mental health லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mental health லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 செப்டம்பர், 2012

அடிக்கடி அழுகை ப் பாதிப்பா?






சொல்கிறார்கள்
அடிக்கடி அழுகை ப் பாதிப்பா?  
மன நல மருத்துவர் ஹர்ஷ வர்தன்: உடலோ, மனமோ அழுத்தமான உணர்வுகளுக்கு ஆட்படும் போது, மூளை சந்திக்கும் நடவடிக்கைகளின் ஒரு எதிர்வினையே அழுகை. இந்த அழுத்த உணர்வுகள், சமூகம், கலாசாரம், வளர்ப்புச் சூழல் என, பல காரணங்களில் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். தன்னிச்சை செயல்பாடுகளை மேற்கொள்ளும் மூளை நரம்புகளே, அழுகைக்கு மருத்துவ ரீதியாகப் பொறுப்பு. வாய் உலர்வது, மூச்சு வாங்குவது, இதயத் துடிப்பு எகிறுவது போன்றவை பிற வெளிப்பாடுகள். இதுவும், தனி நபருக்கு ஏற்றவாறு வேறுபடும். அழுகை என்பது உயிரினங்களின் இயல்பு. அழுகையிலிருந்து தப்பிப்பது சிரமம். அதே சமயம், அளவுக்கு மீறிய அழுகையும் கூடாது. அப்படியான அழுகையை மன நல மருத்துவத்தில், "ஹிஸ்ட்ரியானிக் பர்சனாலிட்டி ட்ரை' என்கிறோம். அழுதால் ஆசுவாசமாகும் என்றால் சரி. ஒரு அழுகை, அடுத்த அழுகைக்கான காரணங்களை தந்தால், மருத்துவ ஆலோசனை அவர்களுக்கு அவசியம். ஆராய்ந்து, அலசிப் பார்த்து விழிப்புணர்வுடன் ஒவ்வொன்றையும் அணுகினால், எடுத்ததற்கெல்லாம் அழுகை முட்டாது. பொதுவாக அழுகையை நிறுத்துவது என்பது, அதன் ஆரம்ப நிலையில் மட்டுமே சாத்தியம். அதன் பின், அழுகையுடன் அவர்கள் பரஸ்பரம் பிணைந்து விடுவதால், பாதியில் விடுபட முடியாது. அப்படி வலிய நிறுத்தினால், அது தற்காலிக மானதாகவே இருக்கும். அழுகையை அடக்க முயற்சிப்பதை விட, தவிர்ப்பதற்கான முயற்சிகளே நடைமுறைக்குச் சாத்தியம். அழுகையை தூண்டும் மனிதர்கள், சூழல், செயல், இடம் போன்றவற்றை முன் கூட்டியே கணித்து, தவிர்க்க வேண்டும். மாறாக, அழுகை தான் பிரச்னைகளை தவிர்க்கவோ, தப்பிக்கவோ உதவும் என, மனதின் ஆழத்தில் தீவிர நம்பிக்கை வைத்திருந்தால், கண்டிப்பாக அவர்களுக்கு உளவியல் நிபுணரின் ஆலோசனை அவசியம்.

வெள்ளி, 19 மார்ச், 2010

தேவை-மனித நேயம்!



சாலையோரங்களில் திரியும் மனநலம் பாதித்தவர்களை மீட்டு நீதிமன்றம் மூலம் அவர்களை அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும் என உயர் நீதிமன்றம், கடந்த ஜூலையில் காவல்துறை டிஜிபிக்கு ஓர் உத்தரவை பிறப்பித்தது.மனநலம் பாதித்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி உத்தரவிட்டு அதனை 6 மாதத்துக்கு ஒரு முறை கண்காணிக்க வேண்டும் எனவும் கூறியது.திருநெல்வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாநகராட்சிப் பகுதிகளில் மனநலம் பாதித்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக சுற்றுலா இடங்களான ராமேசுவரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் மனநலம் பாதித்தவர்கள் உள்ளனர்.இவர்கள், சில நேரங்களில் ஆடையின்றி அலைவது பார்ப்பவர்களை வேதனையடையச் செய்கிறது. இவர்களில் மனநலம் பாதித்த பெண்களும் விதிவிலக்கு அல்ல.அரசு மருத்துவமனைகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் மனநலம் பாதித்தவர்கள் பலர் உள்ளனர். பெரும்பாலானவர்கள் சாலைகளில் செல்லும்போது வாகனங்கள் மோதி இறக்கின்றனர்.நோயால் ஒரே இடத்தில் பல நாள்கள் கிடந்து சிலர் இறக்கின்றனர். இவ்வாறு இறந்தவர்களை போலீஸôர் மீட்டு அனாதை பிணமாக அடக்கம் செய்கின்றனர்.மனநலம் பாதித்தவர்களில் சிலர் நீண்டதொலைவுக்கு நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லும்போது இரவில் வாகனங்கள் மோதி இறக்கின்றனர். அடுத்து சாலையில் வரும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சடலத்தில் ஏறிச் செல்வதால் கடைசியில் சடலம் சிதைந்து அடையாளம் தெரியாமல் ஆகிவிடுகிறது.மனநலம் பாதித்தவர்களை ஆரம்ப நிலையில் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தால் 90 சதம் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.இவர்களை யார், எப்படி மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பது என்பதுதான் இப்போது எழுந்துள்ள பிரச்னை.காவல்துறையால் மட்டும் இதனைச் செய்துவிட முடியாது. தொண்டு நிறுவனங்கள் முழுமையாக இதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.முதலில் இவர்களைப் பற்றி மாவட்டவாரியாக ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரம் தெரிய வரும்.இன்றைய சூழ்நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களே தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மனநோயாளிகளாகத் திரிவதை பார்க்க முடிகிறது.தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து மனநலம் பாதித்தவர்களை போலீஸôர் மீட்க வேண்டும். மீட்கப்பட்டவர்களை அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவர்கள் மூலம் மனநலப்பாதிப்பின் தன்மையைக் கண்டறிய வேண்டும்.குணப்படுத்தக்கூடிய தன்மையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மாவட்ட மருத்துவமனைகளில் தனி வார்டு ஒதுக்கி சிகிச்சை அளிக்கலாம்.ஏனைய மனநலம் பாதித்தவர்களை சென்னை கீழ்பாக்கம்அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்க்கலாம்.மனநோயாளிகளை கையாளுவது என்பது சற்று கடினம் என்றாலும் மனிதநேயத்துடன் இதைச் செய்ய வேண்டும்.மருத்துவமனைகளில் இதற்கென தனியாக ஊழியர்கள் நியமிக்க வேண்டும். வார்டுகள் தனியாக ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு அரசின் நிதிஒதுக்கீடு தேவை என்கின்றனர் மருத்துவர்கள்.மனநலம் பாதித்தவர்களை மீட்க நீதிமன்றம் அக்கறையுடன் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் அனைத்துத் துறைகளும் கைகோர்த்து இதனைச் செய்வதுதான் மனிதநேயச் செயலாகும்.
கருத்துக்கள்

நல்ல கருத்து. மனித நேயத்துடன் அரசுத் துறைகளும் தொண்டு அமைப்பினரும் முன் வந்து மன நோயர்கள் வாழ்விலும் அவர்கள் குடும்பத்திலும் மறு வாழ்வு உண்டாக்க தொண்டாற்ற வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/19/2010 4:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *