திங்கள், 24 ஜனவரி, 2011

central govt.asked ambassador report about assassination of fisherman:

எதற்கு அறிக்கை கேட்கிறது? ஒரு வேளை மூவரையுமே அழித்திருந்தால் சான்று இல்லாமல் போய் இருநதிருக்குமே! ஏன், பிற இருவரை விட்டு வைத்தீர்கள் என்று சிங்கள அரசிடம் கேட்டுச் சொல்லுமாறு கேட்டிருப்பார்களோ! நொடிக்கு நொடி சிங்கள அரசை நட்பு நாடு என்று சொல்லும் இந்தியஎன்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது தெரிந்ததுதான். தமிழ் மக்கள்தாம் இப்படுகொலைகள் நிறுத்தப்பட என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முடிவெடுத்துக் கட்சிச் சார்பின்றிச் செயல்பட வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மீனவர் படுகொலை: தூதரிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

First Published : 23 Jan 2011 05:30:53 PM IST

First Published : 23 Jan 2011 05:30:53 PM IST

புதுதில்லி, ஜன.23- தமிழக மீனவர் படுகொலைகள் தொடர்பாக அறிக்கை சமப்பிக்குமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உத்தரவின் இந்தியத் தூதரிடம் அறிக்கை கேட்டு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.நேற்று, கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஜெயக்குமார் என்பவரை இலங்கை கடற்படையினர் கழுத்தை இறுக்கி படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவத்துக்கு முதல்வர் கருணாநிதி, வைகோ, ராமதாஸ் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், மீனவர் படுகொலை தொடர்பாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. மேலும், அந்த சம்பவம் தொடர்பான தகவல்களை அளிக்குமாறு தமிழக அரசையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துகள்

அறிக்கை எதற்கு? எத்தனை பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்,இன்னும் எத்தனை பேரை கொலை செய்வார்கள் என்பதை தெரிந்துகொல்லவா. கருணாநிதி மனதில் கொள்ளுவார்.இவர்களுடைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது,சந்தர்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.எல்லோரும் ஓட்டு சாவடி சென்று ஓட்டு எனும் ஆயுதத்தால் கருணாநிதி,சோனியாவை ஒழித்து கட்டுங்கள்.
By T.Selvan,Nellai
1/23/2011 10:52:00 PM
இன்று ஜெயகுமாருக்கு நடந்தது நாளை நமக்கும் நடக்கலாம் ,இது வரை அறநூருக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களவர்கழல் கொல்ல பட்டு உள்ளனர் ,இதற்கும் கருணாநிதி கடிதம் எழுத போகிறாரா?தமிழகத்தில் கூட தமிழனால் நிம்மதியாக இருக்க முடிய வில்லை என்றால் இந்த மானம் கெட்ட அரசாங்கம் நமக்கு எதற்கு ?மீனவர் கொலை பற்றி பேசினால் தேசிய பாதுகாப்பு சட்டமா ,இந்த கொலைகார அரசை வீட்டுக்கு அனுப்புங்கள் ,
By T.Selvan,Nellai
1/23/2011 10:41:00 PM
ஏன் டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து கேட்க பயமா? தம்மாத்தூண்டு இலங்கை அரசைக்கண்டே இவ்வளவு பயப்படும் இந்தியா ஐ ந பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ஆசைப்படுவது வெட்கக்கேடு. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நாங்கள் ஒரு வல்லரசு என்று பீற்றிக்கொண்டு அலைவதுதான். தன்னிடம் பத்து நாட்களாக பல மீனவர்களை இலங்கை கடற்ப்படை கொன்றுவிட்டதை மு க தெரிவித்ததாக பிரணாப் முக்கர்ஜி கூறுகிறார். ஏன் இது மத்திய அரசுக்கு நேரடியாக தெரியாதா? என்ன நாடகம் இது?
By திண்டல் சங்கர நாராயணன்
1/23/2011 7:45:00 PM
i give the srilanka report. on that day our navy no one visited on the sea. On such incident was happened. Our India government also accept that report.
By mohan
1/23/2011 6:03:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக