செவ்வாய், 9 அக்டோபர், 2012

கருநாடகத்துக்குப்படை அனுப்புக - இராமதாசு

கருநாடகத்துக்கு இராணுவத்தை அனுப்பி அணையைத் திறக்க வேண்டும்: இராமதாசு

First Published : 09 October 2012 12:38 PM IST
கர்நாடகத்துக்கு இராணுவத்தை அனுப்பி காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சம்பா சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்துவிடபட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு திடீரென நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தி விட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடகத்தின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து விட்டதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறுவை சாகுபடி பொய்த்துபோனது. அதன்பின் சம்பா பயிரையாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட போராட்டத்தின் பயனாக, காவிரியில் வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் திறந்து விடும்படி பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால் இதை மதித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்துவிட்ட நிலையில், இந்த பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்து தான் தமிழகத்திற்கு ஓரளவு தண்ணீர் திறந்து விடபட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை தண்ணீர் திறந்து விடபட்டால், சம்பா பயிரை எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்று காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடகம் நிறுத்தியிருப்பது நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் செயலாகும்.
கர்நாடக அணைகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டதால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடபடுவது நிறுத்தபட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார் கூறுவதை ஏற்க முடியாது.
கடந்த 4ஆம் தேதி நிலவரப்படி கர்நாடகத்தில் உள்ள அணைகளில் 65 டி.எம்.சி, கால்வாய் அமைப்புகளில் 60 டி.எம்.சி என மொத்தம் 125 டி.எம்.சி தண்ணீர் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இது கர்நாடகத்தின் தேவையைவிட அதிகமாகும். அதேநேரத்தில் மேட்டூர் அணையில் வெறும் 34 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் அடுத்த இரு வாரங்களுக்கு கூட போதுமானதல்ல என்ற நிலையில், தமிழக உழவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக, கர்நாடகமே தானாக முன்வந்து தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், குறுகிய அரசியல் லாபங்களுக்காக கர்நாடக அரசியல் கட்சிகள் அங்குள்ள மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, அவர்களை தமிழகத்திற்கு எதிராக போராட வைத்துள்ளனர்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதை பிரதமரும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்த ஒரு சில மணி நேரங்களிலேயே கிஷ்ணராஜ சாகர் அணையை கர்நாடக அரசு மூடியிருப்பது பிரதமரையும், உச்சநீதிமன்றத்தையும் மட்டுமின்றி, அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும். இத்தகைய போக்குகள் தொடர்ந்தால் அவை இந்தியாவின் ஒருமைப்பாட்டையே கேள்விக்குறியாக்கிவிடும். எனவே, அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தையும் அவமதித்துவிட்ட கர்நாடகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அங்கு காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
அணைகளின் பாதுகாப்புக்காக இராணுவத்தை நிறுத்தி, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இப்பிரச்சினையில் தமிழக அரசின் அணுகுமுறை சரியானதல்ல.
கர்நாடகத்திலுள்ள அனைத்துக்கட்சி தலைவர்களும் ஒரே அணியில் திரண்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. கர்நாடக அரசு இதுவரை மொத்தம் 3 முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ அதன் மனம்போன போக்கில் செயல்பட்டு வருகிறது.
இதுவே தமிழகத்தின் பலவீனமாக பார்க்கப்படும். ஒரு கையால் ஓசை எழுப்ப முடீயாது. ஊர் கூடினால் தான் தேரை இழுக்க முடியும் என்பதை உணர்ந்து இப்பிரச்சினையில் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்டவேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

+++++++++++++++++++++++
கருநாடகத்துக்கு இராணுவத்தை அனுப்பி க் காவிரியில் தண்ணீரை த்திறக்க வேண்டும்: மரு.இராமதாசு
கர்நாடகத்துக்கு ராணுவத்தை அனுப்பி காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
சென்னை, அக். 9-

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சம்பா சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு திடீரென நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தி விட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடகத்தின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடக அணைகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டதால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுவதை ஏற்க முடியாது.

கடந்த 4-ஆம் தேதி நிலவரப்படி கர்நாடகத்தில் உள்ள அணைகளில் 65 டி.எம்.சி, கால்வாய் அமைப்புகளில் 60 டி.எம்.சி. என மொத்தம் 125 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டிருக்கிறது. இது கர்நாடகத்தின் தேவையைவிட அதிகமாகும்.

அதே நேரத்தில் மேட்டூர் அணையில் வெறும் 34 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் அடுத்த இரு வாரங்களுக்குகூட போதுமானதல்ல என்ற நிலையில், தமிழக உழவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக, கர்நாடகமே தானாக முன்வந்து தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும்.

ஆனால், குறுகிய அரசியல் லாபங்களுக்காக கர்நாடக அரசியல் கட்சிகள் அங்குள்ள மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, அவர்களை தமிழகத்திற்கு எதிராக போராட வைத்துள்ளனர். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதை பிரதமரும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்த ஒரு சில மணி நேரங்களிலேயே கிருஷ்ணராஜ சாகர் அணையை கர்நாடக அரசு மூடியிருப்பது பிரதமரையும், உச்சநீதிமன்றத்தையும் மட்டுமின்றி, அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும்.

இத்தகைய போக்குகள் தொடர்ந்தால் அவை இந்தியாவின் ஒருமைப்பாட்டையே கேள்விக்குறியாக்கிவிடும். எனவே, அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தையும் அவமதித்துவிட்ட கர்நாடகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அங்கு காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.

அணைகளின் பாதுகாப்புக்காக இராணுவத்தை நிறுத்தி, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்திலுள்ள அனைத்துக்கட்சி தலைவர்களும் ஒரே அணியில் திரண்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

கர்நாடக அரசு இதுவரை மொத்தம் 3 முறை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ அதன் மனம்போன போக்கில் செயல்பட்டு வருகிறது. இதுவே தமிழகத்தின் பலவீனமாக பார்க்கப்படும்.

ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது. ஊர் கூடினால்தான் தேரை இழுக்க முடியும் என்பதை உணர்ந்து இப்பிரச்சினையில் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக