Manmohansingh லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Manmohansingh லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 9 மார்ச், 2013
புதன், 19 டிசம்பர், 2012
11 years old girl issue notice to P.M. Manmohan
தகவல் உரிமைச் சட்டம்: தலைமை அமைச்சருக்கு அறிவிப்பு அனுப்பிய 11 அகவைச் சிறுமி
இலக்னோ :"தகவல் பெறும் உரிமை சட்டத்தை, பெரும்பாலானோர் தவறாக
பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டிய பிரதமர், மன்மோகன் சிங், அதற்கான
ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல், அவர், சட்ட ரீதியான நடவடிக்கையை
சந்திக்க நேரிடும்' என, 11 வயது பள்ளி மாணவி, பிரதமருக்கு, நோட்டீஸ்
அனுப்பியுள்ளார்.
"காங்கிரஸ் தலைவர் சோனியா, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விதத்தில், மத்திய அரசு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தகவல்கள் வெளியாகின."அந்த தகவல் உண்மை தானா? சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக, செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள், கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு, காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு வட்டாரங்களில், கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனிப்பட்ட மனிதர்களின் மருத்துவ செலவு பற்றி தகவல் கேட்பதா என, காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர்.
இந்நிலையில், அக்டோபர், 12ல், டில்லியில் நடந்த, தகவல் உரிமை சட்ட மாநாட்டில் பேசிய, பிரதமர், மன்மோகன் சிங், "தகவல் பெறும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தும் சிலர், தேவையே இல்லாத தகவல்களையும், தனிப்பட்ட தகவல்களையும், ஒன்றுக்குமே உதவாத தகவல்களையும் கேட்கின்றனர். ஆம்னி பஸ் அளவிற்கு, அவர்கள் கேட்கும் தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது' என, கவலை தெரிவித்திருந்தார்.இதை அறிந்த, உ.பி., மாநில தலைநகர், லக்னோவை சேர்ந்த, தகவல் உரிமை சட்ட ஆர்வலர், 11 வயது, ஊர்வசி சர்மா என்ற பள்ளி சிறுமி, பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு, தன் வழக்கறிஞர் மூலம், நேற்று முன் தினம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், "60 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால், சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, பிரதமரை அவர் எச்சரித்துள்ளார்.
நோட்டீசில், சிறுமி தெரிவித்துள்ளதாவது:அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட நான், நீங்கள் தெரிவித்த கருத்துகளால், மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இந்த நோட்டீஸ் மூலம் தெரிவிப்பது என்னவென்றால், எதன் அடிப்படையில் நீங்கள், அவ்வாறு கூறினீர்கள்? அதற்கான ஆதாரங்கள், உங்களிடம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.இல்லையேல், இன்னும், 60 நாட்களுக்குள், அவ்வாறு பேசியதற்காக, வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதைச் செய்ய தவறினால், உங்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அந்த சிறுமி அனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவித்துள்ளார்.
"உண்மையான ஜனநாயக நாடு இந்தியா என்பதை, இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது' என, ஊர்வசி சர்மாவுக்கு, சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
"காங்கிரஸ் தலைவர் சோனியா, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விதத்தில், மத்திய அரசு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தகவல்கள் வெளியாகின."அந்த தகவல் உண்மை தானா? சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக, செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள், கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு, காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு வட்டாரங்களில், கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனிப்பட்ட மனிதர்களின் மருத்துவ செலவு பற்றி தகவல் கேட்பதா என, காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர்.
இந்நிலையில், அக்டோபர், 12ல், டில்லியில் நடந்த, தகவல் உரிமை சட்ட மாநாட்டில் பேசிய, பிரதமர், மன்மோகன் சிங், "தகவல் பெறும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தும் சிலர், தேவையே இல்லாத தகவல்களையும், தனிப்பட்ட தகவல்களையும், ஒன்றுக்குமே உதவாத தகவல்களையும் கேட்கின்றனர். ஆம்னி பஸ் அளவிற்கு, அவர்கள் கேட்கும் தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது' என, கவலை தெரிவித்திருந்தார்.இதை அறிந்த, உ.பி., மாநில தலைநகர், லக்னோவை சேர்ந்த, தகவல் உரிமை சட்ட ஆர்வலர், 11 வயது, ஊர்வசி சர்மா என்ற பள்ளி சிறுமி, பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு, தன் வழக்கறிஞர் மூலம், நேற்று முன் தினம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், "60 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால், சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, பிரதமரை அவர் எச்சரித்துள்ளார்.
நோட்டீசில், சிறுமி தெரிவித்துள்ளதாவது:அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட நான், நீங்கள் தெரிவித்த கருத்துகளால், மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இந்த நோட்டீஸ் மூலம் தெரிவிப்பது என்னவென்றால், எதன் அடிப்படையில் நீங்கள், அவ்வாறு கூறினீர்கள்? அதற்கான ஆதாரங்கள், உங்களிடம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.இல்லையேல், இன்னும், 60 நாட்களுக்குள், அவ்வாறு பேசியதற்காக, வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதைச் செய்ய தவறினால், உங்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அந்த சிறுமி அனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவித்துள்ளார்.
"உண்மையான ஜனநாயக நாடு இந்தியா என்பதை, இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது' என, ஊர்வசி சர்மாவுக்கு, சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
புதன், 12 செப்டம்பர், 2012
India awakens to sexist component of genocidal culture in Sri Lanka
India awakens to sexist component of genocidal culture in Sri Lanka
[TamilNet, Tuesday, 11 September 2012, 05:23 GMT]A cartoon that appeared in Lakbima newspaper of Sri Lanka, on Indian Prime Minister Manmohan Singh and Tamil Nadu Chief Minister Jayalalithaa, has awakened the masses in India on the sexist side of the genocidal culture encountered by Eezham Tamils over several decades, said South Asia watchers in New Delhi noting responses from different parts of India. The impact of the cartoon in India in realising the nature of the genocidal culture that is not checked, not boycotted like the apartheid, but is always pampered, is many times more than the impact evoked by seeing images of the sexual abuse of even corpses of Eezham Tamils, the South Asia watchers said. The cartoon found condemnation in Colombo too, by Women and Media Collective (WMC).
The WMC on Monday urged the Lakbima newspaper and its editor to apologize for the cartoon, as it is derogatory to women and women politicians.
But the acting editor of Lakbima, Ranga Jayasuriya, said on Monday that he would stand by the cartoon.
Ranga Jayasuriya
Last month, three French tourists to Sri Lanka were fined and were sentenced to 6 months suspended prison term, for a woman tourist among them kissing a Buddha statue in Kandy and taking a photograph of it.
When the tourists were printing their holiday pictures at Galle, the studio employee alerted the police, who in turn arrested the tourists, The Asian Age reported on 22 August.
But the scale used for ‘culture’ was different when a number of Hindu temples were desecrated, vandalised and destroyed. It was different when the Tamil women were raped, killed and even the dead bodies were displayed with vulgarity.
Sexual assault by the occupying Sinhala military as a way of terrorisation and genocide-intended sexual abuse, making Tamil women pregnant by the occupying soldiers, now come to light in media reports. But the culture of getting pleasure in seeing Tamils naked has a long legacy in the island.
Those who had portrayed the LTTE as the worst ‘terrorists’ in the world and pampered the genocidal SL military never appreciated the absence of sexual violence on the part of the LTTE. Once again the scale used was different and the eyes were jaundiced.
On the issue of Tamil Nadu Chief Minister sending back Colombo footballers, and a group of political activists harassing Sri Lankan tourists, a group of some prominent writers and social activists in Tamil Nadu have also now come forward to condemn the CM for harming ‘people to people’ relationship, following the stand of the CPI-M and The Hindu. Many of the members of the group are of Marxist-Leninist or other Leftist political background.
A State, as a policy, stopping political sports is different from activists harassing tourists. The latter is of bad taste.
But those who jump at upholding ‘people to people’ relationship in the given context of Sri Lanka provide only more confidence to that State and institutions like Lakbima in their display of genocidal culture.
The signatories of the statement have forgotten that India in its campaign against apartheid had banned all people to people relationship between India and South Africa for a very long time. The people of Indian origin in South Africa were the worst affected, losing all linguistic, religious and cultural contacts with their motherland. Yet, the boycott was needed to establish a universal point of international polity and human civilisation.
Why the scale is different on Sri Lanka, even in the eyes of the group of Marxists? Is it because ‘people to people’ relationship had to be banned in one instance but promoted in another instance for the imperial interests of the State they aspire for India? Or, perhaps, as Lakbima’s Ranga Jayasuriya was defending the cartoon, genocide, like beauty lies in the eyes of the beholder.
Chronology:
External Links:
| FirstPost.com: | Another insult by Sri Lanka: It’s time India took a stand | |
| The Asian Age: | French tourists get Sri Lanka jail term over Buddha kiss |
புதன், 11 ஜூலை, 2012
செவ்வாய், 20 மார்ச், 2012
India inclined to vote in favour of US resolution: Manmohan Singh
India inclined to vote in favour of US resolution: Manmohan Singh
[TamilNet, Monday, 19 March 2012, 07:36 GMT]Following extreme pressure from all the political parties and movements in Tamil Nadu, especially after the debate following the recent follow-up documentary by the Channel-4 received its highest attention in Tamil Nadu, the Indian Prime Minister Manmohan Singh on Monday informed the Indian Parliament that India is inclined to vote in favour of the US resolution on Sri Lanka in the UN Human Rights Council, initial reports from New Delhi said.
Meanwhile, informed sources in Tamil Nadu told TamilNet that the Congress leadership was pushed to make the decision as the DMK was considering to pull out its parliamentarians from the Centre and the Tamil Nadu leaders of the Congress Party were concerned of the survival of their party in Tamil Nadu in the coming elections.
Chronology:
14.03.12 Onus focuses on India
புதன், 14 டிசம்பர், 2011
வெள்ளி, 9 டிசம்பர், 2011
வியாழன், 10 நவம்பர், 2011
செவ்வாய், 26 ஜூலை, 2011
அலைக்கற்றை ஊழல்: மன்மோகன், ப. சிதம்பரத்துக்கும் பொறுப்பு
First Published : 26 Jul 2011 01:58:34 AM IST
Last Updated : 26 Jul 2011 03:28:42 AM IST
புது தில்லி, ஜூலை 25: பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஒப்புதலுடனேயே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றதாக சிறப்பு நீதிமன்றத்தில் தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் சுசீல் குமார் திங்கள்கிழமை தெரிவித்தார். பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள 2ஜி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், ஆ.ராசா சார்பில் வழக்கறிஞர் சுசீல் குமார் ஆஜராகி வாதிட்டார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதி அமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தின் ஒப்புதலுடன் நடைபெற்றதாக அப்போது அவர் கூறினார். அவர் மேலும் கூறியது: மத்திய தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது ஆ.ராசா மேற்கொண்ட முடிவுகள் எதிலும் தவறு இல்லை. முந்தைய அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகளையே அவரும் பின்பற்றினார். 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடாமல் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கும் நடைமுறை முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போதே இருந்து வந்தது. அதே நடைமுறையைத்தான் ஆ.ராசா பின்பற்றி வந்துள்ளார். இதில் அவர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை; கொள்கையையும் மாற்றவில்லை. சட்ட விதிகளுக்கு உள்பட்டே டி.பி. ரியாலிட்டி, யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து பிரதமர் நன்றாக அறிவார். இதனை அவர் மறுக்க மாட்டார். தவறு இருந்திருக்கும் பட்சத்தில் பிரதமர் இந்த ஒதுக்கீட்டை அப்போதே தடுத்து நிறுத்தி இருக்கலாம். மத்திய அமைச்சரவை வழங்கிய அறிவுரையின் பேரில் நடந்த இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் ஒப்புதல் அளித்திருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்த அருண் செüரி 26 உரிமங்களும், பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இந்தத் துறையின் அமைச்சராக இருந்த திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் 25 உரிமங்களும் வழங்கியிருக்கின்றனர். ஆ.ராசா தொலை தொடர்பு துறையின் அமைச்சராக பணியாற்றியபோது 122 உரிமங்கள் அளித்திருக்கிறார். எண்ணிக்கைதான் வித்தியாசம். ஆனால் கொள்கை ஒன்றுதான். அப்படியிருக்கும்போது, இந்த விவகாரத்தில் ஆ.ராசாவிடம் மட்டும் கேள்வி எழுப்பப்படுவது ஏன்? இதில் எங்கே குற்றம் நடந்திருக்கிறது? இதில் எங்கே சதி நடந்திருக்கிறது? ஆ.ராசா குற்றமற்றவர். முந்தைய அரசுகளின் கொள்கையைப் பின்பற்றியது தவறு என்றால் 1993 முதல் தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த அனைவரும் ஆ.ராசாவுடன் சிறையில் அடைக்கப்பட வேண்டும். அமைச்சராக ஆ.ராசா இருந்த போது அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் திறமையாகப் பணி புரிந்தார். அந்தக் கால கட்டத்தில்தான் மொபைல் அழைப்புக் கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. நாட்டில் ரிக்ஷா ஓட்டுபவர் உள்ளிட்ட அனைத்து ஏழை மக்களும் பயன் அடைந்துள்ளனர் என்று வாதிட்டார் சுசீல் குமார். இந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்படலாம் என "தினமணி' கடந்த புதன்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
manmohansingh and pa.chidambaram should be resigned - Nidhin: மன்மோகன், ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும்: நிதின் கட்கரி
First Published : 26 Jul 2011 03:03:17 AM IST
Last Updated :
புதுதில்லி, ஜூலை 26: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதி அமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால் அவர்கள் உடனடியாக தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜக தலைவர் நிதின் கட்கரி வலியுறுத்தி உள்ளார். தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் வாதிட்டபோது, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோரிடம் ஆலோசித்தே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். இது குறித்து தில்லியில் பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் தலைவர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறியது: 2ஜி உரிமம் வழங்குவதில் நடைபெற்ற குளறுபடிகள் அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவுடன் நடைபெற்று இருப்பது தெள்ளத் தெளிவாகியிருக்கிறது. இதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் ஒரு நிமிடம் கூட தாமதம் செய்யாமல் பதவி விலக வேண்டும். இவர்கள் இருவரும் சட்ட ரீதியாகவும், தார்மிக அடிப்படையிலும் தொடர்ந்து பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார்கள். ஆ.ராசா தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன் வைக்கப்படுவதாகக் கூறினாலும், அவரது சார்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ள விவரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, அனைவராலும் கவனத்தில் கொள்ளக் கூடியது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2003-ல் தான் முதல் முறையாக நிதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்று, தொலைத் தொடர்பு துறை அலைகற்றை உரிமம் வழங்குவதற்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அலைக்கற்றை உரிமம் வழங்க ஒப்புதல் அளித்திருப்பதை பிரதமர் மன்மோகன் சிங் உறுதிப்படுத்தியிருக்கிறார். உரிமம் பெற்ற பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனப் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளன. இதை ஒழுங்குபடுத்த மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் தவறி விட்டனர். இதன் மூலம் மலிவான விலைக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்கு ப.சிதம்பரம் மறைமுகமாக உதவி இருக்கிறார்.
வியாழன், 30 ஜூன், 2011
P.M.About the rights of Eezham Thamizhs: "தமிழர்களுக்கு உரிமை தர இலங்கையை வலியுறுத்துகிறோம்: பிரதமர்
இவ்வாறு சொல்வது பொய் என இராசபக்சே கூறுவதால் இருவரும் இணைந்து ஒன்றாக அறிக்கை வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் வண்டவாளம் தண்டவாளம் ஏறுவதைப் புரிந்து கொள்ள இயலும். இலங்கையைச் சிங்களமாக்குவதே இரு தரப்பின் அடாவடி முயற்சிகள். அதற்காக எந்த வஞ்சகமும் செய்யத் தயங்காதவர்கள் என்பதை அவர்களின் இனப்படுகொலைச் செயல்களே உணர்த்துகின்றன. இவர்களை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் மக்கள்தாம் ஏமாளிகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
"தமிழர்களுக்கு உரிமை தர இலங்கையை நிர்பந்திக்கிறோம்': பிரதமர்
First Published : 30 Jun 2011 03:02:16 AM IST
Last Updated :
புது தில்லி, ஜூன் 29: இலங்கையில் தமிழர்களுக்குச் சம உரிமை வழங்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.தில்லையில் ஐந்து பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு புதன்கிழமை காலையில் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கைத் தமிழர்களின் குறைகள் நியாயமானவை, அவை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என இந்திய அரசு இலங்கை அரசை நிர்பந்தித்து வருகிறது.இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கடந்த 14-ம் தேதி விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. இலங்கை தமிழர் பிரச்சனையை ஜெயலலிதா நன்றாக அறிந்தவர். இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் அவர் மிக அக்கறை கொண்டு மத்திய அரசுக்கு அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறார்.இந்திய - வங்க தேச நாடுகளுக்கு இடையே நல்லுறவு நிலவி வருகிறது. அதே சமயம், இந்தியாவுக்கு எதிரான செயல்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. வங்க தேசத்துக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அடுத்த வாரம் வங்க தேசம் செல்ல இருக்கிறார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் விவாதிக்க உள்ளார் என்றார் பிரதமர்.
செவ்வாய், 14 ஜூன், 2011
Jaya instists to take action against singhalam : இலங்கைப் போர்க்குற்றம் மீது நடவடிக்கை தேவை: மன்மோகன் சிங்கிடம் செயலலிதா வலியுறுத்தல்
துடிப்பான நடவடிக்கைக்குப் பாராட்டுகள். ஆனால், அரசியல் நெறிப்படியான சமஉரிமை என்பது தமிழ் ஈழம்தான் என்பதை மறக்கக் கூடாது. இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டாலும் சிங்களத்திற்கு ஆதரவான நிலை எடுக்காமல் இருந்தாலே போதும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இலங்கை போர்க்குற்றம் மீது நடவடிக்கை தேவை: மன்மோகன் சிங்கிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்
First Published : 14 Jun 2011 02:09:38 PM IST
Last Updated :
புதுதில்லி, ஜூன் 14- இலங்கையின் போர்க்குற்றம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தினார்.இன்று பிரதமரை நேரில் சந்தித்தபோது, அவரிடம் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய கோப்பு ஒன்றை ஜெயலலிதா அளித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கை போரின் கடைசி நேரத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த மோதல் குறித்து ஊடகங்கள் சுதந்திரமாக செய்திகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படவில்லை.பரவலான குண்டுவீச்சு மூலம் பொதுமக்கள் படுகொலை, மருத்துவமனை மற்றும் நிவாரண முகாம்கள் மீது தாக்குதல், மனிதாபிமான உதவிகள் மறுப்பு, மனித உரிமை மீறல்கள், ஊடகம் மற்றும் அரசுக்கு எதிரான விமர்சகர்கள் மீது தாக்குதல் ஆகியவை குறித்து ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இத்தகைய போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க, இப்பிரச்னையை இந்திய அரசு ஐநா சபையிடம் கொண்டுச் செல்ல வேண்டும்.இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் நிர்வாகத்தில் அவர்கள் முழுமையாக இடம்பெற வழி ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து, நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.இலங்கையில், தமிழர்கள் நீண்டகாலமாக இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். அரசியல் சட்டத்திருத்தம் மூலம் அவர்களுக்கு சமவுரிமை வழங்குவதை இலங்கை அரசு தவிர்த்து வருகிறது. சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல் ரீதியான சமவுரிமை வழங்க வேண்டும். முகாம்களில் உள்ள தமிழர்கள் முழுமையாக அவர்களது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தப்படும் வரை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா பிரதமரிடம் அளித்துள்ள கோப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
By பழனிசாமி T
6/14/2011 2:55:00 PM
6/14/2011 2:55:00 PM
By Gangadharan
6/14/2011 2:27:00 PM
6/14/2011 2:27:00 PM
By Ravi
6/14/2011 2:20:00 PM
6/14/2011 2:20:00 PM
By KOOPU
6/14/2011 2:18:00 PM
6/14/2011 2:18:00 PM
திங்கள், 23 மே, 2011
corrupted persons will be punished - sonia: ஊழல் புரிந்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள்: சோனியா
ஒருவன், தான் குடிக்க மாட்டேன், கொள்ளை அடிக்க மாட்டேன், கொலை செய்ய மாட்டேன், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட மாட்டேன் என்றெல்லாம் சொல்லி விட்டு ஒரே ஒரு கெட்ட பழக்கம் மட்டும்தான் உண்டு என்றானாம். இவவ்ளவு நல்ல பழக்கங்கள் இருக்கும் பொழுது ஒரே ஒரு கெட்ட பழக்கம்தானே இருக்கிறது. என்று நினைத்தால் அந்த ஒரே ஒரு கெட்ட பழக்கம் என்பது பொய பேசுவதுதான். அதைப்போல் சோனியா பேச்சு நன்றாகத்தான் உள்ளது. ஆனால், பொய்மையே தொழில் என்றான பின்பு சொல்லுக்கும் செயலுக்குமான வேறுபாட்டை உடையவர்கள் குறித்து மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வில்லையே! ஒருவேளை கலைஞரை மிரட்டுவதற்காக உத்தம வேடம் போடுகிறாரா? காங்கிரசு என்றாலே ஊழல்! ஊழல் என்றாலே காங்கிரசு! அனைவரும் அறிந்த உண்மை என்பதை அவர் அறியட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ஊழல் புரிந்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள்: சோனியா
First Published : 22 May 2011 09:25:57 PM IST
Last Updated :
புதுதில்லி, மே 22: ஊழல் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார் சோனியா. இன்று மாலை, ஐமுகூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, புதுதில்லியில் நிகழ்ச்சி ஒன்றில், ''ஐமுகூட்டணி அரசு: நாட்டு மக்களுக்கான அறிக்கை" என்பதை வெளியிட்டுப் பேரும்போது, சோனியா இதைத் தெரிவித்தார்.ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல், செயலளவிலும் கண்டிப்புடன் எடுக்கப்படும் என்றார் அவர்.மேலும், * நேர்மை, நாணயம், வெளிப்படைத்தன்மை, கடமை, பொறுப்பு - இவையே எங்கள் அரசாட்சியின் முக்கிய அம்சங்கள்...* பொறுப்புள்ள, செயல்தன்மையுள்ள அரசையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின..* மாபெரும் பொருளாதார வளர்ச்சி, வாங்கும் சக்திக்கேற்ப அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருத்தல் இவற்றுக்கே ஐமுகூ அரசு முன்னுரிமை அளிக்கிறது- என்று ஐமுகூட்டணித் தலைவர் சோனியா பேசினார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், * ஐமுகூ அரசு 7 வருடங்கள் நிலையான ஆட்சியைக் கொடுத்துள்ளது; சமூக முன்னேற்றம், மத நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்துள்ளது...* உணவு பெறும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டம் இடப்பட்டுள்ளது...* பயங்கரவாதம் மிகப் பெரிய சவால்; பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசியம்- என்று கருத்து தெரிவித்தார்.
கருத்துகள்
By நாடோடி
5/22/2011 10:51:00 PM
5/22/2011 10:51:00 PM
By rajcey
5/22/2011 10:43:00 PM
5/22/2011 10:43:00 PM
By பாமரன்
5/22/2011 10:11:00 PM
5/22/2011 10:11:00 PM
By பி.டி.முருகன் திருச்சி
5/22/2011 9:57:00 PM
5/22/2011 9:57:00 PM
By S Venkataswamy
5/22/2011 9:48:00 PM
5/22/2011 9:48:00 PM
By rishi
5/22/2011 9:32:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *5/22/2011 9:32:00 PM
மன்மோகன் சிங், சோனியா காந்தி உறுதி
First Published : 23 May 2011 02:40:33 AM IST
Last Updated :
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் தங்கள் ஆட்சி தொடர்பான அறிக்கையை வெளியிடும் பிரதமர
புது தில்லி, மே 22: ஊழல் செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தெரிவித்தனர். ÷ஊழலை ஒழிக்க வேண்டுமென மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ÷மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் முக்கியத் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ÷இதில் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகிய இருவரின் பேச்சும் ஊழல் ஒழிப்பை மையமாக வைத்தே இருந்தது. மத்திய அரசு மீது சமீப காலமாக அடுக்கடுக்காக எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை குறைக்க வேண்டுமென்ற நோக்கில் அவர்களது பேச்சு அமைந்திருந்தது. ÷"ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். இது வெறும் வாய் வார்த்தையாக இருக்காது என்று நாட்டு மக்களுக்கு உறுதி கூறுகிறேன். எதிர்காலத்தில் எவரும் எவ்வித குற்றச்சாட்டும் கூற முடியாத அளவுக்கு அரசு சிறப்பாக செயல்படும்' என்றார் சோனியா காந்தி. "மத்திய அரசு தவறுகளைத் திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. யார் தவறு செய்திருந்தாலும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள். முன்பு எழுந்தது போன்ற குற்றச்சாட்டுகள் அரசு மீது இனி எழாது. அரசு நிர்வாகம் சிறப்பானதாகவும், வெளிப்படைத்தன்மை உடையதாகவும் இருக்கும்' என்று மன்மோகன் சிங் பேசினார். ÷இப்போதைய பொருளாதார சூழ்நிலை, வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சி, கல்வி, அண்டை நாடுகளுடனான உறவு, உள்நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், ரயில்வே, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
புதன், 27 ஏப்ரல், 2011
India will save in war crimes accusation:
பொதுவாக மக்கள் கருத்தின் வினாக்கள் சரியாக இருக்கும். ஆனால், இன்றைய வினா அவ்வாறு அமையவில்லை. ஆபத்தில் காத்ததால் என்பதை விட, ஏவியதே இந்தியா என்பதால் அல்லது துணை நின்றதால் என இருந்திருக்க வேண்டும். கூட்டுக் கொலையாளி தான் மாட்டாமல் இருக்கத் தன்னைக் காப்பாற்றும் என்னும் நம்பிக்கை சிங்களத்திற்கு வருவது இயற்கைதான்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ஐநா தீர்மானம் வரும்போது மன்மோகன் காப்பாற்றுவார் என்ற இலங்கையின் நம்பிக்கை...
First Published : 26 Apr 2011 12:00:00 AM IST
Last Updated :
தற்போதைய முடிவுகள்
நட்பு நாடு என்பதால் -- 23.79%
ஆபத்தில் காத்ததால் -- 56.27%
கருத்து இல்லை -- 19.9%
ஆபத்தில் காத்ததால் -- 56.27%
கருத்து இல்லை -- 19.9%
செவ்வாய், 26 ஏப்ரல், 2011
war crimes and genocide - India will save singhala govt. :போர்க்குற்றவாளி என்று கண்டிக்கப்படும் சூழல்: மன்மோகன் காப்பாற்றுவார் -இலங்கை நம்பிக்கை
தாயால் எங்கள் இனம் அழிகிறது. மகனால் உங்கள் இனம்அழிகிறது. எனச் சீக்கியர்கள் தமிழர்கள்பால பரிவும் பற்றும் உள்ளவரகளாக உள்ளார்கள். ஆனால், மன்மோகன் சிங், பதவி தந்த சோனியாவின் கையாளாக உள்ளமையால் தமிழினப் படுகொலைக்குத் துணை நிற்கிறார். எனவேதான் இது வரை சிங்களத்திற்குத் துணை நின்றார். இந்தியாவும் கூட்டுக் கொலையாளி என்பதால் சிங்களத்தைக் காப்பாற்றும் என்னும் நம்பிக்கை சிங்களத்திற்கு உண்டு. அதனை வெளிப்படையாகச் சொல்லாமல் இவ்வாறு பேசியுள்ளார் சிங்கள அதிகாரி. எவ்வாறு இருப்பினும் காலம் கடந்ததேனும் இனப்படு கொலையாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இதன் மூலம் உலகில் வேறு எங்கும் இனி இனப்படுகொலை நடப்பது தடுக்கப்படும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
போர்க்குற்றவாளி என்று கண்டிக்கப்படும் சூழல்: மன்மோகன் காப்பாற்றுவார் -இலங்கை நம்பிக்கை
First Published : 26 Apr 2011 06:10:05 AM IST
Last Updated :
கொழும்பு,ஏப்.25: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அத்துமீறி நடந்துகொண்டதற்காக போர்க்குற்றவாளி என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலால் தீர்மானிக்கப்படும் நிலை வந்தால், இந்தியா - அதிலும் குறிப்பாக - பிரதமர் மன்மோகன் சிங் தங்களைக் காப்பாற்றிவிடுவார் என்று இலங்கை அரசு நம்பிக்கையோடு இருக்கிறது. இலங்கை அரசின் மூத்த அதிகாரியொருவர் தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையோடு இதை கொழும்பில் திங்கள்கிழமை தெரிவித்தார். "இலங்கைக்கு சர்வதேச அரங்கில் நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் எல்லாம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உதவிக்கு வந்திருக்கிறார். இலங்கையுடனான உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மற்றவர்களைவிட அவர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகளையும் ஜெனீவா உடன்பாட்டு கோட்பாடுகளையும் இலங்கை அரசு அப்பட்டமாக மீறிவிட்டது, எனவே அதைக் கண்டிக்க வேண்டும் என்று ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் 2009-ல் முயற்சி நடந்தபோது அதை முறியடித்துக் காப்பாற்றியது இந்தியாதான். இலங்கையைக் கடுமையாகக் கண்டிக்கும் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து இந்தியா பேசியதால் அது கைவிடப்பட்டது. பொருளாதார நிலைமை காரணமாக வெளிநாட்டு வர்த்தகப் பற்று-வரவில் பற்றாக்குறையால் இலங்கை அரசு தத்தளித்துக் கொண்டிருந்தபோது மேற்கொண்டு பண உதவி அளிக்க பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்.) இழுத்தடித்துக் கொண்டிருந்தபோது இந்தியாதான் தலையிட்டு இலங்கைக்குக் கடன் வழங்குங்கள் என்று வலுவாகப் பரிந்துரைத்து வாங்கித் தந்தது. சமீபத்தில் இந்தியப் பெருங்கடல் டுனா கமிஷன் கூட்டத்தில் பிரிட்டனுக்குச் சொந்தமான கடல்பரப்பில் சர்வதேச சட்டங்களுக்கு விரோதமாக மீன் பிடித்ததற்காகக் கடுமையாகக் கண்டிக்கப்படவிருந்த தருணத்திலும் இந்தியாதான் தலையிட்டு இலங்கைக்கு ஆதரவாகப்பேசி மீட்டது. சீனா, ரஷியாவை நம்ப முடியாது: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவும் ரஷியாவும் நிரந்தர உறுப்பு நாடுகள். வீட்டோ எனப்படும் ரத்து அதிகாரம் உள்ள சக்திவாய்ந்த நாடுகள். ஆனால் மனித உரிமை மீறல் புகார்கள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் வரும்போது இலங்கைக்கு ஆதரவாக அந்த இரண்டும் செயல்படும் என்று நம்ப முடியாது. இந்தியா இப்போது தாற்காலிக உறுப்பு நாடாக சுழற்சி அடிப்படையில் இடம் பெற்றிருக்கிறது. ரத்து அதிகாரம் இல்லாவிட்டாலும் அது இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஆதரிக்காமல் ஒதுங்கியிருந்தாலே இலங்கை காப்பாற்றப்படும். ஈரான், சூடான், லிபியா ஆகிய நாடுகளையும் இதே போல மனித உரிமை மீறலுக்காகக் கண்டிக்கும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டபோது சீனாவும் ரஷியாவும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்துவிட்டன. எங்கள் விவகாரத்திலும் அப்படிச் செய்யக்கூடும். ஆனால் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் எங்களைக் கண்டிக்கத் தீவிரம் காட்டுகின்றன. அமெரிக்கா கூட தனது நிலையை இறுதியில் மாற்றிக்கொள்ளலாம். ஐரோப்பிய நாடுகளால்தான் பிரச்னை. இந்த நிலையில் இந்தியாவின் ஆதரவு எங்களைக் காப்பாற்றும். மனித உரிமைகள் கமிஷன் எங்களைக் குற்றஞ்சாட்டிய உடனேயே இலங்கை அரசின் நிலையை விளக்க வெளிநாட்டுத் தூதர்களை அழைத்து கூட்டம் நடத்தினோம். சீனத் தூதர் அதில் பங்கேற்கவில்லை. காரணம் கேட்டபோது தங்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று பதில் கிடைத்தது. நாங்கள் ஃபேக்ஸ் மூலம் அழைப்பை அனுப்பிவிட்டு தொலைபேசி மூலமும் அது வந்து சேர்ந்ததை உறுதி செய்துகொண்டோம். ஏதோ காரணத்துக்காக சீனா வரவில்லை. அத்துடன் அந்த அறிக்கை குறித்துகூட அது கருத்து தெரிவிக்கவில்லை. எனவே அது எங்களை ஆதரிக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. ரஷியாவைப்பற்றியும் உறுதியாக எதையும் கூற முடியவில்லை. ரஷியாவும் சீனாவும் எங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ளாத நிலையில், இந்தியா எங்களை ஆதரித்தால் நாங்கள் மீண்டுவிடுவோம்' என்று அந்த இலங்கை உயர் அதிகாரி தெரிவித்தார்.
வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
P.M.about tamilnadu election results; நான் ஜோதிடர் அல்ல: பிரதமர் மன்மோகன் சிங்
கேரளத்திலும் மே.வங்கத்திலும் ஒளிமயமான வெற்றியை மட்டும் எந்தச் சோதிடத்தின் அடிப்படையில் கூறினாராம். அப்படியானால் தமிழகத் தேர்தல் முடிவுகள் தோல்வியைத் தரும என்ற அச்சம் உள்ளது என்பது புரிகிறது. ஒரே சமயத்தில் இப்படியா ௨ இல் வெற்றி ஒன்றில் சோதிடம் தெரியாது
எனப் பொன்மொழி உதிர்ப்பது!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நான் ஜோதிடர் அல்ல: பிரதமர் மன்மோகன் சிங்
First Published : 17 Feb 2011 02:51:45 AM IST
Last Updated :
புதுதில்லி, பிப். 16: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுமா என்று கேட்டபோது, நான் ஜோதிடர் அல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கேரளம், அசாம் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புள்ளது என்றார் அவர். தில்லியில் தொலைக்காட்சி சேனல் செய்தி ஆசிரியர்களுக்கு புதன்கிழமை அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸýடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. திரிணமூல்- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய அளவில் பிரச்னை ஏதும் இல்லை. கேரளத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பிரகாசமான வாய்ப்புள்ளது என்றார். அசாமில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா என்று கேட்டபோது,அசாம் அரசு சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. உல்பா தீவிரவாதிகளுடன் அமைதிப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமான அம்சம் என்றார் பிரதமர்.
கருத்துகள்
By மூர்த்தி
2/17/2011 1:26:00 PM
2/17/2011 1:26:00 PM
By பி.டி.முருகன் திருச்சி
2/17/2011 8:52:00 AM
2/17/2011 8:52:00 AM
By புதுகை selva
2/17/2011 6:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *2/17/2011 6:14:00 AM
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)