வெள்ளி, 7 அக்டோபர், 2011

உ.வே.சா. புகழ் போற்றும் விழா


"உ.வே.சா. புகழ் போற்றும் விழா'

First Published : 04 Oct 2011 02:39:26 AM IST


இதில் கவிஞர் ந.வீ. சத்தியமூர்த்தி எழுதிய "ஒரு துளி கடல்' என்ற நூல் வெளியிடப்பட்டது. கணையாழி இலக்கிய இதழ் சார்பில் சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் எழுத
சிங்கப்பூர்,அக்.3: சிங்கப்பூரில் முதன்முறையாக தமிழ்ச் சான்றோர்களின் புகழ் போற்றும் விழா நடைபெற்றது.சிங்கப்பூர் கடற்கரைச்சாலை கவிமாலை அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்விழாவுடன் முதன்முறையாக தமிழ்ச் சான்றோர்களின் புகழ் போற்றும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது உ.வே.சாமிநாத அய்யர் புகழ் போற்றும் விழாவாக நடைபெற்றது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சுப. திண்ணப்பன் தலைமை வகித்தார். இவ்வாண்டிற்கான கணையாழி விருது மூத்த படைப்பாளர் சுதர்மனுக்கும், சிறந்த கவிதை நூலுக்கான பொற்பதக்க விருது தமிழாசிரியர் மு. தங்கராசு எழுதிய "இன்பத் திருநாடு' நூலுக்கும், சிறந்த இளங்கவிஞருக்கான விருது கவிஞர் பனசை நடராசனுக்கும் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழகத்தின் பொற்றாமரைக் கலை இலக்கிய அமைப்பின் தலைவர் இல. கணேசன்,எம்.ஏ.முஸ்தபா,நாகை தங்கராசு ஆகியோர் வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக