ஞாயிறு, 7 அக்டோபர், 2012

மருதாணியின் நன்மைகள்

மருதாணியின் நன்மைகள்

  தினமணி First Published : 23 September 2012 12:00 AM IST
மருதாணியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
இதன் இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும்.
மருதாணி செடியின் பட்டையை ஊற வைத்த நீரை அரை அவுன்ஸ் காலை, மாலை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
மருதாணி இலையை நன்றாக அரைத்து தலைவலிக்கு நெற்றியிலும், பொட்டுகளிலும் பற்றுப் போட்டுக்கொண்டால் தலைவலி உடனே நீங்கும்.
மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித் தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.
மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து கால்வெடிப்புக்கும், கால் எரிச்சலுக்கும் வெளிப்பூச்சாக உபயோகித்தால் நல்ல பலன் பெறலாம்.
மருதாணி பூக்களையும், இளந்தளிர்களையும் பறித்து சாறு பிழிந்து அரைத் தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய், மேக நோய் இரண்டும் மேலும் பரவாமல் தடுக்கும். இதை நீண்ட நாள்கள் பயன்படுத்தி வந்தால் உடல் பழைய நிலையை அடைவதோடு தோல் செழிப்பாகவும் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக