திங்கள், 3 அக்டோபர், 2011

boarding pass through cellphone: விமானப் பயணிகளுக்கு ஏறுதலிசைவு அலைபேசியில்: விரைவில் நடவடிக்கைக்கு

விரைவில் அமலுக்கு வருகிறது
விமான பயணிகளுக்கு செல்போனில் “போர்டிங் பாஸ்”: விரைவில் அமலுக்கு வருகிறது
புதுடெல்லி, அக். 3-  
 
தற்போது விமானப் பயணிகள் விமானத்தில் ஏறும் முன் லக்கேஜ் சோதனை, பாஸ்போர்ட் விசா சோதனை ஆகியவை முடிந்த பின்பு “போர்டிங் பாஸ்” வழங்கப்படுகிறது. இதற்கு விமான பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
 
உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய ஒரு மணி நேரமும், வெளிநாடுகளுக்கு செல்ல 3 மணி நேரத்துக்கு முன்பும் வந்து காத்திருக்க வேண்டி உள்ளது. இது பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதால் விரைவில் “போர்டிங் பாஸ்” வழங்குவது பற்றி மத்திய விமான போக்குவரத்து துறை ஆலோசித்து வருகிறது.  
 
பயணிகளின் செல்போன்கள் மற்றும் இ.மெயில் முகவரிகளுக்கு “போர்டிங் பாஸ்” களை முன்கூட்டியே அனுப்புவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ததும் உடனே அவர்களது செல்போன்களுக்கு போர்டிங் பாஸ்கள் அனுப்பப்பட்டுவிடும். அதை அவர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
 
இதன் மூலம் பயணத்துக்குப்பின் காத்திருக்கும் நேரம் குறையும். வழக்கமான லக்கேஜ் மற்றும் இதர சோதனைகள் மட்டும் விமான நிலையத்தில் நடைபெறும். போர்டிங் பாஸ் வழங்குவது தொடர்பாக ஏர் டிரான்ஸ்போர்ட் கம்யூனிகேசன்ஸ் நிறுவனமான “சிடா” மற்றும் விமான நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.  
 
இதுபோன்ற “மொபைல் போர்டிங் பாஸ்” வழங்கும் முறை ஏற்கனவே அமெரிக்கன் ஏர்லைன்ஸ், கான்டினென்டில் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் உள்பட பல சர்வதேச விமான நிறுவனங்களில் அமலில் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக