வியாழன், 6 அக்டோபர், 2011

ஒருநிமிடக் கதை

 
நல்ல கதை. தினமலர் இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளுக்கெதிரான கதைகளைத் தொடர்ந்து வெளியிட வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

நல்லதம்பியின் நல்ல நேரம் : "ஆச்சூ...' என்று தும்மிய மனைவியை நினைத்து மருவிக் கொண்டார் நல்லதம்பி. ""பஞ்., தலைவருக்கு போட்டியிட, வேட்பு மனுத்தாக்கல் செய்ய செல்லும்போதா இப்படி தும்முவே?'' இப்படி தொண்டை வரை வந்த கேள்வியை அப்படியே இரைப்பைக்குள் அமுக்கிக் கொண்டார். கேட்டால் அடுத்து கோபக்கார மனைவியிடம் இருந்து சரவெடி வெடிக்குமே. அங்கவஸ்திரத்தை ஸ்டைலாக போட்டபோது, அது தோளைத் தாண்டி கீழே விழுந்தது. இப்போது பதவியே நழுவிப் போனதாக கலங்கிப்போனார். இருந்தாலும் கடைசி நாள் என்பதால் வேறு வழியில்லையே.
வாசலை கடந்து வெளியே சுற்றும் முற்றும் பார்த்தார் அந்த ஜோதிடசிகாமணி. பூனை ஒன்று குறுக்கே ஓடியது. "ஆனது ஆகிவிட்டது. தலைக்கு மேல் போன பின் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன'- நினைத்தபடி வீராப்புடன் நடந்தார்.
அலுவலகத்திற்குள் நுழைந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய எழுதினார். அவ்வளவுதான்... பேனா நிப்பு "படக்'கென முறிந்தது. இனியும் மனுத்தாக்கல் செய்யணுமா? என்றது ஒரு மனம். "பதவி சுகம்... அந்த மனத்திற்கு என்ன தெரியும். எப்போதும் பூச்சாண்டி காட்டுவதே அதன் வேலையாக உள்ளது. இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது,' என அடுத்த பணியை தொடர்ந்தார்.
மனுத்தாக்கல் ஒருவழியாய் முடிந்தது. வீடு திரும்பினார். பிரசாரமும் முடிந்தது. ஓட்டு எண்ணிக்கையில் தெரிந்தது அவரது அதிர்ஷ்டம். வெற்றி பெற்று விட்டாராம். இனிஜோதிடத்தையே நம்பப் போவதில்லை,' என்று வீறுகொண்டே "விழி'த்தெழுந்தார் தூக்கத்தில் இருந்து.
-விக்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக