட முடியாது. பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டதற்காகவே அங்குள்ள மக்களின் உரிமைகளுக்கு தனிச்சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்பு மத்தியில் ஒரே கட்சி ஆட்சியிருந்ததால் மாநிலங்களை மதிக்க வேண்டிய தேவை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது அத்தகைய நிலை இல்லை. மாநில கட்சிகள் ஆதரவு அளித்து மத்தியில் ஆட்சி அமைப்பது இக்காலத்தில் உள்ளது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது இன்று இல்லாவிட்டாலும் நாளை நடைமுறையில் கொண்டுவர வேண்டியது என்பது எனது நம்பிக்கை. மாநில அரசுகளின் பெருந்தன்மையால் தான் மத்திய அரசு நிலைக்கிறது.  மாநில அரசு பெருமளவு கைகொடுத்து, மத்தியில் ஓர் அரசு தேவை என்று கருதுவதால் மத்திய அரசு நிலைக்கிறது. இப்போதும் காலம் மாறுகிறது. எனினும், நம் உரிமைகள் நிலைக்கும் என்றார் அமைச்சர் அன்பழகன்.  இதில் நூலாசிரியரும், திட்டக் குழுத் துணைத் தலைவருமான மு. நாகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

அன்னை தெரசா நூற்றாண்டு விழாவைக் கொண்டாட மத்திய அரசு தவறிவிட்டது: கருணாநிதி

அன்னை தெரசா நூற்றாண்டு விழாவைக் கொண்டாட மத்திய அரசு தவறிவிட்டது: கருணாநிதி

சென்னை, டிச. 4: அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாட மத்திய அரசு தவறிவிட்டது என்று முதல்வர் கருணாநிதி சூசகமாகத் தெரிவித்தார்.அன்னை தெரசா விழாவில் அவர் சனிக்கிழமை பேசியதாவது: அன்னை தெரசாவின் அரும்பெரும் தியாகத்தைப் போற்றி, அவர் வழி நடப்பதாக நாம் உறுதி எடுத்துக் கொண்டால் மட்டுமே போதாது. எடுத்துக் கொண்ட உறுதியை காற்றிலே பறக்கவிடாமல், தேர்தல் கால வாக்குறுதியாக ஆக்காமல் என்றென்றும் அந்த உறுதிமொழியை நன்றியுடன் நினைத்து நிறைவேற்றுவோம், நடைமுறைப்படுத்துவோம் என்று நானும் உங்களுடன் சேர்ந்து உறுதியேற்கிறேன்.முதன்முதலில் முதல்வராகப் பொறுப்பேற்று பேரவையில் உரையாற்றியபோது மிக, மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் நான். இதில் எத்தனை மிக, மிக என்று வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் அந்தச் சமுதாயத்தின் வெற்றிக்காகப் போராடுவேன், வெற்றி கிடைக்கும்வரை ஒயமாட்டேன் என்று சூளுரை மேற்கொண்டேன்.சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த நான் அந்தச் சமுதாயத்தின் நலனுக்காக, உலகத்தின் அன்னை என்று போற்றப்படும் தெரசாவின் நூற்றாண்டு விழா கொண்டாட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க முடியாது.ஏழைகளைக் கண்டு இரங்கிய மாதரசி அவர். அன்னை தெரசா என்று ஒருவர் மட்டுமே இருக்க முடியும். வேறு சில அன்னைகளுக்கு உள்ளம் தரிசாக இருக்கிறது. நலிந்தோருக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் தெரசா. உலகுக்கே அன்னையாக விளங்கிய அவரது புகழுக்கு அவர் பெற்ற விருதுகளே சான்று. அவருக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே ஒரு நாளை தேர்வு செய்து நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. அவருக்கு இந்த விழா போதாது.இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலும் இந்த விழா நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், மத்திய அரசை விட்டுக் கொடுக்காமல், ""அன்னை தெரசாவின் நினைவாக நாங்கள் நாணயத்தை வெளியிட்டுள்ளோம்'' என்றார்.நாணயத்தை வெளியிடுவது மாத்திரம் அல்ல. நாடு முழுவதும் அன்னை தெரசாவின் விழாவைக் கொண்டாடியிருக்க வேண்டும்.தமிழக அரசைப் பொறுத்தவரை, ஒரு பெரிய கட்டடத்துக்கு தெரசாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தெரசாவின் புகழ் நிலைக்க வேண்டும் என்பதற்காக, ஆதரவற்ற பெண்களின் திருமண உதவியாக ரூ. 25 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கும் ஏற்கெனவே  அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்த டாக்டர் ராய் தனது பிறந்தநாள் செய்தியில், ""என்னை முழுவதுமாக காந்தி, நேரு மற்றும் எனது நெருங்கிய உறவினர்கள் கூட ஆக்கிரமித்துக் கொண்டதில்லை. ஆனால், ஏழைகளின் துயர்நீக்கப் பாடுபடும் அன்னை தெரசா குறித்த நினைவும், எண்ணமும் எனது இதயம், மூளை அனைத்தையும் அணைத்துக் கொண்டது'' என்று தெரிவித்துள்ளார்.அந்த வங்கத்தில் இந்த விழாவைக் கொண்டாடவில்லையே என்று யாரும் வருத்தப்படத் தேவை இல்லை. நாம் விழா கொண்டாடுவதும் வங்கம் கொண்டாடுவதைப் போலத்தான். ஏழை, எளியோரை, பாட்டாளிகளை மனிதர்களாக மதிக்க வேண்டும் எனபதே தெரசாவின் கொள்கை ஆகும். அந்தக் கொள்கையை மதித்து நடப்பதால் அவருக்கு விழா கொண்டாட நமக்குத் தகுதி இருப்பதாக நாமே கருதுகிறோம். தெரசா வாழ்ந்து, மக்களுக்காக பாடுபட்ட மேற்கு வங்கத்தில் இன்னமும் கை ரிக்ஷா வண்டிகள் ஓடுகின்றன. ஆனால், தமிழகத்தில் அவற்றுக்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷா வண்டிகள் இயக்கப்படுகின்றன. எனவே, தகுதியோடு இந்த விழாவைக் கொண்டாடுகிறோம். நம் அளவுக்கு சில மாநிலங்கள் கொண்டாடா விட்டாலும் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் இந்த விழாவைக் கொண்டாட வேண்டும். நான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்றாலும், மனித தெய்வமாக வணங்கக் கூடியவர் அன்னை தெரசா' என்றார் முதல்வர் கருணாநிதி.முன்னதாக அன்னை தெரசாவின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.
கருத்துகள்

ஹா ஹா ஹா ஹா ஹா ........................ஹா ஹா ஹா ஹா ...............................ஹா ஹா ஹா.............................................ஹா ஹா ...........முடியல வயிறு நோவுது..............ஹா ஹா ஹா ஹா .......
By தமிழன்
12/5/2010 12:41:00 PM
ஒட்டு காக பேசும் கருணா, ராஜ வூழல் திசை திருப்ப கருணா செய்யும் நாடகம். தமிழர்களே விளிழ்து கொள்வீர்
By basarie
12/5/2010 12:40:00 PM
அன்னை தெரசா அவர்கள் ஏழை ,மற்றும் அநாதை குழந்தைகளுக்காக சேவை செய்தார்களே தவிர பிற்ப்படுதப்பட்டோர்,மிக பிற்ப்படுதபட்டோர்,மிக மிக பிற்ப்படுதப்பட்டோர் மிக மிக மிக பிற்ப்படுதப்பட்டோர் என்று பார்க்கவில்லை .அரசியலுக்காக அன்னையின் பெருமையை சிறுமைப்படுத்தாதீர்கள் கலைஞரே
By சாமி
12/5/2010 12:22:00 PM
Thalaivar reminds 3 issues 1) Even the centre forget the minorities we are here to celebrate 2) Kai rickshaw West bengal (Left ) has no " thakuthi " 3)I am only the person following Mother Therasa's policy Ellam Spectrum paduthum padu ,Thalaivar Thaguthi manithaneyam pesugirar
By sekar
12/5/2010 11:34:00 AM
சரி!!! சரி!!! விடுங்கப்பா அவரு எதாவது பேசிட்டு போறாரு ,,,,,,,, பாவம் !!!!,,,,,,,,
By MUTHU
12/5/2010 11:25:00 AM
மு ச...வுக்கு மட்டும் அருகதை இருக்கிறதா? //அது உண்மை தான் என்றாலும், அதை சொல்ல உனக்கு எந்த அருகதையும் இல்லை. நீயும் ஈழ தமிழர்களை கொன்ற பாவத்துக்கு பதில் சொல்ல வேண்டும். // ஈழத்தமிழனை கொன்றவன் கொன்றவன் என்று சொல்லி சொல்லியே ராஜபக்சேவுடனும் கூட்டு சேர்ந்து தேர்தலில் வாக்களித்தீர்களோ? எதிரிக்கு எதிரி நண்பன் என்று சரத் பொன்சேகாவை ஆதரித்தீர்களோ? அவர் என்ன தடவியா கொடுத்தார்? இப்போது டக்ளஸ், ஆறுமுக தொண்டைமான் இவர்கள் எல்லாம் இலங்கை அமைச்சர்களாக ராஜபக்சேவுடன் கைகோர்த்து கொண்டு இருக்கிறார்களே அவர்கள் யார்? அங்குள்ள தமிழர்கள் எல்லாம் என்ன? தேர்தலையா புரக்கணித்தார்கள்...அதிபரை ஜெயிக்கவைக்கவில்லை...என்ன நீ மட்டும் தான் தமீமீமீல்லனா? நீங்கள் எத்தனை சதவீதம் உங்கள் நாட்டில் உள்ள மொத்த தமீலர்களில்...? முதலில் உன் வீட்டு அரசியலை பார் அப்புறம் அடுத்த வீட்டிற்குள் மூக்கை நுழைக்கலாம். உன் வீட்டிலேயே உனக்கு ஆதரவு இல்லை. என்ன? தமிலா...? சரியா?
By Es
12/5/2010 10:46:00 AM
As the elections for TN assembly is shortly approaching, this gentleman will play more magic just to gain the vote bank of minority community. Instead of wasting his time to plead the Union government for Mother Terrassa's centenary celebrations, let this gentleman consider the welfare of common men who suffering from power-cut, price rise of commodities, etc. No body will bother if the Union government fails to pay attention on Mother Terrasse or her centenary celebration.
By Umashankar. K
12/5/2010 10:15:00 AM
அன்னை தெரசாவை பற்றி உச்சரிக்க எந்த அருகதையும் இல்லை இந்த முத்துவேல் கருணாநிதிக்கு. சீக்கிரம் பதவியை விட்டு விலகு.
By மு. ச. chagla
12/5/2010 9:34:00 AM
for vote,,,,
By imran
12/5/2010 9:28:00 AM
அன்னை இன்று இருந்தால் தினகரன் ஏற்ரிப்பு , தா கீ கொலை பற்றி என்ன நினைப்பர். சில குடும்பம் வாழ , அப்பாவிக்கள் பலியைக் பற்றி என்ன நெனிபர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த சிலரை கொலை கொள்ளை அட்டிக்க உரிமை இருக்கிறது. என்று நேநிபர்ரோ ?
By Pandiyan
12/5/2010 9:19:00 AM
அய்யா யாருக்காக இந்த neethi போதனைகள்? உங்களுக்கு நீங்களே solli கொள்ளுங்கள்.. அதன் padi நடந்துகொள்ள muyarchiyaavathu செய்யுங்கள்.. தியாகம் என்ற சொல்லை ucharikka கூட தகுதி இல்லாத நிலையில் தான் இன்று ungaluthu செயல்பாடு இருக்கிறது. arasu பணத்தில் ௫ ருபாய் எடுத்து மக்களுக்கு செயல் திட்டம் அறிவித்து விட்டு ஐநூறு ருபாய் எடுத்து தனது சந்ததிக்கு சேர்த்து வைப்பதன் பெயர் தியாகம் அல்ல... திறுடு.. கொள்ளை... nambikkai துரோகம்.....
By இளந்தளிர் - மதுரை
12/5/2010 8:50:00 AM
யோவ் ! இப்போ அன்னை திரேசா தினம் கொண்டாடனும் என்பாய்! பின் அன்னை சோனியா தினம் கொண்டாடனும் என்பாய்! நிறுத்துய கதை வசனம் எழுதுவதை!
By Indian
12/5/2010 8:30:00 AM
kalaingar can try another 30minutes fasting against central govt. High drama aasaami!!
By SRV
12/5/2010 7:49:00 AM
மனித உயிர்களை நேசித்த கடவுள் போன்ற அன்னை தெரசா வாழ்ந்த இந்த பூமியில் மனித நேயம் என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் எல்லாம் தங்களை தங்கள் அடிமைகளால் 'அன்னை', 'அம்மா' என்று பட்டம் சூட்டி மகிழ்ந்துக்கொள்கின்றதுகள்.
By மரமண்டை
12/5/2010 6:56:00 AM
மற்ற உயிரினங்களுக்கு இல்லாத நிறைய சிறப்புகள் மனித இனத்துக்கு உண்டு. அந்த மனித இனத்திலேயே சிறந்து விளங்குபவர்கள் அவ்வப்போது இந்த மண்ணில் தோன்றுவதும் உண்டு. அந்த சிறந்தவர்களுக்கே சிறந்தவராக வந்து தோன்றிய அன்னை தெரசா அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவோம். அவரது நல்ல பல குணங்களில் ஒன்றை யாகிலும் வாழ்நாளில் கடைபிடிப்போம் என்று இந்த அவரது நூற்றாண்டு நாளில் சபதமேற்போம்.
By மரமண்டை
12/5/2010 6:53:00 AM
கேப் கேட்ச போதும், வோட்டு ஆகீடிவாரூ .
By அண்ணா துரை
12/5/2010 6:52:00 AM
"வேறு சில அன்னைகளுக்கு உள்ளம் தரிசாக இருக்கிறது " பின்னே ராசாவை ராஜினாமா பண்ண வைத்தால் என்ன சொல்லுவதாம்
By mpm
12/5/2010 5:54:00 AM
கருணாநிதி தாத்தா, கருணாநிதி தாத்தா, நீங்கள் கேட்டவரா, நல்லவரா
By Jothi
12/5/2010 5:34:00 AM
ஒட்டுககாக
By Cholan
12/5/2010 5:32:00 AM
வேறு சில அன்னைகளுக்கு உள்ளம் தரிசாக இருக்கிறது. !!!???? அய்யா யாரை சொல்லுறார் ????
By துரை
12/5/2010 5:23:00 AM
அன்னை தெரசாவின் தொண்டு பாராட்டிற்குரியது. என்றாலும் அதன் அடிப்படை சமயம் சார்ந்ததே. எனவே, அவரை மதித்தாலும் அவரது நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாட வேண்டா என இந்திய அரசு கருதியிருந்தால் அது சரியே. மேலும் இலங்கையில நடைபெற்ற படுகொலைகளுகு்க்கு எதிராக மனித நேய ஆர்வலர்கள் அறிக்கை ஒன்றில் கையொப்பம் இட வேண்டியவர்களிடம் அதற்கு மறுப்பு தெரிவித்தவர் இவர். என்ன இருந்தாலும் பக்சே புத்தர் போர்வையில் உள்ள கிறுத்துவர்தானே. ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழின வளர்ச்சிக்கும் பாடுபட்ட அறிர்ஞர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது தமிழக அரசின் கொள்கையாக இருந்தும் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடாத கொடும் போக்கை மாண்புமிகு முதல்வரிடம் சுட்டிக்காட்டி நினைவு படுத்தப்போவது யார்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/5/2010 5:21:00 AM
தமிழக மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல் படுத்தும் தங்களை எதிர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் இதற்காக தாங்கள் துவண்டு விடமாடீர்கள் இன்னும் பல தமிழக முன்னேற்றத்திற்கு திட்டங்களை செயல் படுத்த தங்களுக்கு சக்தியை தரும் படி எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்
By swathi
12/5/2010 4:41:00 AM
அது உண்மை தான் என்றாலும், அதை சொல்ல உனக்கு எந்த அருகதையும் இல்லை. நீயும் ஈழ தமிழர்களை கொன்ற பாவத்துக்கு பதில் சொல்ல வேண்டும்.
By tamilan
12/5/2010 4:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *