18 வருட அரசியல் போராட்டம் இரண்டே பக்கங்களில்…: வாக்காளர்களுக்கு வைகோ கடிதம்
பதியப்பட்ட பக்கல் Oct 5th, 2011 //போராட்டம் இரண்டே பக்கங்களில்…: வாக்காளர்களுக்கு வைகோ கடிதம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உள்ளாட்சித் தேர்தலையொட்டி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இக்கடிதம் குறித்து தனது உணர்வுகளை தொண்டர்களிடம் பகிர்ந்து கொண்ட வைகோ,
”மறுமலர்ச்சி திமுகவின் 18 வருட அரசியல் போராட்டத்தை இரண்டே பக்கங்களில் வாக்காளர்களுக்கு கொடுத்திருக்கிறோம். இதைப் படிக்கும் எந்தவொரு வாக்காளரும் தேர்தல் களத்தில் நம்மை அலச்சியப்படுத்திவிட முடியாது. அதனால் இந்த கடிதம் தமிழகத்தில் பட்டி தொட்டிகளில் இருந்து கிராமங்கள், நகரங்கள், பெரு நகரங்கள் என எங்கும் நிறைந்திருக்கும் வாக்காளர்களை சென்றடைய வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்த கடிதத்தைப் படிக்கும் உணர்வுள்ள தமிழர்கள் அத்தனை பேரும், நமக்கே வாக்களிப்பார்கள்” என்று தொண்டர்களை ஊக்கப்படுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக