வியாழன், 6 அக்டோபர், 2011

Case against rajapakshe in australia ?: ஆசுதிரேலியாவிலும் இராசபட்சவுக்கு எதிராக வழக்கு தொடர முடிவு


ஆஸ்திரேலியாவிலும் ராஜபட்சவுக்கு எதிராக வழக்கு தொடர முடிவு

First Published : 06 Oct 2011 12:08:43 PM IST

Last Updated : 06 Oct 2011 01:50:40 PM IST

கொழும்பு, அக்.6: இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவிலும் வழக்கு தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் 28ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது.அதில் கலந்து கொள்ள வரும் ராஜபட்சவை குறி வைத்தே ஆஸ்திரேலியாவில் வழக்குத் தாக்கல் செய்வது குறித்து மனித உரிமை அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறும் காலப் பகுதியில் உலகத் தமிழர் பேரவையின் கூட்டம் ஒன்றை அந்நாட்டில் நடத்தவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதன் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் மற்றும் போர்க்குற்றங்களை உலகத் தலைவர்களுக்கு விளக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக