செவ்வாய், 9 அக்டோபர், 2012

உலக அஞ்சல் நாள் -World postal day

வீடு தேடி வரும் நண்பன்:
 இன்று உலக அஞ்சல் நாள் 

உலக தபால் அமைப்பு 1874ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று இந்த அமைப்பில் இந்தியா உள்ளிட்ட 150 நாடுகள் உள்ளன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைய தலைமுறையினருக்கு தபால் துறையின் மகத்துவம் பற்றி தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் இன்றும் லட்சக்கணக்கான மக்களின் தினசரி வாழ்க்கையில் தபால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், தபால் துறையின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அக்., 9ம் தேதி உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தபால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
அன்று என்ன நடந்ததுநாம் இன்று இ-மெயில், இன்டர்நெட், பேக்ஸ், மொபைல் என்று நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். இதனால் தற்போது தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்கிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன் உலகில் அல்லது உள்நாட்டில் எதாவது ஒரு இடத்தில் இருப்பவர், தங்களது குடும்பத்தினை தொடர்பு கொள்ள தபால் துறையை சார்ந்திருந்தனர்.

பழங்ககாலத்தில் புறாவின் கால்களில் கடிதத்தை கட்டி தகவல்கள் அனுப்பப்பட்டன. மன்னர்கள் ஆட்சியின் போது ஒற்றர்கள் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டன. தபால் துறை உருவாக்கப்பட்ட பின், தகவல்கள் தபால் துறை மூலமாக உலக முழுவதும் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.
குறைந்து விட்டது:


காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிராமம், நகரம் வித்தியாசமின்றி இந்தியாவை, மக்களின் கலாசாரத்தை ஒருங்கிணைக்கும் பணியை தபால்துறை செய்து வருகிறது. பொது மக்களிடம் கடிதம் எழுதும் பழக்கம் இ-மெயில் வரவால் குறைந்திருந்தாலும், தபால் வழியாக அனுப்பப்படும் அலுவல் ரீதியான கடிதங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சேர்க்கும் பொறுப்பு இன்றும் தபால் துறை வசமே உள்ளது.

உலகில் முதலிடம்:

இந்திய தபால் துறை 1764ல் துவக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கு 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. 12 ஆயிரம் தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.

ஈடு தர முடியுமா!
ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால்,விரைவு தபால், இ- போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் மற்றும் சேமிப்பு கணக்குகள் போன்ற பணிகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது. தற்போது மொபைல் போன்களின் வரவால் தபால் துறைக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, தபால்துறையின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக