மாவீரர் திங்களில் இசை நிகழ்ச்சி நடத்த இளையராசாவுக்கு எதிர்ப்பு !
அதிர்வு 06 October, 2012 by adminஇளையராஜா நேற்று பகல் 11 மணிக்கு அங்கு சென்ற போது இலங்கை தமிழர்களும் சீமானின் நாம் தமிழர் கட்சியினரும் நூற்றுக்கணக்கில் திரண்டு இளையராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர். நவம்பர் மாதம் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாக கடை பிடிக்கப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் மகிழச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. எனவே இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விழாக் குழுவினர் இளையராஜாவை பாதுகாப்பாக அழைத்து சென்று அறைக்குள் தங்க வைத்தனர். நீண்ட நேரம் தமிழர்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக