புதன், 10 அக்டோபர், 2012

மாணவன் பலி: பத்மா சேசாத்ரி பள்ளி நிருவாகிகள் மீது பிணையில் வர முடியா வழக்கு

நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலி: பத்மா சேசாத்ரி பள்ளி நிருவாகிகள் மீது  பிணையில்  வர முடியாத வகையில் வழக்கு
நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலி: பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகள் மீது ஜாமீனில் வர முடியாத வகையில் வழக்கு
சென்னை, அக். 10-

சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி மாணவன் ரஞ்சன். பயிற்சியின்போது நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானான். இதுபற்றி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீச்சல் பயிற்சியாளர், பள்ளி நிர்வாகி ஷீலா ராஜேந்திரன் உள்பட 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய 304(ஏ) பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வக்கீல்கள் கார்த்திக் ராஜா, புகழேந்தி மற்றும் வாராஹி ஆகியோர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில், பத்மா சேஷாத்ரி பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தை உடனடியாக மூடவேண்டும். சம்பவத்துக்கு காரணமான பள்ளி நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 304(2) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். உயர்மட்ட கமிட்டி அமைத்து பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். இன்று வழக்கு விசாரணையின்போது இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இச்சம்பவம் தொடர்பாக 105 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். பள்ளி துணை முதல்வர் ஷீலா ராஜேந்திரன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். நீச்சல் குளம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறவில்லை. நீச்சல் குளத்தில் இருக்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை.

நீச்சல் குளம் கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ.விடம் திட்ட அனுமதி பெறவில்லை. எனவே இந்த வழக்கில் சட்டப்பிரிகளில் மாற்றம் செய்ய கேட்டு சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்நோக்கம் இல்லாமல் மரணம் விளைவித்தல் 304(2) என்ற பிரிவுக்கு மாற்ற முடிவு செய்துள்ளோம். எனவே பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கேட்டு அவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக