coastal guard லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
coastal guard லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 நவம்பர், 2011

Central Government has betrayed Tamils​​: Vaiko charges : தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு


தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம்:
வைகோ குற்றச்சாட்டு

First Published : 27 Nov 2011 12:52:51 PM IST


சென்னை, நவ.27: கடலோரக் காவல்படையின் நடவடிக்கையின்மூலம் தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு செய்துவரும் துரோகம் வெளியில் தெரியவந்துள்ளது என மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தங்களுக்கு உரிமையுள்ள கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அனுபவித்து வருகின்ற மீன்பிடிக்கும் உரிமையின்படி தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போதெல்லாம், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்குவதும், ஆடைகளைப் பறித்து சித்ரவதை செய்து கடலில் வீசுவதும், சுட்டுக்கொல்வதும் வாடிக்கையாகி விட்டது.இதுவரை தமிழக மீனவர்கள் 600 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் இப்படி கொல்லப்பட்டதற்கு தமிழகத்திலே இருந்து பலத்த கண்டனம் எழுந்தும், இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசு கிஞ்சிற்றும் அதனை பொருட்படுத்தவில்லை. இப்போது குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்பதுபோல, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்தியாவின் கடலோரக் காவல்படை ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. தமிழக மீனவர்களை குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை மீனவர்கள் மீன் பிடிப்பதாகவும், இலங்கை தடை செய்த மீன் வலைகளைப் பயன்படுத்துவதாகவும் அபாண்டமான புகாரைச் சொல்லியுள்ளது.சர்வதேச கடல் எல்லையில் இருந்து நமது கடல்பகுதியின் ஐந்து கடல் மைல் தூரத்தை மீன் பிடி தடை மண்டலமாக தமிழ்நாடு அறிவிக்க வேண்டுமென்றும் இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோதும், சுட்டுக் கொல்லப்பட்டபோதும் ஒருமுறை கூட நம் மீனவர்களை பாதுகாக்க இந்திய கடலோர காவல்படை எந்த நடவடிக்கையும் எடுத்தது கிடையாது. பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் புகார் கொடுக்கச் சென்றபோதெல்லம் அவர்களை அவமானப்படுத்தி அடித்து விரட்டியது.இதனுடைய பின்னணியை தமிழக மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். 2004 ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பிறகுதான், இலங்கை கடற்படையின் அட்டூழியம் அதிகமாகியது.2004 செப்டம்பர் 16 ஆம் தேதி இலங்கைக்குச் சென்ற இந்திய கடற்படை தளபதி அருண்பிரகாஷ் தமிழக மீனவர்களுக்கு எதிராகவும், சிங்கள அரசுக்கு ஆதரவாகவும் விடுதலைப் புலிகளை கண்டனம் செய்தும், சிங்கள அரசின் விருந்தாளியாக கொழும்பில் கூறியதைக் கண்டித்து செப்டம்பர் 18 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து, கடிதம் மூலமாகவே தெரிவித்தேன்.தொடர்ந்து இந்திய கடற்படை தளபதிகள் இலங்கைக்குச் சென்று தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திய இனக்கொலை யுத்தத்திற்கு உதவியாக ஆலோசனை வழங்கி வந்தனர்.2007 ஆம் ஆண்டில் இந்திய - இலங்கை கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு நேரடியாகவே தமிழின அழிப்பு யுத்தத்திற்கு இலங்கைக்கு பலவகையிலும் உதவி செய்தனர். விடுதலைப் புலிகளோடு நடத்திய யுத்தத்தில் இந்திய கடற்படை உதவியினால்தான் நாங்கள் வெற்றி பெற முடிந்தது என்றும், விடுதலைப் புலிகளின் கப்பல்களை மூழ்கடித்தோம் என்றும் இலங்கை கடற்படை துணைத் தளபதி தம்பட்டம் அடித்தான். இந்திய கடல் எல்லையில் இலங்கைக் கடற்படையினர் கடலுக்குள் கண்ணி வெடிகளை வைக்க இந்திய அரசு அனுமதித்தது என்பது உலகத்தில் எந்த நாடும் தன்னுடைய இறையாண்மையை காவு கொடுக்க முன்வராத அயோக்கியத்தனமான செயலாகும்.இந்திய கடற்படை இலங்கைக்கு இப்படி உதவி வருவதனால்தான் கடலோர காவல்படை இவ்வளவு மமதையோடு தமிழக மீனவர்களுக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் பிரமாண வாக்குமூலத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் மத்திய அரசு இலங்கையில் சிங்களவர்  நடத்திய ஈழத்தமிழர் படுகொலை யுத்ததில் உதவி செய்து பங்கேற்ற துரோகத்தின் தொடர்கதையாகத்தான் கடலோர காவல்படை இப்பொழுது செயல்படுகிறது. மத்திய அரசினுடைய போக்கைத்தான் அது பிரதிபலிக்கிறது. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்ற பழமொழிக்கேற்ப தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செய்துவரும் துரோகம் இதன்மூலம் மேலும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதனால்தான் இந்திய கடலோர காவல்படை சிங்கள அரசின் கூலிப் படையாக செயல்படுகிறது.ஏற்கனவே வேல்பாய்ந்த தமிழர்களின் உள்ளத்தில் சூட்டுக்கோலைத் திணிக்கும் வகையில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. கடலோர காவல்படை தன் பிரமாண வாக்குமூலத்தை திரும்பப் பெற ஆணையிடுவதோடு, கண்டனமும் தெரிவிக்க மத்திய அரசு முன்வரவேண்டும். இல்லையேல் தாய்த் தமிழகத்திலுள்ள தமிழர்கள் உள்ளத்தில் மேலும் மேலும் வேதனையையும் வெறுப்பையும், இந்திய அரசின் மீது நம்பிக்கையின்மையையும் விதைக்கின்ற குற்றச் சாட்டுக்கும் அதன் எதிர்கால விளைவுகளுக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதான் பொறுப்பாகும் என எச்சரிக்கிறேன்.

சனி, 26 நவம்பர், 2011

கடலோர காவல் படைக்குக் கண்டனம் தெரிவித்து முதல்வர் கடிதம்


பாராட்டுகள். பாராட்டுகள். மத்திய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றி்க் கொள்ளா விட்டால் தமிழக அரசு மீனவர் நலன் கருதி நெய்தல்நிலக் காவற்படை ஒன்றை அமைத்து  மீனவர்கள் உயிரையும் நலனையும் காக்கும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். துணிவுள்ளவர் என்னும் பெயர் பெற்றுள்ள
முதல்வர் துணிந்து அறிவித்து அவ்வாறே செய்ய வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
 

இது நடைமுறைக்கு ஒத்துவராத, விபரீத விளைவை ஏற்படுத்தக் கூடிய, மூர்க்கத்தனமான நிலைப்பாடு ஆகும். பாக் நீரிணைப் பகுதியில் எல்லை வரம்பு இல்லாமல் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து...

சனி, 15 அக்டோபர், 2011

கடலோரக் காவல்படை மூலம் மீனவர்களைப் பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு

கடலோர காவல்படை மூலம் மீனவர்களைப் பாதுகாக்க 
நீதிமன்றம் உத்தரவு

First Published : 15 Oct 2011 02:56:01 AM IST


மதுரை, அக். 14: தமிழக மீனவர்களை பாதுகாக்க கடலோரக் காவல்படை மூலம் 10 நாளில் நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.  இதுதொடர்பாக, வழக்குரைஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி வந்து தாக்கி வருகின்றனர். இதனால், மீனவர்கள் உயிரிழப்பு, ஊடல் ஊனமடைவது, மீன் வலைகளை அறுப்பது, மீன்களை பறித்துச் செல்வது, படகுகளை சேதப்படுத்துவதும் அடிக்கடி நடக்கின்றன.  இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.  இந்திய முப்படையினரும் மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இலங்கையுடன் செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  இவைதவிர மீனவர்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்கவேண்டும் என வழக்குரைஞர்கள் வாஞ்சிநாதன், வி.கண்ணன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என். பாஷா, எம். வேணுகோபாலன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அளித்த இடைக்கால உத்தரவில், இலங்கை-இந்திய கடல் எல்லை குறுகிய பரப்பளவில் உள்ளது.  இதில், தமிழக மீனவர்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில், இந்தியக் கடல் எல்லையில் கடற்படைக் கப்பல்களையும், தமிழக கடலோர காவல்படை படகுகளையும் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளைச் செய்ய 10 நாளில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.  மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்களினால், இந்திய கடல் எல்லைக்குள்ளேயே மீனவர்கள் மீன்பிடிக்க இயலவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளனர்.  இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளியுறவுத்துறை செயலர், மத்திய அரசு பாதுகாப்புத் துறை செயலரும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

புதன், 29 டிசம்பர், 2010

coastal guard: கடலோரக் காவல் படை

என்ன நினைத்துக கொண்டுள்ளார் தா.பா? தமிழக  மக்களைக் காப்பற்றவா கடலோரக் காவல்படை உள்ளது? தமிழக மீனவர்களைச் சிங்களப் படை எந்தத் தொந்தரவுமின்றிக் கொன்றொழிக்கப் பாதுகாப்பு தருவதற்குத்தானே உள்ளது! அவ்வாறிருக்க அதன் மீது குற்றம் சுமத்தலாமா? 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மீட்புப் பணியில் ஈடுபடாத கடலோரக் காவல் படை: தா. பாண்டியன் புகார்

First Published : 28 Dec 2010 03:48:25 AM IST

Last Updated : 28 Dec 2010 05:41:50 AM IST

சென்னை, டிச. 27: ராமேஸ்வரம் பகுதியில் நடந்த படகு விபத்தில் சிக்கியவர்களை மீட்க கடலோரக் காவல் படை பயன்படுத்தப்படவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:  ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள் அருகேயுள்ள தீவுக்குச் சுற்றுலா சென்றபோது, படகு கவிழ்ந்து 16 பேர் வரை உயிரிழந்ததாகத் தெரிகிறது. இதில் மீட்புப் பணிகளில் கடலோர காவல் படை பயன்படுத்தப்படவில்லை. இது மிகவும் வருத்தத்துக்குரியது. பொதுமக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கட்சியின் பகுதி செயலாளர் முபாரக் தலைமையில் தனிப் படகில் சென்று 5 பேரைக் காப்பாற்றியுள்ளனர்.  கடலில் முழ்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு வந்தவுடன், கரையில் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு ஏற்பாடு செய்யப்படவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய  நிவாரணம் வழங்கவும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தா. பாண்டியன் கூறியுள்ளார்.