questions paper லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
questions paper லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 ஆகஸ்ட், 2012

பொது நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் தமிழில் வேண்டும்: பாமக

பொது நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் தமிழில் வேண்டும்: பாமக

தினமணி First Published : 08 Aug 2012 11:50:17 AM IST

Last Updated : 08 Aug 2012 12:02:29 PM IST

சென்னை, ஆக., 08 :  இந்தியாவில் தேசிய அளவில் நடத்தப்படும் அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளுக்கும் தமிழிலும் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக கோரியுள்ளது.இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட பிறமாநில மொழிகளிலும் தயாரித்து வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் 45 வேளாண்மை சார்ந்த கல்வி நிறுவனங்களும் நடத்தபட்டு வருகிறது. இவற்றில் சேருவதற்கான அனைத்திந்திய நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்களை தமிழில் தயாரித்து வழங்கும் திட்டம் இல்லை என்று தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி கோரப்பட்ட வினாவிற்கு இந்நிறுவனம் பதிலளித்துள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்திய வேளாண் ஆராய்ச்சிகழகத்தின் கட்டுபாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வுகள் கடந்த 2000மாவது ஆண்டு வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டுவந்தன. 2001ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்தியிலும் வினாத்தாள் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் ஆங்கிலம் தெரியாத, இந்தி மொழி பேசும் மாணவர்கள் கூட இத்தேர்வுகளில் எளிதாக வெற்றிப்பெற முடிகிறது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற நுழைவுத்தேர்வுகளில் மொத்தமுள்ள 5832 இடங்களில் 1412 இடங்களை இந்தி வினாத்தாட்களை கொண்டு நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்கள் பிடித்துள்ளனர். கோவை வேளாண் பல்கலைக்கழத்திலிருந்து 92 இடங்களும், சென்னையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பலகலைக்கழகத்தில் இருந்து 6 இடங்களும், மத்திய தொகுப்புக்கு ஒதுக்கபட்டு, அனைத்திந்திய நுழைவுத்தேர்வுகளின் மூலமே அவை நிரப்பப்படுகின்றன. ஆனால் வினாத்தாள்கள் தமிழில் வழங்கப்படுவதில்லை என்பதால் இவற்றில் ஓர் இடம் கூட தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை அளிக்கும் உண்மையாகும். மற்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளிலும் இந்தி மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகள் மட்டுமே பயிற்று மொழிகளாக உள்ளன. அவ்வாறு இருக்கும்போது அனைத்திந்திய அளவில் நடைபெறும்பொது நுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாட்களை இந்த 9 மொழிகளிலும் தேவைக்கேற்ப தயாரிக்காமல் இந்தியில் மட்டும் தயாரிப்பது மற்ற மொழி பேசும் மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழ் பேசும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். இதன்மூலம் இந்தி படிக்காத மாணவர்களை இரண்டாம் தர மாணவர்களாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது.தமிழ்நாட்டில் ஒவ்வொரு பொதுத்தேர்வை 8 இலட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களில் 75 விழுக்காட்டினர், அதாவது 6 இலட்சம் பேர் தமிழ் வழியில் படித்தவர்கள் ஆவர். பொதுநுழைவுத் தேர்வுக்கான வினாத்தாட்கள் தமிழில் தயாரிக்கபடாததால் இந்த மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்ற, அனைத்திந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாட்களை தமிழ் மொழியிலும் வழங்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

வியாழன், 5 ஜூலை, 2012

இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகளின் வினாத்தாட்கள் ஏன் தமிழில் வேண்டும்?



இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகளின் வினாத்தாட்கள் ஏன் தமிழில் வேண்டும்?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தரவு :  கீற்று
நடுவண் அரசு இந்தியக் குடியுரிமைப்பணிகளுக்கானத் தேர்வுகளை (Civil Services Examination, CSE) ஒன்றியப் பொதுப்பணித் தேர்வாணையத்தின் (Union Public Service Commission, UPSC) மூலம் நடத்தி வருகிறது.
இந்தியக் குடியுரிமைப் பணிகளின் கீழ் இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS), இந்திய வெளியுறவுப் பணி (Indian Foreign Service, IFS) போன்ற இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகள் வருகின்றன.
இது, முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), பிரதானத்தேர்வு (Main Exam) மற்றும் நேர்முகத்தேர்வு (Interview) என மூன்று கட்டங்களைக் கொண்டது.
முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam):
முதல்நிலைத்தேர்வில் இரண்டு Papers உண்டு. First Paper, General Studies என்கிற பொது அறிவுத் தாள்; Second Paper, Civil Services Aptitude Test (CSAT) என்கிற சிசேட் Paper. இவ்விருத் தாள்களும் கொள்குறி வினா (objective type with multiple choice questions) வடிவத்தில் அமைந்தவை. அதாவது, ஒரு வினாவுக்கு நான்கு விடைகளைக் கொடுத்திருப்பார்கள். அவற்றில், சரியான விடையைக் கண்டுபிடித்து, அதன் விடைக்குறியீடை, அனைவருக்கும் பொதுவான கணினியால் திருத்தப்படக்கூடிய OMR விடைத்தாளில் shade செய்ய வேண்டும்.
நம் பிரச்சினை என்னவென்றால், முதல்நிலைத்தேர்வின் வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே அளிக்கப்படுகிறது. இதனால் தமிழ் உட்பட இதர தாய்மொழி வழிக்கல்வி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழிலும் வினாத்தாட்களை வழங்க வேண்டும். இதை எளிதாக நடைமுறைப்படுத்தி விடலாம். விடைத்தாள் அனைவருக்கும் பொதுவானது. எனவே, UPSCக்கு வினாக்கள் மொழிமாற்றம் மட்டுமே தேவை.
தமிழிலும் வினாக்களை மொழிபெயர்த்து, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வினாத்தாளில் இணைத்தாலே இப்பிரச்சினை முடிந்து விடும்.http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3595439.ece
2011 ஆம் ஆண்டில் முதல்நிலைத் தேர்வில் தமிழ் மாணவர்களைத் தடுக்க UPSC செய்த சதி:
2010 ஆம் ஆண்டு வரை முதல்நிலைத் தேர்வின் இரண்டாம் தாள் optional paper ஆக இருந்தது. இந்த optional paper இல் பாடத்திறமை மட்டுமே பரிசோதிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2011 ஆண்டிலிருந்து optional paperக்குப் பதிலாக சிசேட் என்ற தாள் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாள், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட 9 இந்தி மாநிலத்தவர்களையும் எளிதாக உள்ளே கொண்டுவர அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, சிசேட் தாளின் மொத்தமுள்ள 80 வினாக்களில் 50 வினாக்கள் Comprehension வகையைச் சேர்ந்தவை. ஆங்கில மொழியிலும் இந்தி மொழியிலும் ஒரு கதை அல்லது கட்டுரை கொடுத்திருப்பார்கள். அதிலிருந்து கொள்குறி வினாக்களை (objective questions) எழுப்பியிருப்பார்கள். நாம் கதையைக் கவனமாக வாசித்து விடையைக் கண்டுபிடித்து குறியிட வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், இந்தியிலும் மொழிபெயர்த்து வழங்கப்பட்ட இக்கதை, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒன்பது மாநிலத்தவர்களுக்கும் மிக மிக எளிது. இதனுடை மொழிபெயர்ப்பு தமிழிலும் இருந்தால் எவ்வளவு எளிது ஆக இருக்கும் என்பதை என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
இந்தியைத் தாய்மொழியாகக்கொண்ட 9 இந்தி மாநில மாணவர்களுடன் ஆங்கிலத்தையும் பிறத் தாய்மொழிகளையும் பயிற்று மொழியாகக்கொண்ட மாணவர்கள் போட்டிப் போடவே முடியாத நிலைமை, சதித்திட்டமிட்டு சென்ற ஆண்டு முதல் உருவாக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு வரை இரண்டாம் தாளில் optional paper ஆக ஒரு பாடத்தை தேர்ந்தெடுத்து அப்ப்பாடத்தின் பாடத்திறமைச் சோதிக்கப்பட்டு வந்தது. தற்போது, optional paper, சிசேட் எனும் வெறும் ஆங்கில-இந்தி மொழித்தாளாக மாற்றப்பட்டு விட்டது. இது சுதந்திரத்திற்குப் பின் வேலைவாய்ப்பில் இந்தியைத் திணிக்கும் ஆதிக்கவாதிகளின் இரண்டாம் கட்டம். 
இதனால் தமிழ் மாணவர்கள் எவ்வாறு விழுந்துள்ளனர் என்பதைப் பார்ப்போம்.
2010 இல் தமிழ்நாட்டில் தேர்வானவர்கள் - 122
2011 இல் தமிழ்நாட்டில் தேர்வானவர்கள் - 96
2012 இல் தமிழ்நாட்டில் தேர்வானவர்கள் - 72
அதாவது, சிசேட் அறிமுகப்படுத்தப்பட்டப் பிறகு 122 லிருந்து 96 மற்றும் 72 ஆக குறைந்து வருகிறார்கள். இந்நிலை நீடித்தால் இன்னும் குறைவது திண்ணம். 
பிரதானத் தேர்வு (Main Examination):
பிரதானத் தேர்வில் 9 தாள்கள் உண்டு. அவையாவன,
General Studies Paper I & II, First Optional I & II, Second Optional I & II), Essay Paper, Tamil Language Paper and English Language Paper.
ஆங்கில மற்றும் தமிழ் மொழித்தாள்களைத் தவிர இதர 7 தாள்களின் வினாத்தாள்களும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்த 7 தாள்களும் விரிவான விடை (Descriptive) வடிவத்தில் அமைந்தவை. மேலும், இவற்றுக்கான விடைகள் தமிழ் உட்பட இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளிலும் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வினாக்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் தான் இருக்கும்.
உதாரணமாக, Critically analyze the significance of Portuguese arrival in India? என்ற வினா கேட்கப்பட்டிருக்கிறது என்று வைப்போம். இது ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருக்கும். இதற்கான விரிவான விடையைத் தமிழில் எழுத விரும்பும் மாணவர்கள், ஆங்கிலத்தில் எழுப்பப்பட்ட வினாவிற்கு தமிழில் பொருள் புரிந்து, விடையைத் தமிழில் எழுத வேண்டும். இங்கேயும் தமிழில் எழுதுவோருக்கு முட்டுக்கட்டை இடப்பட்டுள்ளது. எனவே, தமிழிலும் வினாக்களை மொழிபெயர்த்து, நடைமுறையில் இருக்கும் இருமொழி வினாத்தாளில் இணைத்தாலே இப்பிரச்சினை முடிந்து விடும். அப்போதுதான் சம உரிமை கிடைக்கும்.
நேர்முகத்தேர்வு (Interview):
நேர்முகத்தேர்வை 22 மொழிகளிலும் அளிக்கலாம் என்று விதிமுறைகள் இருந்தாலும், இதுவும் திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் நேர்முகத்தேர்வு அளிக்கும் போது, ஒரு குழப்பமும் வருவதில்லை. மாறாக, தமிழில் ஒருவர் நேர்முகத்தேர்வை அளிக்க விரும்பினால், அவருக்கு தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை, UPSC நியமிக்கும். இவர் பெரும்பாலும் Group D ஊழியராக இருப்பார். மணிநேர ஒப்பந்த அளவில் (Time based contract employee) நியமிக்கப்படுவார். இவர் தவறுதலாக மாற்றி பதிலளித்து விட்டால் மதிப்பெண் குறையும். இதைக்கண்டு பயந்து, தமிழில் யாரும் நுழைவுத்தேர்வு கொடுப்பதில்லை. எனவே, தமிழக அரசு தமிழில் நுழைவுத்தேர்வு அளிக்கும் மாணவர்களைக் காக்கும் விதமாக, தமிழக Group I அதிகாரிகள் Panel-ஐ UPSC க்கு பரிந்துரைச் செய்ய வேண்டும். UPSC அவர்களில் ஒருவரை மொழிபெயர்ப்பாளராக நியமிக்கலாம். இதனைத் தமிழக அரசும் UPSC யும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
பிரச்சினை சுருக்கம்:
I.முதல்நிலைத்தேர்வில் தமிழிலும் வினாக்கள் இரயில்வேத் தேர்வு வினாத்தாளைப் போல் வேண்டும்.
II.பிரதானத் தேர்விலும் தமிழிலும் வினாக்கள் இரயில்வேத் தேர்வு வினாத்தாளைப் போல் வேண்டும்.
III.நேர்முகத்தேர்வில், தமிழக அரசு, தமிழில் நுழைவுத்தேர்வு அளிக்கும் மாணவர்களை காக்கும் விதமாக, Group I அதிகாரி ஒருவரை மொழிபெயர்ப்பாளராக நியமித்து UPSC நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Bookmark and Share