திங்கள், 8 அக்டோபர், 2012

உலகப் போட்டியில் தங்கம் வெல்வேன்!"

சொல்கிறார்கள்


"ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்!"
வீள் வீச்சு வீராங்கனை மோகன லட்சுமி: எனக்கு விளையாட்டு பின்னணி எதுவும் இல்லை என்றாலும், விளையாட்டில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, நான் முதலில் ஹாக்கி விளையாட ஆரம்பித்தேன். ஐந்து ஆண்டுகள், பல போட்டிகளில் ஆடினேன்.ஒரு கட்டத்தில், ஹாக்கி போன்ற ஒரு டீம் ஆட்டத்தில், தனி நபர் திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்பில்லை என தோன்றியது. அப்போது தான், வாள் வீச்சு பயிற்சியாளர் நாக சுப்ரமணியத்தின் அறிமுகம் கிடைத்தது.இந்த விளையாட்டு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்பதால், ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தது.ஆனால், என் பயிற்சியாளர் அளித்த ஊக்கத்தால், இதில் என்னால், நிலைத்து நிற்க முடிகிறது. 2003ம் ஆண்டு முதல் வாள் வீச்சு விளையாட்டு பிரபலமாகி வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் இந்த விளையாட்டில் ஈடுபடுகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், இது ஒரு தனி நபர் விளையாட்டு, நம் ஊருக்கு புதிது என்பது தான்.இந்த விளையாட்டைப் பொறுத்தவரை, என் உயரம் பெரிய, "பிளஸ் பாயின்ட்!' வாள் வீச்சு கற்றுக் கொள்ள ஆரம்பித்து இரண்டே ஆண்டில், தேசிய சாம்பியன் ஆகியிருக்கிறேன். இதனால், தேசிய, சர்வ தேச அளவில், சாதனைகள் புரிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.வாள் வீச்சு விளையாட்டில், நாங்கள் பயன்படுத்தும் வாள், அடிப்பகுதி பருமனாகவும், மேல் பகுதி மெலிதாக கம்பி போலவும் இருக்கும். போட்டியின் போது, பாட்டரியால் இயங்கும் வண்ண விளக்கு, இந்த வாளுடன் இணைக்கப்பட்டிருக்கும், அடுத்தவர் உடம்பில் வாள் பட்டதும், விளக்கு எரியும். அதை வைத்து, தொட்டவருக்கு மதிப்பெண்கள் தரப்படும்.பாயில், சாபர், எபி என, மூன்று வகையான வாள் வீச்சு உண்டு. ஒவ்வொரு வகைக்கும் ஏற்ப, விதிமுறை உண்டு. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இந்த பாரம்பரிய விளையாட்டு, இன்று உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது; ஒலிம்பிக்கிலும் இடம் பெற்று உள்ளது. என் லட்சியமே ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது தான்

1 கருத்து: